Published : Oct 01, 2023, 07:19 AM ISTUpdated : Oct 01, 2023, 10:16 PM IST

Tamil News Live Updates: வேட்பாளர் தோற்றால் மாவட்டச் செயலாளர் பதவி நீக்கம்.. மு.க.ஸ்டாலின்

சுருக்கம்

நாடாளுமன்ற தேர்தலில் நமது வேட்பாளர் எவராவது தோல்வி அடைந்தால் அந்த பகுதியை சேர்ந்த மாவட்ட செயலாளர்கள் நீக்கப்படுவார்கள். அதேபோல் தொகுதி பார்வையாளர்களுக்கு சரியாக ஒத்துழைக்காத மாவட்ட செயலாளர்களும் மாற்றப்படுவார் என முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளார். 

Tamil News Live Updates: வேட்பாளர் தோற்றால் மாவட்டச் செயலாளர் பதவி நீக்கம்.. மு.க.ஸ்டாலின்

10:16 PM (IST) Oct 01

25 ஆண்டுகள்.. எல்லாம் ரெடியா.. மாநாடு குறித்து விசிக தலைவர் திருமாவளவன் முக்கிய அறிவிப்பு..!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் மாநாடு தொடர்பான அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார்.

09:58 PM (IST) Oct 01

தீபாவளி சர்ப்ரைஸ்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்.. அகவிலைப்படி உயர்வு - எப்போது தெரியுமா.?

7வது சம்பள கமிஷன் டிஏ உயர்வு குறித்த முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது. இந்த தேதியில் அரசாங்கம் அகவிலைப்படியை அதிகரிக்கலாம் என்று தெரிகிறது.

09:40 PM (IST) Oct 01

வீட்டில் பெட்டி பெட்டியாக குவார்ட்டர் வாங்கி வைத்திருக்கிறேன்.. சீமான் சொன்ன புது மேட்டர்..

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடலூரில் நடைபெற்ற கட்சி கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

08:39 PM (IST) Oct 01

கேசிஆர் மகள் கவிதாவை தோற்கடித்த வாக்குறுதி.. கையில் எடுத்த மோடி - பிரதமர் தெலங்கானா விசிட் ஹைலைட்ஸ்

தெலங்கானா பயணத்தின் போது தேசிய மஞ்சள் வாரியம் அமைக்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் இந்த பயணம் மிக முக்கியதாக அரசியல் வட்டாரங்களில் பார்க்கப்படுகிறது.

08:04 PM (IST) Oct 01

தங்கம் முதல் மௌனராகம் வரை.. பிக் பாஸ் வீட்டுக்கு செல்லும் குக் வித் கோமாளி.. யார் இந்த ரவீனா தாஹா?

விஜய் டிவி மற்றும் ஹாட் ஸ்டார் தமிழிலில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் 7 வது சீசன் இன்று முதல் தொடங்கி உள்ளது. இதில் பிரபல நடிகை ரவீனா தாஹா கலந்து கொண்டுள்ளார்.

06:24 PM (IST) Oct 01

From The India Gate : ஆரம்பித்த லோக்சபா கூட்டணி கணக்கு.. திமுக - அதிமுகவுடன் பேச்சு வார்த்தையில் கட்சிகள்

ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கின் மகத்தான நெட்வொர்க் நாடு முழுவதும் உள்ள அரசியல் மற்றும் அதிகாரத்தின் நாடித் துடிப்பை தட்டிக் கேட்க உதவுகிறது, நகைச்சுவை கலந்த செய்திகளையும் வழங்கி வருகிறது. இவற்றை ஒரு தொகுப்பாக ‘ஃப்ரம் தி இந்தியா கேட்’ மூலம் வழங்குகிறோம்.

06:20 PM (IST) Oct 01

யார் இந்த அங்கித் பையன்பூரியா: மோடியுடன் ஒன்றாக தூய்மை பணியில் ஈடுபட்ட மல்யுத்த வீரர்!

பிரதமர் மோடியுடன் ஒன்றாக இணைந்து தூய்மை பணியில் ஈடுபட்ட அங்கித் பையன்பூரியா நாடு முழுவதும் கவனம் ஈர்த்துள்ளார்

05:53 PM (IST) Oct 01

குறைந்த விலையில் ஷீரடியை சுற்றி பார்க்கலாம்.. ஐஆர்சிடிசி டூர் பேக்கேஜ் கட்டணம் எவ்வளவு?

ஷீரடி டூர் பேக்கேஜ் திட்டத்தை ஐஆர்சிடிசி அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் மூலம் நீங்கள் குறைந்த விலையில் ஷீரடியை சுற்றிப் பார்க்கலாம்.

05:20 PM (IST) Oct 01

கட்சியும், சின்னமும் சரத் பவாரிடம்தான் இருக்க வேண்டும்: சுப்ரியா சுலே!

தேசியவாத காங்கிரஸ் கட்சியை உருவாக்கியவர் சரத் பவார் என்பதால், சின்னம் அவரிடம்தான் இருக்க வேண்டும் என அக்கட்சியின் எம்.பி., சுப்ரியா சுலே தெரிவித்துள்ளார்.
 

04:47 PM (IST) Oct 01

வடகிழக்கு பருவமழை முடியும் வரை சிறப்பு காய்ச்சல் மருத்துவ முகாம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!

வடகிழக்கு பருவமழை முடியும் வரை டெங்கு மற்றும் மழைக்கால நோய்களுக்கான சிறப்பு காய்ச்சல் மருத்துவ முகாம் நடத்தப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்

04:40 PM (IST) Oct 01

சுமார் 200 அடி.. செவ்வாய் கிரகத்தில் வீசிய புயல்.. நாசா வெளியிட்ட முக்கிய வீடியோ - ஷாக்கில் ஆய்வாளர்கள் !!

செவ்வாய் கிரகத்தில் கடந்தகால வாழ்க்கையின் சாத்தியக்கூறுகளைத் தேடும் போது, நாசா பெர்ஸெவரன்ஸ் ரோவர் செவ்வாய் கிரகத்தின் சூறாவளியைக் கண்டது. இதுதொடர்பான செய்தியை நாசா வெளியிட்டுள்ளது.

04:00 PM (IST) Oct 01

தினமும் 3 ஜிபி டேட்டா.. இலவச நெட்ஃபிளிக்ஸ்.. ஜியோவின் அசத்தலான திட்டம் !!

3 மாதங்களுக்கு தினமும் 3 ஜிபி டேட்டா, இலவச நெட்ஃபிளிக்ஸ் மற்றும் அன்லிமிடெட் அழைப்புகள் கிடைக்கும் ஜியோ கிரேட் பிளான் பற்றி பார்க்கலாம்.

03:26 PM (IST) Oct 01

தமிழ்நாட்டின் மூத்த டிஜிபி பிரஜ் கிஷோர் ரவி திடீர் ராஜினாமா.. லோக்சபா தேர்தலில் போட்டியிடுகிறாரா.?

தமிழகத்தின் மூத்த டிஜிபியாக இருந்த பிரஜ் கிஷோர் ரவி ராஜினாமா செய்தார். டிஜிபி பிரஜ் கிஷோர் ரவி காங்கிரஸில் இணைந்து அடுத்த மக்களவைத் தேர்தலில் தனது சொந்த ஊரான பீகாரில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

02:51 PM (IST) Oct 01

பத்திரப்பதிவில் இன்று முதல் இது கட்டாயம்.. தமிழக பத்திரப்பதிவுத்துறை போட்ட கிடுக்குப்பிடி உத்தரவு.!

தமிழக பத்திரப்பதிவுத்துறை அதிரடி உத்தரவை போட்டுள்ளது. அது இன்று முதல் (அக்டோபர் 1) அமலுக்கு வந்துள்ளது.

02:50 PM (IST) Oct 01

லால் சலாம் ரிலீஸ் தேதி இதோ

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்துள்ள லால் சலாம் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.

02:11 PM (IST) Oct 01

கலைத்தாயின் தவப்புதல்வனே... சிவாஜிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லி அண்ணா என நெகிழ்ந்த இளையராஜா

மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 96-வது பிறந்தநாளான இன்று அவருக்கு இசைஞானி இளையராஜா வீடியோ வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.

01:46 PM (IST) Oct 01

திருப்பதியில் இலவச தரிசன டோக்கன்கள் ரத்து: தேவஸ்தானம் அதிரடி!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் குறிப்பிட்ட நாட்களில் இலவச தரிசன டோக்கன்கள் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது

01:21 PM (IST) Oct 01

மல்யுத்த வீரர் அங்கித் பையன்பூரியாவுடன் இணைந்து பிரதமர் மோடி தூய்மை பணி!

மல்யுத்த வீரர்  அங்கித் பையன்பூரியாவுடன் இணைந்து பிரதமர் மோடி தூய்மை பணியில் ஈடுபட்டார்.
 

01:09 PM (IST) Oct 01

தூய்மைப் பணியில் 93 வயதான மாராத்தாள் பாட்டியுடன் அண்ணாமலை

தூய்மையே சேவை முன்னெடுப்பின் ஒரு பகுதியாக, கோவை அக்ரஹார சாமக்குளத்தில் 93 வயதான விவசாயி, மாராத்தாள் பாட்டி அவர்களுடன், தூய்மைப் பணியில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். 

12:58 PM (IST) Oct 01

சென்னை கடற்கரையில் தூய்மை பணியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி

தூய்மை இந்தியா திட்டத்தின் 9 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் இன்று நடைபெற்ற தூய்மைப் பணியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சென்னை, உத்தண்டி, நயினார்குப்பம் மீனவ கிராம மாணவர்கள், தன்னார்வலர்கள், குடியிருப்புவாசிகளுடன் சேர்ந்து, பிரதமர்மோடி தொடங்கிய தேசிய அளவிலான தூய்மையேசேவை என்ற சமூகம் முன்னெடுக்கும் தூய்மை பிரசார இயக்கத்தில் பங்கெடுத்தார். ஆளுநர் ரவி தூய்மை பணியாளர்களுடன் கலந்துரையாடி, சமூக சுற்றுப்புறத்தை சுகாதாரமாகவும் தூய்மையாகவும் வைத்திருப்பதில் அவர்கள் காட்டும் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மற்றும் தன்னலமற்ற சேவைகளைப் பாராட்டினார். 

12:52 PM (IST) Oct 01

தூய்மையே சேவை: பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று களத்தில் குதித்த மக்கள்!

பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று, மத்திய அமைச்சர்கள், முதல்வர்கள், அரசு அதிகாரிகள், பொதுமக்கள் என அனைத்து தரப்பட்ட மக்களும் தூய்மைப் பணியில் ஈடுபட்டனர்

11:37 AM (IST) Oct 01

சந்திரயான் போல நிலவுக்கு அப்பால் செல்லும் அமெரிக்க இந்திய உறவு: ஜெய்சங்கர்!

சந்திரயான் போன்று நிலவுக்கும் அதற்கு அப்பாலும் அமெரிக்க இந்திய உறவு செல்லும் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்

10:47 AM (IST) Oct 01

Today Gold Rate In Chennai: 6 நாட்களாக தாறுமாறாக குறைந்த தங்கம் விலை... இன்று உயர்ந்ததா? குறைந்ததா?

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து  ஏற்றம், இறக்கம் கண்டு வந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை காணலாம்.

10:46 AM (IST) Oct 01

பாஜக நிர்வாகியை அதிகாலையில் வீடு புகுந்து தட்டித்தூக்கிய போலீஸ்! என்ன காரணம் தெரியுமா?

ராகுல், பிரியங்கா காந்தி குறித்து இழிவுபடுத்தும் வகையில் கருத்து பதிவிட்ட புகாரில் பாஜக சமூக ஊடக பொறுப்பாளர் பிரவீன் ராஜை போலீசார் அதிகாலையில் கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 

10:21 AM (IST) Oct 01

இந்திய ரூபாய் நோட்டுகளில் ஏன் மகாத்மா காந்தியின் படம் உள்ளது?

இந்திய ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தியின் படம் இடம்பெற்றிருக்கும். அது ஏன் என்று தெரியுமா?
 

09:34 AM (IST) Oct 01

அடக்கடவுளே.. காசுக்காக இப்படி கூடவா செய்வாங்க.. ஊசி போட்டு இதயத்தை துடிக்க வைத்த மருத்துவமனை? பகீர் தகவல்.!

ஓசூர் அருகே  தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கல்லூரி மாணவி தவறான சிகிச்சையால் உயிரிழந்ததாக கூறி மாணவியின் உறவினர்கள் மற்றும் பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

08:27 AM (IST) Oct 01

குன்னூர் பேருந்து விபத்து.. பலி எண்ணிக்கை 9ஆக உயர்வு!

குன்னூர் பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9ஆக உயர்ந்துள்ளது. விபத்தில் சிக்கி காணாமல் போனவர் சலடமாக மீட்கப்பட்டதை அடுத்து உயிரிழப்பு எண்ணிக்கை 9ஆக அதிகரித்துள்ளது. 

07:57 AM (IST) Oct 01

பழனி முருகன் கோவிலுக்கு போறீங்களா? அப்படி கண்டிப்பா இதை படிச்சிட்டு போங்க.. இன்று முதல் அமலுக்கு வந்தது.!

பழநி முருகன் கோவிலுக்குள் செல்போன், கேமராக்களுக்கு கொண்டு செல்ல இன்று முதல் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

07:21 AM (IST) Oct 01

சென்னையில் பயங்கரம்.. வேலை முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த எலெக்ட்ரீசியன் வெட்டி படுகொலை.!

சென்னையில் வேலை முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த எலெக்ட்ரீசியன் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 


More Trending News