சென்னையில் பயங்கரம்.. வேலை முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த எலெக்ட்ரீசியன் வெட்டி படுகொலை.!
சென்னை பெரும்பாக்கம் எழில் நகரை சேர்ந்தவர் ராஜா (39). எலக்ட்ரீஷியன். வழக்கம் போல நேற்று வேலைக்கு சென்று விட்டு இரவு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.
சென்னையில் வேலை முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த எலெக்ட்ரீசியன் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை பெரும்பாக்கம் எழில் நகரை சேர்ந்தவர் ராஜா (39). எலக்ட்ரீஷியன். வழக்கம் போல நேற்று வேலைக்கு சென்று விட்டு இரவு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது மதுபோதையில் இருந்த 5 பேர் கொண்ட கும்பல் ராஜாவை வழிமறித்து தகராறில் ஈடுபட்டனர். அப்போது ஆத்திரமடைந்த போதைக் கும்பல் ராஜாவை அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பித்தனர். ரத்த வெள்ளத்தில் சரிந்த ராஜா உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார்.
இதையும் படிங்க;- சிறுமியை கொன்று சடலத்துடன் பாலியல் உறவு.. காமக்கொடூரர்கள் 3 பேர் கைது
ராஜாவின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி ராஜா பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ராஜாவை கொலை செய்தது எழில் நகரை சேர்ந்த ரவுடி கோபி (24), சத்யா(30). மகபூல்(29), செல்வம் (28) , பாட்ஷா(25) ஆகிய ஐந்து பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பணிக்கு சென்ற வீடு திரும்பிய எலக்ட்ரீஷியனை போதை கும்பல் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க;- மகளை 7 மாதம் கர்ப்பமாக்கிய தந்தை.. உடந்தையாக இருந்த தாய்.. சிக்கிய மெடிக்கல் ஷாப் ஓனர்.!