யார் இந்த அங்கித் பையன்பூரியா: மோடியுடன் ஒன்றாக தூய்மை பணியில் ஈடுபட்ட மல்யுத்த வீரர்!

பிரதமர் மோடியுடன் ஒன்றாக இணைந்து தூய்மை பணியில் ஈடுபட்ட அங்கித் பையன்பூரியா நாடு முழுவதும் கவனம் ஈர்த்துள்ளார்

Who is Ankit Baiyanpuria the wrestler who participated with pm modi Swachhta Hai Sewa campaign smp

தூய்மை இந்தியா திட்டத்தின் 9ஆம் ஆண்டு தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, தூய்மையே சேவை இயக்கத்தின் ஒரு பகுதியாக "ஏக் தரீக் ஏக் கன்டா ஏக் சாத்"  எனப்படும் ஒன்றாம் தேதி, ஒரு மணி நேரம், ஒன்றாக இணைவோம் என பிரதமர் நரேந்திர மோடியின் நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்தார்.

அதன்படி, நாடு முழுவதும் மெகா தூய்மை இயக்கம் இன்று நடைபெற்று வருகிறது. பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று, மத்திய அமைச்சர்கள், முதல்வர்கள், அரசு அதிகாரிகள், பொதுமக்கள் என அனைத்து தரப்பட்ட மக்களும் தூய்மைப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில், மல்யுத்த வீரர்  அங்கித் பையன்பூரியாவுடன் இணைந்து பிரதமர் மோடி தூய்மை பணியில் ஈடுபட்டார். இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில், “தூய்மையே சேவை இயக்கத்தில் தேசம் கவனம் செலுத்துகையில், அங்கித் பையன்புரியாவும் நானும் அதில் ஈடுபட்டோம். தூய்மைக்கு அப்பால், உடற்தகுதி மற்றும் நல்வாழ்வு குறித்து நாங்கள் கலந்துரையாடினோம்.” என பதிவிட்டுள்ளார்.

பிரதமர் மோடியுடனான சந்திப்பு குறித்து அங்கித் பையன்பூரியா கூறுகையில், பிரதமர் மோடி தன்னிடன் 75 நாட்கள் சவால் பற்றி கேட்டதாகவும், அதனை  பின்பற்றும் 5 விதிகள் பற்றி அவரிடம்தான் பேசியதாகவும் தெரிவித்துள்ளார். “நாள் ஒன்றுக்கு 6 லிட்டர் தண்ணீர் குடுக்க வேண்டும், இரண்டு முறை உடற்பயிற்சி செய்ய வேண்டும், குறிப்பிட்ட உணவுமுறையை பின்பற்ற வேண்டும், தினமும் எங்களது புனித நூலான கிராந்தை 10 பக்கங்கள் படிப்பேன்.” என்ற 5 விதிகள்தான் அவை எனவும் அங்கித் பையன்பூரியா தெரிவித்துள்ளார்.

 

 

பிரதமர் மோடியுடன் ஒன்றாக இணைந்து தூய்மை பணியில் ஈடுபட்ட அங்கித் பையன்பூரியா நாடு முழுவதும் கவனம் ஈர்த்துள்ளார். யார் இவர்?

இன்ஸ்டாகிரம் உபயோகிக்கும் பலருக்கும் அங்கித் பையன்பூரியாவை பற்றி தெரிந்திருக்கும். பலராலும் கைவிடப்பட்ட, முடியாது என பின்வாங்கிய 75 நாட்கள் சவாலை வெற்றிகரமாக முடித்தவர்தான் இந்த அங்கித் பையன்பூரியா.

தி 75 ஹார்ட் சேலஞ்ச் என்றால் என்ன?


இந்த பெயரில் உள்ளது போலவே, 75 நாட்களுக்கு கடுமையான விதிகளின் தொகுப்பை கண்டிப்பாக தொடர்ச்சியாக கடைபிடிக்க வேண்டும் என்பதே. 

** உணவு முறை: ஒரு குறிப்பிட்ட உணவுத் திட்டத்தைப் பின்பற்ற வேண்டும். ஜங் புட்ஸ் சாப்பிடக் கூடாது. ஏமாற்றக் கூடாது.
** உடற்பயிற்சி: ஒவ்வொரு நாளும் இரண்டு முறை தலா 45 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும். அதில் ஒன்று வெளிப்புறத்தில் இருக்க வேண்டும். (வானிலை நிலைமைகளை பொருட்படுத்தாமல் வெளிப்புறத்தில் 45 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.)
** தண்ணீர்: தினமும் ஒரு கேலன் (தோராயமாக 3.8 லிட்டர்) தண்ணீரை உட்கொள்ள வேண்டும்.
** புத்தகம்: கற்றல் மற்றும் தனிப்பட்ட வளர்ச்சிக்காக தினமும் குறைந்தபட்சம் 10 பக்கங்கள் புத்தகம் படிக்க வேண்டும்.
** செல்பி: உடல் மாற்றங்களைக் கண்காணிக்க தினமும் ஒரு செல்பி புகைப்படம் எடுக்க வேண்டும்.
** மது: மது அருந்துவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட உணவுத் திட்டத்தை உண்மையாக கடைப்பிடிக்க வேண்டும்.

இந்த விதிகளை ஒரு நாள் தவறிவிட்டால், மீண்டும் முதலில் இருந்து 75 நாட்கள் சவாலை ஆரம்பிக்க வேண்டும்.

முதன்முதலில் 75 ஹார்ட் சேலஞ்ச் அறிமுகப்படுத்தப்பட்டபோது, அதனை யாரும் செய்ய முடியாது என தோன்றியது. ஆனால், அது மாற்றத்தை ஏற்படுத்துவதாக உறுதியளிக்கப்பட்டது. பலர் இந்த பயணத்தை மேற்கொண்டனர். ஆனால், அவர்கள் பின்வாங்கினர். இருப்பினும், இந்தியாவைச் சேர்ந்த ஒருவரான அங்கித் பையன்பூரியா 75 கடினமான சவாலை வெற்றிகரமாக முடித்ததுடன், அதை 105 நாட்களுக்கு நீட்டித்தார்.

 

 

அதற்கு அசைக்க முடியாத அவரது அர்ப்பணிப்புதான் காரணம். ஹரியானாவின் சோனிபட் மாவட்டத்தில் உள்ள சிறிய நகரமான பையன்பூரை சேர்ந்தவர் அங்கித் சிங் என்றும் அழைக்கப்படும் அங்கித் பையன்பூரியா. பாரம்பரியதிற்கு ஏற்ப, மல்யுத்தத்தில் தனது பயணத்தைத் தொடங்கிய அவர், தனது கிராமப் பெயரை தனது குடும்பப்பெயராக சேர்த்துக் கொண்டார். அன்றிலிருந்து அங்கித் சிங் - அங்கித் பையன்பூரியா என்றாகிப் போனார்.

அவர் தனது உயர்கல்வியை சொந்த ஊரில் முடித்துவிட்டு, தற்போது சோனிபட்டில் பட்டப்படிப்பு படித்து வருகிறார். அவரது பெற்றோர் கூலித் தொழிலாளிகள். கடந்த 13 ஆண்டுகளாக மல்யுத்தத்தில் அர்ப்பணிப்புடன் இருக்கிறார் அங்கித்.

தூய்மையே சேவை: பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று களத்தில் குதித்த மக்கள்!

இருப்பினும், அங்கித்தின் மல்யுத்தப் பயணம் சுமூகமாக இல்லை. 2018 இல், அவரது டிஸ்க்கில் காயம் ஏற்பட்டது. அதிலிருந்து மீண்ட அவரது முழங்காலில் 2020ஆம் ஆண்டில் காயம் ஏற்பட்டது. 2022ஆம் ஆண்டு ஒரு மல்யுத்தப் போட்டியின் போது, அவரது இடது தோள்பட்டை இடம்பெயர்ந்தது. இதனால், அவரால் போட்டியில் கலந்து கொள்ள முடியவில்லை. இந்த சமயத்தில்தான் 75 நாட்கள் சவாலை பற்றி அவருக்கு தெரியவருகிறது.

அந்த சவாலை ஏற்றுக் கொள்ள முயற்சித்த அவர், கடந்த ஜூன் மாதம் 27ஆம் தேதி தொடங்கி கடந்த செப்டம்பர் மாதம் 11ஆம் தேதி அச்சவாலை வெற்றிகரமாக முடித்துள்ளார். இதனை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ச்சியாக பதிவிட்டும் உள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios