Asianet News TamilAsianet News Tamil

கலைத்தாயின் தவப்புதல்வனே... சிவாஜிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லி அண்ணா என நெகிழ்ந்த இளையராஜா - வீடியோ இதோ

மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 96-வது பிறந்தநாளான இன்று அவருக்கு இசைஞானி இளையராஜா வீடியோ வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Ilaiyaraaja emotional birthday wishes to sivaji ganesan viral video gan
Author
First Published Oct 1, 2023, 2:05 PM IST | Last Updated Oct 1, 2023, 2:05 PM IST

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத கலைஞனாக திகழ்ந்தவர் சிவாஜி கணேசன். இவரது நடிப்புக்கு நிகராக யாரும் இல்லை என சொல்லும் அளவுக்கு தன்னுடைய அபார நடிப்பால் காலம் கடந்து கொண்டாடப்படுபவர் சிவாஜி கணேசன்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 96-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி அவரது ரசிகர்கள் இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர். அதேபோல் பிரபலங்கள் பலரும் சமூக வலைதளம் வாயிலாக சிவாஜி கணேசனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இசைஞானி இளையராஜா, வீடியோ வாயிலாக சிவாஜிக்கு வாழ்த்து கூறி இருக்கிறார்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

அதில் அவர் பேசியதாவது : “கலைத்தாயின் தவப்புதல்வன் அண்ணன் நடிகர் திலகம் அவர்களுக்கு இன்று பிறந்தநாள். இந்தநாளை உலகமே கொண்டாடுகிறது. அவரை வணங்குவதிலும், அவரின் பாத கமலங்களை தொட்டு நமஸ்காரம் செய்வதிலும் நான் மிகவும் கொடுத்து வைத்தவன் என்கிற சந்தோஷம் எனக்கு இருக்கிறது. அண்ணனின் புகழ் நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே வருகிறது.

அவரின் பிறந்தநாளான இன்று, அவர்களின் பரிபூரண் ஆசி என்மீதும், கலை உலகத்தின் மீதும் இருக்கும் என்று எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். வாழ்க நடிகர் திலகம் அவர்களின் புகழ், கலை உலகுக்கே உயிரான அண்ணனின் புகழ் என்றென்றும் வாழ்க” என அந்த வீடியோவில் நெகிழ்ச்சியுடன் வாழ்த்து தெரிவித்துள்ளார் இளையராஜா.

இதையும் படியுங்கள்... கண்டெண்ட் குடோன் கூல் சுரேஷ் முதல் வனிதா மகள் ஜோவிகா வரை! பிக்பாஸ் ஸ்கெட்ச் போட்டு தூக்கிய 18 பேர் லிஸ்ட் இதோ

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios