கிராம்பு என்பது சமையலறையில் பயன்படுத்தப்படும் நல்ல மணம் கொண்ட மசாலா பொருட்களில் ஒன்றாகும். இது வெறும் மசாலா பொருள் மட்டுமல்ல, ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைக்க உதவும் சில மசாலா பொருட்களில் இதுவும் ஒன்றாகும்.
கிரம்பு பல நோய்களிலிருந்து நிவாரணம் அளிக்கிறது. அதனால் தான் இது ஆயுர்வேத மருத்துவத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. நாம் பயன்படுத்தும் டூத் பேஸ்ட் முதல் பிரியாணி வரை என கிட்டத்தட்ட எல்லாவற்றிலும் கிராம்பு உள்ளது.
25
Clove Drink For Weight Loss In Tamil
அந்த வகையில், கிராம்பு உடல் எடையை குறைக்க உதவும் தெரியுமா? நீங்கள் உடல் எடையை குறைக்க நினைத்தால் கிராம்பு நிச்சயம் உங்களுக்கு உதவும். ஏனெனில் கிராமத்தில் இருக்கும் பண்புகள் செரிமானம் மற்றும் வளர்ச்சியை மாற்றத்தை மேம்படுத்த உதவுகிறது.
மேலும் இது கொழுப்பை வேகமாக எரிக்க பெரிதும் உதவுகிறது. கிராம்பில் ஆன்ட்டி ஆக்ஸிடன்ட்கள் அதிக அளவு உள்ளது. அது தவிர இதில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் நிறைந்து காணப்படுகின்றன.
இத்தகைய சூழ்நிலையில், கிராம்புடன் சில மசாலாப் பொருட்களை சேர்த்து ஒரு பானத்தை தயாரித்து குடித்து வந்தால் உடல் எடை மளமளவென குறைந்துவிடும். இப்போது அந்த பானத்தை தயாரிப்பது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
கிராம்பு - 50 கிராம்
இலவங்கப்பட்டை - 50 கிராம்
சீரகம் - 50 கிராம்
தயாரிக்கும் முறை:
இதற்கு முதலில் அடுப்பில் ஒரு பேனை வைத்து அதில் மேலே சொன்ன அனைத்து பொருட்களையும் சேர்த்து நன்றாக வாசனம் வரும் வரை வதக்கவும். பிறகு அதை ஆற வைத்து மிக்ஸி ஜாரில் போட்டு பொடியாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அரைத்த பொடியை காற்று புகாத ஒரு கண்ணாடி ஜாடியில் போட்டு ஒரு வாரம் வரை வைத்து பயன்படுத்தலாம்.
இப்போது ஒரு கிளாஸ் தண்ணீரில், தயாரித்த பொடியை ஒரு ஸ்பூன் சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து, ஆற வைக்கவும். பிறகு அதை வடிகட்டி அதில் சிறிதளவு தேன் சேர்த்து தினமும் காலை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
55
Clove Drink For Weight Loss In Tamil
கிராம்பு நன்மைகள்:
கிராம்பு எடை இழப்புக்கு மட்டுமல்ல ஒட்டு மொத்த ஆரோக்கியத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும். அதன் நன்மைகள் இங்கே:
- டீயில் கிராம்பு சேர்த்து குடித்து வந்தால் சளி, காய்ச்சல் மற்றும் பல வகையான தொற்றுகளில் நிவாரணம் அளிக்கும்.
- கிராம்பு ஒரு இயற்கையான அறை புத்துணர்ச்சி என்பதால், இதை உங்கள் வீட்டின் உலர்ந்த இடங்களில் வைக்கவும்.