குழந்தைகள் படித்ததும் உடனே மறக்குறாங்களா? இந்த '1' டிப்ஸ்  ஃபாலோ பண்ணா மறக்காது!!

First Published | Nov 19, 2024, 2:08 PM IST

Study Tips For Children : உங்கள் குழந்தை படித்த உடனே மறக்காமல், அதை ஞாபகம் வைத்திருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

Study Tips For Children In Tamil

கல்வி தான் குழந்தைகளின் சொத்து. பெரும்பாலான குழந்தைகள் படிப்பில் படும் சுட்டியாகவே இருப்பார்கள். அவர்கள் எவ்வளவு படித்தாலும் படித்தது அப்படியே ஞாபகம் வைத்துக் கொள்வார்கள். ஆனால் சிலர் மணி கணக்கில் உட்கார்ந்து படித்தாலும், படித்தது ஞாபகம் வைத்துக் கொள்வதற்கு ரொம்பவே சிரமப்படுவார்கள். இதனால் அவர்கள் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுப்பார்கள். 

Study Tips For Children In Tamil

உங்களது குழந்தையும் படித்ததை ஞாபகம் வைத்துக் கொள்வதற்கு ரொம்பவே சிரமமாக உணர்கிறார்களா? அப்படியானால் கீழே கொடுக்கப்பட்டுள்ள 4 விஷயங்களை மட்டும் பின்பற்றினால் போதும் அவர்கள் படித்தது அப்படியே நியாபகமாக இருக்கும். அது என்னவென்று இங்கு பார்க்கலாம்.

இதையும் படிங்க:  5 வயதிற்குள் உங்க குழந்தைக்கு கண்டிப்பா சொல்லிக் கொடுக்க வேண்டிய விஷயங்கள்!!

Tap to resize

Study Tips For Children In Tamil

குழந்தைகள் படித்தது மறக்காமல் நியாபாகம் வைத்திருக்க 4 வழிகள் இங்கே:

1. புரிந்து படிக்க வைக்கவும்:

குழந்தைகள் மணி கணக்கில் படிப்பது பெரிய விஷயம் அல்ல. ஆனால் அதை எப்படி படிக்க வேண்டும் என்பதுதான் ரொம்பவே முக்கியம். அதாவது, குழந்தைகள் படிக்கும் பாடத்தை புரிந்து படித்தால் ஞாபகமாக இருக்கும் நல்ல மதிப்பெண்கள் எடுக்க அதிக வாய்ப்பு உள்ளது. வேண்டுமானால் ஏதாவது எளிமையான வார்த்தைகளை நினைவில் வைத்துக் கூட படிக்கலாம்.

Study Tips For Children In Tamil

2. நண்பர்களுக்கு சொல்லிக் கொடுப்பது:

குழந்தைகள் படித்ததை ஞாபகமாக வைத்துக் கொள்ள நண்பர்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். குழந்தைகள் படித்ததை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளும் போது அவர்கள் படித்தது அப்படியே ஞாபகமாக இருக்கும், ஒருபோதும் மறக்கவே மறக்காது.

இதையும் படிங்க: குழந்தைங்க படிக்குறப்ப 'இப்படி' மட்டும் சொல்லாம இருங்க.. சூப்பரா படிப்பாங்க!!

Study Tips For Children In Tamil

3. திரும்ப படிக்கவும்:

ஒருவேளை உங்கள் குழந்தைக்கு நண்பர்களுக்கு சொல்லிக் கொடுக்கும் போது அல்லது படித்தது மறந்துவிட்டாலோ திரும்பவும் படிக்க வேண்டும். இது தவிர, கூகுள், youtube போன்ற சோசியல் வீடியோக்கள் வாயிலாக கற்றுக் கொள்ளலாம். ஏனெனில் சிலருக்கு படிப்பதை விட கேட்டால் அல்லது சில பார்த்தால் மட்டுமே புரியும். எனவே, இந்த வலியையும் குழந்தைகள் முயற்சி செய்து பார்க்கலாம்.

Study Tips For Children In Tamil

4. மதிப்பாய்வு செய்ய வேண்டும்:

குழந்தைகள் படிக்கும் போது அதன் மூலம் அவர்கள் என்னவெல்லாம் கற்றுக் கொண்டார்கள் மற்றும் மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுக்கும் போது, அளவிற்கு சொல்லிக் கொடுக்கிறார்கள் என்பதை பற்றி மதிப்பாய்வு செய்ய வேண்டும். இதன் மூலம் அவர்கள் படித்தால் ஒருபோதும் மறக்காது மற்றும் தேர்வில் நல்ல மார்க் வாங்க முடியும்.

Latest Videos

click me!