வெல்லத்தில் கலப்படம்; போலியை சுலபமா கண்டுபிடிக்க இந்த '1' டெக்னிக் போதும்!!

First Published | Nov 19, 2024, 8:25 AM IST

Purity Of Jaggery : நீங்கள் வாங்கி இருக்கும் வெல்லம் போலியானதா? என்று சுலபமாக கண்டுபிடிப்பது எப்படி என்று இங்கு பார்க்கலாம்.

Ways To Identify Authentic Jaggery In Tamil

தற்போது பலரும் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு சர்க்கரைக்கு பதிலாக வெல்லத்தை பயன்படுத்துகிறார்கள். ஆனால் அதிலும் கலப்படம் வந்துவிட்டது. இப்போது சந்தையில் பல நிறங்களில் வெல்லம் விற்பனை செய்யப்படுகிறது. அதில் எது ஒரிஜினல் மற்றும் போலி என்று கண்டுபிடிப்பது ரொம்பவே கஷ்டம். இத்தகைய சூழ்நிலையில் போலியான வெல்லத்தை சுலபமாக கண்டுபிடிப்பது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

Ways To Identify Authentic Jaggery In Tamil

வெல்லதில் இருக்கும் சத்துக்கள்:

வெல்லத்தில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு சத்து, பொட்டாசியம், துத்தநாகம், புரதம் மற்றும் வைட்டமின் ஆகியவை நிறைந்துள்ளன.

இதையும் படிங்க:  வறுத்த கடலை, வெல்லம் சுவையே தனி..  'இப்படி' அடிக்கடி சாப்பிட்டால் எவ்ளோ நல்லது தெரியுமா?

Tap to resize

Ways To Identify Authentic Jaggery In Tamil

போலி வெல்லத்தை கண்டுபிடிப்பது எப்படி?

நிறம்:

உண்மையான வெல்லமானது அடர் பிரவுன் நிறத்தில் இருக்கும். ஆனால், போலியான வெல்லம் மஞ்சள் மற்றும் வெள்ளை நிறத்தில் இருக்கும்.  ஏனெனில் வெல்லத்தின் தூய்மைக்காக அதில் சோடா மற்றும் கெமிக்கல் சேர்க்கப்படுகின்றது.

Ways To Identify Authentic Jaggery In Tamil

சுவை:

உண்மையான வெல்லத்தின் சுவை மிகவும் இனிமையாகவும் மற்றும் நறுமணமாகவும் இருக்கும். அதே சமயம் போலி அல்லது கலப்படம் செய்யப்பட்ட வெல்லம் சில சமயங்களில் மிகவும் இனிப்பு அல்லது கசப்பான சுவையில் இருக்கும். மேலும் அதில் வாசனை இருக்காது.

இதையும் படிங்க: வெல்லமா? தேனா? வெயிட் லாஸ் பண்றதுக்கு எது நல்லது? தெரிஞ்சுக்க இதை படிங்க!

Ways To Identify Authentic Jaggery In Tamil

திரவத்தன்மை

வெல்லப்பாகு தயாரிக்கும் போது வெல்லத்தின் திரவத்தன்மை சற்று ஓட்டும் மற்றும் தடிமனாக இருக்கும். அது போல எளிதில் ஒட்டவில்லை என்றால் அது உண்மையானது. அதே சமயம் போலி அல்லது கலப்படம் செய்யப்பட்ட வெல்லம் ரொம்பவே தண்ணீயாக இருக்கும்.

Ways To Identify Authentic Jaggery In Tamil

பாகு நிறம்:

உண்மையான வெல்லத்தில் பாகு காய்ச்சும் போது அதன் நிறம் பிரவுன் மற்றும் கருப்பு நிறமாக மாறும். அதுவே கெமிக்கல் அல்லது போலி வெல்லத்தில் பாகு காய்ச்சும் போது அதன் நிறம் மஞ்சள் நிறமாக மாறும்.

Latest Videos

click me!