கண்டெண்ட் குடோன் கூல் சுரேஷ் முதல் வனிதா மகள் ஜோவிகா வரை! பிக்பாஸ் ஸ்கெட்ச் போட்டு தூக்கிய 18 பேர் லிஸ்ட் இதோ
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் இன்று மாலை 6.30 மணிக்கு தொடங்க உள்ள நிலையில், அதில் பங்கேற்றுள்ள 18 போட்டியாளர்களின் லிஸ்ட் வெளியாகி உள்ளது.
Biggboss season 7 tamil contestants list
பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத பிக்பாஸ் நிகழ்ச்சி இதுவரை 6 சீசன்கள் முடிவடைந்து உள்ள நிலையில், இன்று அந்நிகழ்ச்சியின் 7-வது சீசன் தொடங்க உள்ளது. இந்த சீசனில் இரண்டு வீடுகளுடன் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. இதில் 9 ஆண் போட்டியாளர்கள், 9 பெண் போட்டியாளர்கள் என மொத்தம் 18 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். அவங்கள் யார்... யார் என்பதைப் பற்றி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
கூல் சுரேஷ், யுகேந்திரன், நிக்சன்
கண்டெண்ட் குடோன் என்று அழைக்கப்படும் கூல் சுரேஷ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கி உள்ளார். இந்த சீசனில் முதல் ஆளாக பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்த போட்டியாளரும் இவர்தான். அதேபோல் மலேசியா வாசுதேவனின் மகன் யுகேந்திரன் மற்றும் ராப் பாடகர் நிக்சன் ஆகியோரும் போட்டியாளராக களமிறங்கி உள்ளனர்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
விசித்ரா, ரவீனா, வினிஷா
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பைனல் வரை முன்னேறி அசத்திய விசித்ராவும் பிக்பாஸில் போட்டியாளராக களமிறங்கி உள்ளார். அதேபோல் அந்நிகழ்ச்சியில் கோமாளியாக கலக்கிய ரவீனா தாஹா மற்றும் விஜய் டிவி பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை வினுஷா தேவி ஆகியோரும் பிக்பாஸ் சீசன் 7-ல் போட்டியாளராக வந்துள்ளனர்.
பிரதீப் ஆண்டனி, மணி சந்திரா, விஷ்ணு
முன்னாள் பிக்பாஸ் போட்டியாளரான கவினின் நெருங்கிய தோழனும், நடிகருமான பிரதீப் ஆண்டனி, விஜய் டிவி நடன நிகழ்ச்சிகளில் டான்ஸ் மாஸ்டராக பணியாற்றிய மணி சந்திரா மற்றும் விஜய் டிவியின் ஆபிஸ், ஜீ தமிழில் ஒளிபரப்பான சத்யா ஆகிய தொடர்களில் நாயகனாக நடித்த விஷ்ணு ஆகியோர் இந்த சீசனில் போட்டியாளராக பங்கேற்றுள்ளனர்.
ஜோவிகா, அக்ஷயா, மாயா கிருஷ்ணன்
நடிகை வனிதா விஜயகுமாரின் மூத்த மகள் ஜோவிகா, லவ் டுடே படத்தில் நடிகை இவானாவின் தங்கையாக நடித்து பிரபலமான அக்ஷயா உதயகுமார் மற்றும் லோகேஷ் கனகராஜ் - கமல்ஹாசன் கூட்டணியில் வெளியாகி வெற்றிபெற்ற விக்ரம் படத்தில் நடித்த மாயா கிருஷ்ணன் ஆகியோரும் பிக்பாஸ் 7-வது சீசனில் பங்கேற்றுள்ளனர்.
சரவண விக்ரம், பாவா செல்லதுரை, விஜய் வர்மா
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கடைசி தம்பியாக நடித்த சரவண விக்ரம், புகழ்பெற்ற எழுத்தாளரும், குணச்சித்திர நடிகருமான பாவா செல்லதுரை மற்றும் மாடலிங் துறையில் பணியாற்றிய விஜய் வர்மா ஆகியோரும் இந்த ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கி உள்ளனர்.
ஐஷு, பூர்ணிமா, அனன்யா ராவ்
முன்னாள் பிக்பாஸ் போட்டியாளர் அமீரின் தங்கையும், நடனக் கலைஞருமான ஐஷூ, புகழ்பெற்ற யூடியூப்பரான பூர்ணிமா ரவி, மாடல் அழகியும், பிக்பாஸ் சீசன் 4 போட்டியாளரான பாலாஜி முருகதாஸின் தோழியுமான அனன்யா ராவ் ஆகியோரும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் பங்கேற்று உள்ளனர்.
இதையும் படியுங்கள்... கட்டப்பை முதல் காஸ்ட்லியான வைரம் வரை.. பிக்பாஸ் 7 போட்டியாளர்களுக்கு கமல் கொடுத்த ஆச்சர்ய பரிசுகள்! ஒரு பார்வை