பத்திரப்பதிவில் இன்று முதல் இது கட்டாயம்.. தமிழக பத்திரப்பதிவுத்துறை போட்ட கிடுக்குப்பிடி உத்தரவு.!
தமிழக பத்திரப்பதிவுத்துறை அதிரடி உத்தரவை போட்டுள்ளது. அது இன்று முதல் (அக்டோபர் 1) அமலுக்கு வந்துள்ளது.

நிலங்களின் புகைப்படம், புவியியல் விவரங்களுடன் பத்திரப் பதிவு செய்யும் நடைமுறை தமிழ்நாட்டில் இன்று முதல் அமலுக்கு வருகிறது . இதுநாள் வரை சொத்துகளைப் பதிவு செய்யும் போது நிலம், வீடுகளின் புகைப்படம் சேர்ப்பது இல்லை. இதனால் வீடுகளைப் பத்திரப்பதிவு செய்யும் போது காலி மனை என்று கூறி பதிவு செய்கிறார்கள்.
இதனால் ஏற்படும் கோடிக்கணக்கான வருவாய் இழப்பை தவிர்க்கும் வகையில் அக்.1-ம் தேதி முதல் நிலங்களின் புகைப்படம், புவியியல் விவரங்களுடன் பத்திரப் பதிவு துறை தமிழ்நாட்டில் நடைமுறைக்கு வருகிறது. தமிழ்நாடு பத்திரப் பதிவுத் துறை நிலங்களின் புகைப்படங்களை சேர்ப்பதை கட்டாயமாக்கியுள்ளது.
ஆள் மாறாட்டம், போலியான ஆவணங்கள் மூலம் போலி பத்திரப்பதிவுகள் நடந்தால், சார்பதிவாளரோ, பத்திரப் பதிவுத்துறை ஐஜியோ அதனை ரத்து செய்யக் கோரி, கோர்ட்டின் உதவியை சம்பந்தப்பட்டவர்கள் நாடி வந்தனர்.. அந்தவகையில், போலி பத்திரப்பதிவை ரத்து செய்யும் அதிகாரம் நீதிமன்றத்துக்கு மட்டுமே இதுநாள் வரை இருந்து வந்தது.
இனி பத்திரப்பதிவுத்தலைவரே, போலி பத்திரப்பதிவை ரத்து செய்யும் வகையில் அதிகாரம் வழங்கும் பத்திரப்பதிவு திருத்தச் சட்ட மசோதாவை, தமிழக சட்டசபையில் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டது. எனினும் தொடர்ந்து போலி பத்திரங்கள் மூலம் நடந்துகொண்டுதான் இருக்கிறது.. இதற்கும் தமிழக அரசு கடிவாளத்தை போட்டு வருகிறது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
சார்பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப்பதிவு செய்யும்போது சொத்தின் புகைப்படங்களை இணைக்க வேண்டும் என்றும், பதிவுக்கு வரும் ஆவணங்களில் பதியப்படும் சொத்துக்கள் குறித்த புகைப்படமும் ஆவணமாக இருக்க வேண்டும் என்று தமிழக அரசு சில நாட்களுக்கு முன்பு உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவானது இன்று முதல் அதாவது அக்டோபர் 1 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
இந்த புதிய நடைமுறையானது, அனைத்து சார் பதிவாளர் அலுவலகங்களிலும் பின்பற்றப்படும் என்றும், கூடுதல் வழிகாட்டுதல்கள் பதிவுத்துறை தலைவரால் தனியே வழங்கப்படும் பத்திரப்பதிவு நிலப் படத்தை சார் பதிவாளரிடம் கொடுத்தால் அவர் எவ்வாறு ஆவணங்களை எழுத வேண்டும் என்று வழிகாட்டுவார்.
பதிவுத் செய்யும் போது சொத்தில் உள்ள அனைத்து விவரங்களும் ஆவணத்தோடு சேர்த்து பதிவு செய்யப்பட்டுள்ளாத என்பதைப் பார்ப்பதுடன் விவரங்கள் பாதுகாப்பாக இருக்கும் என்று கூறினார். மனை அல்லது வீடுகளை சேர்க்கும் நடைமுறை அனைத்து சார்-பதிவாளர் அலுவலங்களிலும் பின்பற்றப்படும்" என அறிவிக்கப்பட்டுள்ளது.