Cleaning Tips : உங்கள் வீட்டு பாத்ரூம் வாளி மற்றும் கப்பில் உப்பு கறை மற்றும் மஞ்சள் கறை படிந்திருந்தால் அவற்றை மிக எளிதாக சுத்தம் செய்வது எப்படி என்று இங்கு பார்க்கலாம்.
வீடு மட்டும் சுத்தமாக இருந்தால் போதாது. குளியலறையும் சுத்தமாக இருக்க வேண்டும். ஏனெனில் கிருமிகள் வளரும் அபாயம் இங்கு அதிகம் உள்ளது. எனவே குளியலறை சுத்தமாக இருப்பது ரொம்பவே முக்கியம்.
25
Bathroom Bucket And Mug Cleaning Tips In Tamil
குளியலறை சுத்தமாக இருக்க வேண்டுமெனில் அங்கு இருக்கும் வாளி, கப் போன்றவையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். ஆனால் பெரும்பாலானோர் அதில் அதிக கவனம் செலுத்துவதில்லை. அவற்றை நீண்ட காலம் சுத்தம் செய்யாமல் பயன்படுத்தினால் உப்பு கறை படிந்து மஞ்சள் நிறமாக மாறிவிடும்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில், வீட்டில் இருக்கும் இரண்டு பொருட்களை வைத்து குளியலறையில் இருக்கும் மஞ்சள் கறை படிந்த வாளி மற்றும் கப்பை மிக எளிதாக சுத்தம் செய்வது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
குளியலறையில் இருக்கும் வாளி மற்றும் கப்பை சுத்தம் செய்வது எப்படி?
பேக்கிங் சோடா:
இதற்கு முதலில் ஒரு கிண்ணத்தில் பேக்கிங் சோடாவை எடுத்துக் கொள்ளுங்கள். பிறகு அதில் எலுமிச்சை சாறு மற்றும் டிஷ் வாஷ் சேர்த்து நன்றாக கலக்கவும். இப்போது தேவையில்லாத டூத் பிரஷ்சை கொண்டு தயாரித்து வைத்த கலவையில் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து அழுக்கு படிந்த வாளி மற்றும் கப்பில் நன்றாக தடவி சுமார் 15 நிமிடங்கள் அப்படியே வைக்கவும். பிறகு சூடான அல்லது குளிர்ந்த நீர் கொண்டு அவற்றை நன்றாக சுத்தம் செய்யுங்கள்.
55
Bathroom Bucket And Mug Cleaning Tips In Tamil
வினிகர்:
அழுக்கு படிந்த வாளி மற்றும் கப்பை பளபளக்க செய்ய பேக்கிங் சோடாவுடன் வினிகரும் பயன்படுத்தலாம். இதற்கு ஒரு கிண்ணத்தில் சிறிதளவு பேக்கிங் சோடா மற்றும் 2 ஸ்பூன் வினிகர் கலந்து கொள்ளுங்கள். ஒரு டூத் பேஸ்ட் உதவியுடன் அந்த கலவையை அழுக்கு படிந்த வாலி மற்றும் கப்பில் தடவவும். சுமார் பத்து நிமிடம் கழித்து எப்போதும் போல தண்ணீரில் கழுவும். இப்போது பார்த்தால் வாலி அழுக்கு நீங்கி பார்ப்பதற்கு புதிதாக இருக்கும்.