
இன்றைய காலகட்டத்தில் அமர்ந்த நிலையில் வேலை செய்வோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கூடவே அவர்களுடைய உடலில் கெஅ கொழுப்பும் சேர்ந்து வருகிறது. போதுமான உடல் செயல்பாடுகள் இல்லாதவர்கள் உடலில் கொழுப்பு கரையாமல் சேகரமாகிறது.
ஒரே இடத்தில் அங்கும் இங்கும் நகராமல் வேலை செய்யும் நபர்களிடத்தில் இந்தப் பிரச்சனை தலைதூக்கி வருகிறது. பொதுவாக நம்முடைய வயிற்றில் சேருகின்ற கொழுப்பு எளிதில் கரைவதில்லை. ஆனால் முறையாக முயற்சி செய்தால் நிச்சயம் பலன் கிடைக்கும். சரியான உணவு பழக்கம் இல்லாமல், போதுமான தூக்கமின்றி இருக்கும் பலர் இந்த தொப்பை பிரச்சனையில் சிக்கியுள்ளனர்.
முந்தைய காலங்களில் இல்லாத செல்போன் உள்ளிட்ட பல பொழுதுபோக்கு அம்சங்கள் இன்று உள்ளன. உணவு பழக்கங்களும் மாறியுள்ளன. இதுவே பலரின் தொப்பைக்கு காரணம். இளம் வயதினர் கூட தொப்பையுடன் அலையும் அவலம் நம் நாட்டில் பரவலாக காணப்படுகிறது. சிலர் தொப்பையை விரைவில் குறைக்க சில மருந்துகளையும், பொடிகளையும் எடுக்கத் தொடங்கியுள்ளனர். ஆனால் இந்த மாதிரி விஷயங்கள் ஆரோக்கியமானதல்ல என சுகாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: என்ன பண்ணாலும் தொப்பை மட்டும் குறையலயா? அப்ப இந்த ட்ரிக்ஸ ட்ரை பண்ணுங்க!
தொப்பையை குறைக்க எதை கவனிக்க வேண்டும்?
தொப்பையை குறைப்பது கடினமான காரியமாக இருந்தாலும் முடியாத விஷயமல்ல. வயிற்றில் கொழுப்பு ஒரே நாளில் சேர்வதில்லை. அது பலநாள் விவகாரம். அது போலவே தொப்பையை குறைக்கவும் பலநாட்கள் ஆகும். உடற்பயிற்சிகளை கடினமாக்கினால் சீக்கிரம் தொப்பையை குறைக்கலாம் என சிலர் நினைக்கின்றனர். ஆனால் வெறும் உடற்பயிற்சி தொப்பையை குறைப்பதில்லை. உணவுப் பழக்கம், வாழ்க்கை குறை, கார்டிசோல் உள்ளிட்ட பல காரணிகள் தொப்பையை குறைக்க முக்கிய காரணிகள்.
இதையும் படிங்க: இந்த கொரியன் டயட்டை ஃபாலோ பண்ணா போதும்; உங்கள் தொப்பை கண்டிப்பாக குறையும்!
தொப்பை குறைய எளிய தீர்வு:
தொப்பையை குறைய வேண்டுமென்றால் ஆரோக்கியமான உணவுகளை உண்பது அவசியம். துரித உணவுகள் ஆரோக்கியத்தின் எதிரி எனலாம். அதை தவிர்த்து உங்களுடைய உணவில் நீர்ச்சத்துள்ள பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் சேர்த்து கொள்ளுங்கள். உங்களுடைய தசை வளர்ச்சிக்கு புரதங்கள் அவசியம்.
தூக்கம்:
நாள்தோறும் 7 முதல் 8 மணி நேரம் ஆழ்ந்து உறங்க வேண்டும். சரியான தூக்கம் இல்லாமல் இருந்தால் உடலில் கார்டிசோல் என்ற ஸ்ட்ரெஸ் ஹார்மோன் அதிகமாக சுரக்கும். இது மன அழுத்தத்தை உண்டாக்கும். சிலருக்கு மன அழுத்தம் காரணமாக உடல் எடை அதிகரிக்கும்.
தண்ணீர்:
தினமும் 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும். இதனால் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறும். உங்களின் வளர்சிதை மாற்றம் அதிகரிக்கும். நிறைய தண்ணீர் குடித்தால் பசி குறையும். அதிகமாக சாப்பிடாமல் கட்டுப்பாடாக இருக்க உதவும். தேநீருக்கு பதிலாக எலுமிச்சை தண்ணீர் குடிக்கலாம். இது கொழுப்பை குறைக்க உதவும்.
உடற்பயிற்சி:
உங்கள் உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைக்க உடற்பயிற்சிகளும் அவசியம். தினமும் நடப்பது, ஓடுவது உள்ளிட்ட கார்டியோ பயிற்சிகள் செய்யலாம். உடலுக்கு வலிமை தரும் வெயிட் லிப்டிங் போன்றவை செய்யலாம். நாள்தோறும் உடற்பயிற்சி செய்வது அவசியம். வாரத்தில் 5 நாட்கள் உடற்பயிற்சி கட்டாயம். இது தவிர ஜாகிங், நீச்சல், சைக்கிள் ஓட்டுதல், யோகா ஆகியவையும் கெட்ட கொழுப்பை எரிக்க உதவும். வயிற்றில் உள்ள கொழுப்பை குறைக்க அமர்ந்த நிலையில் செய்யும் ஏராளமான பயிற்சிகள் உள்ளன. நாற்காலியில் அமர்ந்த நிலையில் க்ரஞ்சஸ் செய்யலாம். லெக் ரைஸ் செய்வது உங்களுடைய வயிற்று தசைகளை வலுவாக்கும்.
தவிர்க்க வேண்டிய உணவுகள்:
1). கேக், பப்ஸ் உள்ளிட்ட
2). அனைத்து பேக்கரி 3).உணவுகள்
4). பதப்படுத்தப்பட்ட உணவுகள்
5). சர்க்கரை உணவுகள், கூல்ட்ரிங்க்ஸ்
6). பொறித்த உணவுகள்
7). சிப்ஸ் போன்ற நொறுக்குத்தீனிகள்
8). துரித உணவுகள் போன்றவை கொழுப்பை அதிகரிக்கும்.
சாக்லேட் சாப்பிட தோன்றும் போது வாழைப்பழம் உள்ளிட்ட பழங்கள் உண்ணலாம். கூல்ட்ரிங்க்ஸுக்கு பதிலாக சர்க்கரை சேர்க்காத பழச்சாறு, மூலிகை தேநீர், கிரீன் டீ அருந்தலாம்.