மாதவிடாய் காலத்தில் பெண்கள் அந்தரங்க உறுப்பு சுகாதாரத்தை கடைபிடிக்க வேண்டும். ஒவ்வொரு 4 அல்லது 5 மணி நேரத்திற்கும் ஒரு நாப்கினை மாற்ற வேண்டும். அப்படி செய்ய தவறினால் பல ஏற்படும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். அது குறித்து முழுமையாக இங்கு காணலாம்.
நிபுணர்களின் கூற்றுப்படி, பல பெண்கள் தங்களுக்கு ஏற்படும் இரத்தப்போக்கிற்கு ஏற்றவாறு நாப்கினை மாற்றுகிறார்கள். ரத்தப்போக்கு அதிகமோ குறைவோ சுமார் 4 மணி நேரத்துக்கு ஒருமுறை நாப்கினை மாற்ற வேண்டும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். நாப்கினை மாற்றுவதால் பாக்டீரியா தொற்று ஏற்படும் அபாயம் குறைகிறது. இரத்தப்போக்கு இல்லாமல் ஒரு நாள் முழுவதும் நாப்கின் வைத்தாலும் பிறப்புறுப்பு தொடர்பான பிரச்சனைகள் தோன்றும்.
லுகோரியா என்றால் பிறப்புறுப்பிலிருந்து வெள்ளை அல்லது மஞ்சள் நிற வெளியேற்றம் ஏற்படும். இது பெண்களை பலவீனப்படுத்துகிறது. நாப்கினை சரியான நேரத்தில் மாற்றாமல் இருக்கும் பெண்களை இந்த நோய் தாக்குகிறது.
அந்தரங்க உறுப்பில் அரிப்பு ஏற்படும். நாப்கின் மாற்றாமல் இருப்பது தோல் அரிப்பு, தோல் தொற்றுக்கு காரணமாகிறது. நாள் முழுவதும் அல்லது 4 மணி நேரத்திற்கு மேல் ஒரே நாப்கின் பயன்படுத்தினால், அது தோலில் தடிப்புகள், எரிச்சலை உண்டாக்கும். அந்தரங்க உறுப்பில் அல்லது அதைச் சுற்றியும் கொப்புளங்கள் ஏற்படலாம். மாதவிடாய் காலங்களில் நாப்கினை மாற்றாமல் விட்டால் பூஞ்சை, பாக்டீரியா தொற்றுக்கு வாய்ப்பாக அமையும்.