நீதா அம்பானியின் பாப்கார்ன் ஹேண்ட்பேக் வைரல்; அதன் விலை இத்தனை லட்சமா?

Published : Nov 18, 2024, 03:03 PM IST

நீதா அம்பானி தனது மகள் இஷா அம்பானியுடன் மும்பையில் நடந்த நிகழ்வில் கலந்து கொண்டார். அப்போது அவர் வைத்திருந்த பாப்கார்ன் ஹேண்ட்பேக் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. 

PREV
14
நீதா அம்பானியின் பாப்கார்ன் ஹேண்ட்பேக் வைரல்; அதன் விலை இத்தனை லட்சமா?

நீதா அம்பானி எப்போதுமே தனது பிரமிக்க வைக்கும் ஆடைகள் மற்றும் நகைகள், தோற்றம் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார். ஆடம்பரமான வாழ்க்கை முறைக்கு பெயர் பெற்ற நீதா அம்பானி தனது ஆடம்பர கார்கள் மற்றும் கடிகாரங்களின் சேகரிப்பு வரை கவனம் ஈர்த்து வருகிறார். 

24

அந்த வகையில் தற்போது நீதா அம்பானியின் பாப்கார்ன் ஹாண்ட் பேக் கவனம் ஈர்த்து வருகிறது. மும்பையில் நடந்த நட்சத்திர அழகு நிகழ்வில் தனது மகள்  இஷா அம்பானி உடன் நீதா அம்பானி கலந்து கொண்டார். அப்போது நீதா அம்பானி தனது கையில் வைத்திருந்த பாப்கார்ன் பேக் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அவர் வைத்திருந்த இந்த பாப்கார் பேகின் விலை ரூ.24 லட்சம் என்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

34

கருப்பு மற்றும் தங்க சங்கிலி, முத்துக்கள், தங்க நிறத்தில், முன்பக்கத்தில் அலங்கரிக்கப்பட்ட 'பாப் கோகோ' மற்றும் மென்மையான இளஞ்சிவப்பு நிறங்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த ஹேண்ட் பேக் முத்துக்கள் மற்றும் தங்க நிற உலோகத்தால் வடிவமைக்கப்பட்டது. இதுவே இந்த ஹேண்ட் பேகிற்கு ஆடம்பர உணர்வை அளிக்கிறது.

 

44

இஷா அம்பானி, ஜியோர்ஜியோ அர்மானி கஸ்டம் கோச்சர் குழுமத்தை வடிவமைக்க ஜூடித் லீபர் பையுடன் வந்திருந்தார்.. இது ஜஸ்ட் ஃபார் யூ வில் சில்வர் பேக் என்று அழைக்கப்படுகிறது. கையால் வடிவமைக்கப்பட்ட இந்த ஹேண்ட் பேக் பளபளக்கும் படிகங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது, காலமற்ற அதிநவீனத்தைப் பெருமைப்படுத்துகிறது. இது அதிகாரப்பூர்வமான ஜூடித் லீபர் இணையதளத்தில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 5 லட்சம் ஆகும். நீதா அம்பானி, இஷா அம்பானியின் ஆடம்பர ஹேண்ட் பேகுடன் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. 

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories