Ginger Tea In Tamil
பெரும்பாலான இந்தியர்கள் காலையில் எழுந்தவுடன் ஒரு கப் டீ குடித்த பிறகு தான் தங்களது நாளை தொடங்குவார்கள். ஒரு கப் டீ அவர்களை சோர்வில்லாமல் புத்துணர்ச்சியாக வைக்கும் என்று நம்புகிறார்கள். இவர்களில் பலரும் ஒருநாளை இரண்டு அல்லது நான்கு கப் டீ குடிப்பார்கள்.
டீயில் ஏலக்காய் டீ, இஞ்சி டீ, மசாலா டீ என பல வகைகள் உள்ளன. அந்த வகையில், இஞ்சி டீ குடிப்பதால் பல நன்மைகள் கிடைக்கும். அதுவும் குறிப்பாக குளிர்காலத்தில் ஏற்படும் சளி, இருமல், தொண்டை வலி போன்றவற்றிற்கு இஞ்சி டீ குடிப்பது ரொம்ப மிகவும் நன்மை பயக்கும்.
இதையும் படிங்க: காலையில வெறும் வயிற்றில் இஞ்சி டீ குடிக்கும் நபரா? அப்ப 'இத' பாருங்க!
Ginger Tea In Tamil
டீ பிரியர்கள் குளிர்காலத்தில் அடிக்கடி இஞ்சி டீ குடிக்க விரும்புவார்கள். காரணம் இஞ்சி ஒரு வெப்பமயமாதல் விளைவைக் கொண்டுள்ளதால் குளிர் காலத்தில் இஞ்சிக்கு குளிப்பது ரொம்பவே நல்லது.
ஆனால் பலர் இஞ்சி டீயை தவறான முறையில் போடுகிறார்கள். இதனால் அதன் சுவை நன்றாக இருக்காது. அதாவது பெரும்பாலானோர் இஞ்சி டீ போடும்போது பால், சர்க்கரை, டீத்தூள், இஞ்சி, தண்ணீர் என அனைத்தையும் ஒரே நேரத்தில் சேர்த்து டீ போடுவார்கள். நீங்களும் இந்த தவறை செய்தால் இனி அப்படி செய்யாதீர்கள் ஏனெனில் எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் சேர்த்து டீ போட்டால் அந்த டீ குடிப்பதற்கு நன்றாக இருக்காது. மேலும் சிலர் அதிக அளவு இஞ்சி சேர்த்து விடுவார்கள். இதனால் டீயின் சுவை மாறிவிடுகிறது. இத்தகைய சூழ்நிலையில், சுவையான இஞ்சி டீ போடுவது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
Ginger Tea In Tamil
இஞ்சி டீ சுவையாக போடுவது எப்படி?
இதற்கு முதலில் அடுப்பில் டீ பாத்திரத்தை வைத்து அதில் தண்ணீர், பால், சர்க்கரை சேர்த்து நன்றாக கொதிக்க விடுங்கள். இஞ்சியை தோல் நீக்கி சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். பால் நன்றாக கொதித்ததும் அதில் வெட்டி வைத்த இஞ்சி சேர்த்து ஒரு நிமிடம் மட்டுமே கொதிக்க விடுங்கள். வேண்டுமானால் இஞ்சியை துருவியும் போடலாம். இப்போது தேயிலையை சேர்த்து இரண்டு நிமிடம் மட்டுமே
கொதிக்க வைத்து விட்டு பிறகு பாத்திரத்தை கீழே இறக்கி வைத்து விடுங்கள். அவ்வளவுதான் சுவையான இஞ்சி டீ தயார்.
இதையும் படிங்க: இஞ்சி டீ செம டேஸ்ட்: ஆனா இந்த பிரச்சனை உள்ளவர்களுக்கோ விஷயத்திற்கு சமம் ஜாக்கிரதை!
Ginger Tea In Tamil
இஞ்சி டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்ன?
இஞ்சியில் இயற்கையாகவே வெப்பமானது என்பதால், குளிர்காலத்தில் இஞ்சி டீ போட்டு குடிப்பது ரொம்பவே நல்லது. மேலும் இஞ்சி டீ நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க செய்யும். குறிப்பாக குளிர்காலத்தில் ஏற்படும் பல தொற்று நோய்களிலிருந்து உங்களை பாதுகாக்கும். சளி, இருமல் மற்றும் தொண்டை வலி ஆகியவற்றிலிருந்து இஞ்சி டீ நிவாரணம் அளிக்கும்.
இது தவிர இஞ்சி டீ செரிமானத்தை சீராக வைத்திருக்கும், வலி மற்றும் வீக்கத்தை குறைக்கும், வாந்தி, குமட்டல் பிரச்சனைகளை போக்கும்.