Asianet News TamilAsianet News Tamil

திருப்பதியில் இலவச தரிசன டோக்கன்கள் ரத்து: தேவஸ்தானம் அதிரடி!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் குறிப்பிட்ட நாட்களில் இலவச தரிசன டோக்கன்கள் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது

Tirumala Tirupati devasthanam cancel free darshan token smp
Author
First Published Oct 1, 2023, 1:44 PM IST

ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையான் கோயில் மிகவும் புகழ்பெற்றது. இங்கு நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். தற்போது புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த நாள் என்பதாலும், விடுமுறை தினங்கள் என்பதாலும் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக உள்ளது.

புரட்டாசி மாத இரண்டாவது சனிக்கிழமை ஆன நேற்று திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுமார் ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்தனர். இதனால் இலவச தரிசனத்திற்காக வந்த பக்தர்கள் 48 மணி நேரம் வரை சுமார் 10 கிலோ மீட்டர் வரை நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், புரட்டாசி மாத சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்களுக்கு இலவச தரிசனத்திற்கான டோக்கன்கள் வழங்கப்பட மாட்டாது என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது

ஏழுமலையானை தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் திருப்பதிக்கு வந்து நேரடியாக இலவச தரிசன டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம். அலிபிரியில் இருக்கும் பூதேவி காம்ப்ளக்ஸ், திருப்பதியில் உள்ள சீனிவாசம் தங்கும் விடுதி ஆகியவற்றில் சர்வதரிசன டோக்கன்கள் முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது.

தூய்மையே சேவை: பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று களத்தில் குதித்த மக்கள்!

புரட்டாசி மாதத்தில் பக்தர்கள் வருகை அதிகமாக இருப்பதால், இலவச தரிசனத்திற்காக டோக்கன் வாங்கிய பக்தர்களையும், டோக்கன்கள் வாங்காத பக்தர்களையும் கோயிலுக்குள் அனுப்பி கையாளுவதில் இரண்டு வெவ்வேறு நடைமுறைகளை பின்பற்றுவதில் பல்வேறு நிர்வாக ரீதியான சிரமங்களை தேவஸ்தான நிர்வாகம் எதிர்கொள்ள நேர்கிறது. இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில், அக்டோபர் மாதம் 7, 8, 14 ,15 ஆகிய தேதிகளில் இலவச தரிசனத்திற்கான டோக்கன்கள் வழங்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

இதை கவனத்தில் கொண்டு பக்தர்கள் ஒத்துழைப்பு தருமாறு திருமலை திருப்பதி தேவஸ்தானம் தனது எக்ஸ் பக்கத்தில் கேட்டுக் கொண்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios