மருத்துவ நோபல் பரிசு 2023: கொரோனா தடுப்பூசிக்கு வழிவகுத்த இரு விஞ்ஞானிகளுக்கு அறிவிப்பு

கொரோனா தொற்றுநோயைத் தடுப்பதற்கான எம்ஆர்என்ஏ தடுப்பூசியைக் கண்டுபிடிக்க வழிவகுத்த இரண்டு விஞ்ஞானிகளுக்கு 2023ஆம் ஆண்டு மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

Nobel Prize 2023 in Medicine goes to Katalin Kariko, Drew Weissman for mRNA Covid vaccines sgb

2023ஆம் ஆண்டுக்கான முதல் நோபல் பரிசு அறிவிப்பு வெளியாகியுள்ளது.  திங்கட்கிழமை வெளியான அறிவிப்பின்படி, மருத்துவத்திற்கான நோபல் பரிசு ஹங்கேரியைச் சேர்ந்த கட்டாலின் கரிக்கோ மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த ட்ரூ வெய்ஸ்மேன் ஆகிய இருவருக்கும் கூட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவத்துறையைத் தொடர்ந்து, இன்று இயற்பியலுக்கான நோபல் பரிசும் அறிவிக்கப்பட இருக்கிறது. வேதியியலுக்கான நோபல் பரிசு நாளை அறிவிக்கப்படும். தொடர்ந்து இலக்கியத்துக்கான நோபல் பரிசு அக்டோபர் 5ஆம் தேதியும், அமைதிக்கான நோபல் பரிசு அக்டோபர் 6ஆம் தேதியும், பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அக்டோபர் 9ஆம் தேதியும் அறிவிக்கப்பட உள்ளன.

அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நார்வேயில் இருந்து அறிவிக்கப்படும். மற்ற துறைகளுக்கான அறிவிப்புகள் ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் இருந்து வெளியாகும்.

கனமழை காரணமாக கன்னியாகுமரியில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

கொரோனா தொற்றைத் தடுப்பதற்கான எம்ஆர்என்ஏ (mRNA) தடுப்பூசியை உருவாக்குவதற்கு முக்கியப் பங்காற்றியதற்காக இந்த விருது அளிக்கப்படுகிறது. “தங்களின் அற்புதமான கண்டுபிடிப்புகள் மூலம் எம்ஆர்என்ஏ (mRNA) நமது நோய் எதிர்ப்பு அமைப்புடன் எத்தகைய தொடர்பு குறித்த புரிதலில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர். மனித ஆரோக்கியத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக விளங்கிய கொரோனா தொற்றுநோய்க்கு தடுப்பூசி உருவாக்ககியதில் இவர்களின் கண்டுபிடிப்புகள் முக்கியப் பங்காற்றின” என நோபல் பரிசு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய ஆறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது. இத்துறைகளில் நோபல் பரிசு தான் உலகிலேயே மிக உயர்ந்த விருதாகக் கருதப்படுகிறது.

ஸ்வீடன் அறிவியலாளர் ஆல்பிரெட் நோபல் விருப்பத்தின் பேரில் அவரது நினைவாக வழங்கப்படும் நோபல் பரிசு ஆண்டுதோறும் அறிவிக்கப்படுகிறது. ஒவ்வொரு விருதும் சுமார் 10 லட்சம் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.8.30 கோடி) பரிசுத்தொகையை உள்ளடக்கியது ஆகும்.

சொந்த மகள்களையே சீரழித்த தந்தை; கொன்று விடுவதாக மிரட்டி 4 வருடமாக செக்ஸ் டார்ச்சர்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios