பிதாமகன், கஜேந்திரா உள்ளிட்ட படங்களின் தயாரிப்பாளர் வி.ஏ.துரை காலமானார்! திரையுலகினர் அஞ்சலி..!
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு தொடர் சிகிச்சையில் இருந்த பிதாமகன், கஜேந்திரா, லவ்லி உள்ளிட்ட படங்களின் தயாரிப்பாளர் வி.ஏ.துரை(69) நேற்று இரவு காலமானார்.
va durai
பிரபல முன்னணி தயாரிப்பாளரான ஏ.எம்.ரத்னத்திடம் அசோசியேட்டாக பணியாற்றிய வி.ஏ.துரை, பின்னர் எவர்கிரீன் இன்டர்நேஷனல் என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி முன்னணி நடிகர்களான, விக்ரம், சூர்யா, விஜயகாந்த், சத்யராஜ் உள்ளிட்ட நடிகர்களின் சூப்பர் ஹிட் படங்கள் மற்றும் சில தோல்வி படங்களையும் தயாரித்துள்ளார்.
என்னமா கண்ணு, லூட்டி, பிதாமகன், கஜேந்திரா, நாய்க்குட்டி போன்ற படங்களை தயாரித்துள்ளார். குறிப்பாக இவர் தயாரிப்பில், இயக்குனர் பாலா இயக்கத்தில் விக்ரம் சூர்யா இணைந்து நடித்திருந்த பிதாமகன் திரைப்படம் தேசிய விருதை பெற்றது. ஆனால் சில தோல்வி படங்களால், தன்னுடைய மொத்த சொத்தையும் இழந்து, குடும்பத்தினரால் கைவிடப்பட்ட நிலையில், தங்குவதற்கு வீடு கூட இல்லாமல் சர்க்கரை நோய் காரணமாக இரண்டு கால்களும் புண்கள் ஏற்பட்டு பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டார்.
இதையும் படிங்க;- சிகிச்சைக்கு பணமில்லாமல் பரிதாப நிலையில் 'பிதாமகன்' பட தயாரிப்பாளர்! ஓடி வந்து உதவிய நடிகர் சூர்யா!
நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள தனக்கு உதவ வேண்டும் என்று வி.ஏ.துரை கடந்த மார்ச் மாதம் வீடியோ வெளியிட்டார். இதையடுத்து அவருக்கு சூர்யா, விக்ரம் உள்ளிட்ட பிரபலங்கள் உதவினர்.
இந்நிலையில் நீரிழிவு நோயால் தொடர் சிகிச்சையில் இருந்து வந்த வி.ஏ.துரை நேற்று இரவு காலமானார். அவரது மறைவுக்கு திரைத்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.