ஒரு செகண்டுக்கு 10 லட்சமா... 50 செகண்ட் விளம்பரத்தில் நடிக்க நயன்தாரா வாங்கிய சம்பளத்தால் ஆடிப்போன கோலிவுட்..!
நடிகை நயன்தாரா வெறும் 50 செகண்ட் விளம்பரத்தில் நடிக்க கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கியுள்ள தகவல் கோலிவுட்டில் வைரலாக பரவி வருகிறது.
nayanthara
தமிழ் திரையுலகில் 20 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. கல்யாணமாகி குழந்தைகள் வந்த பிறகும், சினிமாவில் செம்ம பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார் நயன். இதுவரை கோலிவுட், டோலிவுட் என தென்னிந்திய திரையுலகில் மட்டும் கலக்கி வந்த நயன்தாரா, கடந்த மாதம் வெளிவந்த ஜவான் படம் மூலம் பாலிவுட்டிலும் மாஸ் எண்ட்ரி கொடுத்தார். இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.1000 கோடி வசூலை வாரிக்குவித்தது.
nayanthara new business
ஜவான் படத்துக்கு பின்னர் கோலிவுட்டில் மட்டும் கவனம் செலுத்தும் நயன்தாரா கைவசம் யூடியூபர் டியூடு விக்கி இயக்கும் மண்ணாங்கட்டி, லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் படம், நடிகர் ஜெய்யுடன் ஒரு படம், துரை செந்தில்குமார் இயக்கத்தில் ஒரு படம் உள்பட அரை டஜன் படங்கள் உள்ளன. இதுதவிர பல்வேறு தொழில்களையும் செய்து வருகிறார் நயன்தாரா. அண்மையில் கூட 9ஸ்கின் என்கிற அழகு சாதன பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனம் ஒன்றை தொடங்கினார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
nayanthara salary
9ஸ்கின் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளதோடு, அந்நிறுவனத்தின் விளம்பர தூதராகவும் நயன்தாரா செயல்பட்டு வருகிறார். அவர் சமீபத்தில் 9 ஸ்கின் நிறுவன விளம்பரங்களுக்காக வித விதமான கவர்ச்சி உடையில் நடத்திய போட்டோஷூட் புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதேபோல் மற்ற பிராண்ட் விளம்பரங்களிலும் நடித்து நடிகை நயன்தாரா கோடி கோடியாய் சம்பாதித்து வருகிறாராம்.
nayanthara salary for ad
அதன்படி அண்மையில் விளம்பரம் ஒன்றில் நடிப்பதற்காக நடிகை நயன்தாரா ரூ.5 கோடி சம்பளமாக வாங்கியதாக கூறப்படுகிறது. வெறும் 50 செக்ண்ட் மட்டுமே ஓடக்கூடிய அந்த விளம்பரத்திற்காக ஒரு செகண்ட்டுக்கு 10 லட்சம் வீதம் மொத்தம் 50 செகண்ட்டுக்கு 5 கோடி வாங்கி இருக்கிறார் நயன். ஒரு படத்தில் ஹீரோயினாக நடிக்கவே ரூ.12 கோடி மட்டுமே வாங்கும் நயன்தாரா, 50 செகண்ட் விளம்பரத்துக்கு 5 கோடி வாங்கியது தான் தற்போது கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது.
இதையும் படியுங்கள்...கண்டெண்ட் குடோன் கூல் சுரேஷ் முதல் வனிதா மகள் ஜோவிகா வரை! பிக்பாஸ் ஸ்கெட்ச் போட்டு தூக்கிய 18 பேர் லிஸ்ட் இதோ