சிவகார்த்திகேயன் மேல் ரஜினிக்கு அப்படி என்ன கோவம்... அயலானை அடிச்சு நொறுக்க வருது லால் சலாம் - ரிலீஸ் தேதி இதோ
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்துள்ள லால் சலாம் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.
lal salaam, ayalaan
ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா கடந்த 2012-ம் ஆண்டு திரைக்கு வந்த 3 படம் மூலம் இயக்குனராக காலடி எடுத்து வைத்தார். இப்படம் அந்த சமயத்தில் பெரியளவில் ஹிட் ஆகாவிட்டாலும், அப்படத்தின் பாடல்கள் வேறலெவலில் கொண்டாடப்பட்டது. தற்போது தமிழ் சினிமாவில் டாப் இசையமைப்பாளராக இருக்கும் அனிருத் அறிமுகமானதே 3 படம் மூலம் தான். அதுமட்டுமின்றி அப்படத்தில் தனுஷ் பாடிய கொலவெறி பாடல் உலகளவில் ஹிட் ஆனது.
Aishwarya Rajinikanth
இதையடுத்து வை ராஜா வை என்கிற திரைப்படத்தை இயக்கிய ஐஸ்வர்யா, கடந்த 8 ஆண்டுகளாக எந்த படங்களையும் இயக்காமல் சினிமாவில் இருந்து விலகியே இருந்தார். இதனிடையே கடந்தாண்டு மீண்டும் இயக்குனராக கோதாவில் குதித்த ஐஸ்வர்யா, லால் சலாம் படத்தின் மூலம் கம்பேக் கொடுக்க உள்ளதாக அறிவித்தார். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க, ஏ.ஆர்.ரகுமான் தான் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
Lal salaam movie team
கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து உருவாகும் லால் சலாம் படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் ஹீரோவாக நடித்திருந்தாலும், இப்படத்தில் உள்ள ஹைலைட்டான விஷயமே மொய்தீன் பாய் என்கிற கதாபாத்திரம் தான். அந்த கதாபாத்திரத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ளார். கெஸ்ட் ரோலாக இருந்தாலும் பவர்புல் கேரக்டராக மொய்தீன் பாய் கேரக்டர் இருக்கும் என கூறப்படுகிறது.
lal salaam release date
இந்நிலையில், லால் சலாம் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி இப்படம் வருகிற ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு திரைக்கு வர உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படம் பொங்கல் ரிலீஸ் என்பதை அறிவித்துள்ளதால், தற்போது அதற்கு போட்டியாக லால் சலாமும் ரிலீஸ் ஆவது உறுதியாகி உள்ளது.
sivakarthikeyan, Rajinikanth
இதற்கு முன்னதாக ரஜினி நடிப்பில் வெளிவந்த ஜெயிலர் படம் ரிலீசான தேதியில் சிவகார்த்திகேயனின் மாவீரன் படமும் ரிலீசாக இருந்தது. ஆனால் ரஜினி தன்னுடைய குரு என்பதால் அவருடன் போட்டிபோட விரும்பாத சிவகார்த்திகேயன், மாவீரன் படத்தை அதற்கு முன்னதாகவே ஜூலை மாதம் ரிலீஸ் செய்தார். தற்போது லால் சலாம் படமும் அயலான் படத்துக்கு போட்டியாக ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளதால் இந்த முறை சிவகார்த்திகேயன் தன் பட ரிலீஸை தள்ளிவைப்பாரா அல்லது ரஜினியுடன் மோதிப்பார்ப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இதையும் படியுங்கள்... ஒரு செகண்டுக்கு 10 லட்சமா... 50 செகண்ட் விளம்பரத்தில் நடிக்க நயன்தாரா வாங்கிய சம்பளத்தால் ஆடிப்போன கோலிவுட்..!