மழையால 'ஷூ' அடிக்கடி ஈரமாகிடுதா? இப்படி செய்தால் 'விரைவில்' உலரும்!!

First Published | Nov 18, 2024, 1:50 PM IST

Wet Shoes Drying Tips : மழை காலத்தில் உங்கள் ஷூ நனைந்துவிட்டால் அதை காயவைப்பது எப்படி என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

Wet Shoes Drying Tips In Tamil

மழைக்காலம் வெப்பத்திலிருந்து நிவாரணம் அளிக்கிறது. ஆனாலும் இந்த பருவம் பல சிரமங்களையும் கூட கொண்டு வருகிறது. அவற்றில் ஒன்றுதான் சூரிய ஒளி மிகவும் குறைவாக இருப்பது இதன் காரணமாக ஈரமான பொருட்களை காய வைப்பது சற்று கடினமாக இருக்கும்.

Wet Shoes Drying Tips In Tamil

துணிகளை வாஷிங் மிஷினில் துவைத்தால், காற்றில் சுலபமாக காய வைத்து விடலாம். ஆனால் மழைக்காலத்தில் ஷூக்கள் நனைந்தால் அதை காய வைப்பது ரொம்பவே கஷ்டம். இதை நாம் அனைவரும் எதிர்கொள்ளும் ஒரு பொதுவான பிரச்சனையாகும். ஆனால் இந்த பிரச்சனைக்கு சிறந்த தீர்வு இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளன. அவை என்னவென்று பார்க்கலாம்.

இதையும் படிங்க: சாக்ஸ் அணியாமல் ஷூ போடுறதுல இத்தனை விஷயங்கள் இருக்கா?

Latest Videos


Wet Shoes Drying Tips In Tamil

மழைக்காலத்தில் ஷூக்களை காய வைப்பது எப்படி?

ஹேர் டிரையர்

ஈரமாக இருக்கும் ஷூக்களே ஹேர் டிரையர் மூலம் சுலபமாக காய வைத்து விடலாம். இதற்கு ஷூவில் இருந்து தண்ணீர் வடியும் வரை வெளியே வைக்கவும். பிறகு ஹேர் டிரையரை பயன்படுத்தி ஷூவை காய வைக்கவும். ஹேர் ட்ரையிலிருந்து வரும் சூடான காற்று ஷூவில் இருக்கும் ஈரப்பதத்தை உலர்த்தும்.

Wet Shoes Drying Tips In Tamil

நியூஸ் பேப்பர்

இதற்கு ஷூவில் உள்ளே இருக்கும் இன்சோலை முதலில் வெளியே எடுத்து நன்கு காய வைக்கவும். பிறகு நியூஸ் பேப்பரை ஷூ வில் வைத்து நிரப்பவும். சுமார் ஒரு மணி நேரம் கழித்து நியூஸ் பேப்பரை வெளியே எடுக்கவும். பின் பேனுக்கு அடியில் சிறிது நேரம் ஷூவை வைக்க வேண்டும்.

இதையும் படிங்க:  

Wet Shoes Drying Tips In Tamil

ஷூ டிரையர்

உங்களது ஷூ தினமும் நனைகிறது என்றால் கடைகளில் ஷூ டிரையர் விற்பனையாகிறதும் அதை பயன்படுத்தி ஷூவை விரைவாக காய வைக்கலாம்.

Wet Shoes Drying Tips In Tamil

ஷூ வில் துர்நாற்றம் அடித்தால் இப்படி செய்ங்க:

மழைக்காலத்தில் ஷூ வை காய வைத்த பிறகு அதில் துர்நாற்றம் அடித்தால் வினிகர் மற்றும் தண்ணீரை சம அளவு எடுத்து ஷூ மீது தெளிக்கவும். பிறகு ஷூவை திறந்தவெளியில் காய வைக்க வேண்டும்.

குறிப்பு : நீங்கள் ஷூவை காய வைக்கும் போது ஷூ லேஸ்கள் மற்றும் அதன் உள்பகுதிகளை தனித்தனியாக எடுத்து காய வைக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அப்போதுதான் ஷூ  எளிதாகவும், உடனடியாகவும் காய்ந்து விடும்.

click me!