உருளைக்கிழங்கு தோலுக்கு இப்படி ஒரு சக்தியா? மாரடைப்பு வராம தடுக்கும் தெரியுமா?!

Published : Nov 18, 2024, 08:17 AM IST

Potato Peels Health Benefits : பொதுவாக உருளைக்கிழங்கு தோலை குப்பையில் போடுவது வழக்கம். ஆனால், உண்மையில் அதில் அதிகளவு ஊட்டச்சத்துக்கள் உள்ளன தெரியுமா? இப்போதுஉருளைக்கிழங்கு தோலின் நன்மையை அறிந்து கொள்ளலாம்.

PREV
15
உருளைக்கிழங்கு தோலுக்கு இப்படி ஒரு சக்தியா? மாரடைப்பு வராம தடுக்கும் தெரியுமா?!
Potato Peels Health Benefits In Tamil

பெரும்பாலான இந்திய வீடுகளில் எந்த காய்கறி இருக்கிறது இல்லையோ கண்டிப்பாக எல்லாருடைய வீட்டிலும் உருளைக்கிழங்கு இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு காய்கறி எதுவென்றால் அது உருளைக்கிழங்கு தான். 

பொதுவாக உருளைக்கிழங்கின் தோலை நீக்கி சமைப்பது வழக்கம். ஆனால் உருளைக்கிழங்கு தோலுடன் சேர்த்து சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா? 

25
Potato Peels Health Benefits In Tamil

ஆம், உருளைக்கிழங்கு தோளில் நார்ச்சத்து, இரும்புச்சத்து, பொட்டாசியம், வைட்டமின் சி, வைட்டமின் பி உள்ளிட்ட பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. அவை அனைத்தும் பல்வேறு உடல் நல பிரச்சினைகளை சரி செய்ய பெரிதும் உதவுகிறது. எனவே உருளைக்கிழங்கு தோலின் நன்மைகள் என்ன என்பதை பற்றி இப்போது இந்த பதிவில் பார்க்கலாம்.

இதையும் படிங்க:  ஒரு மாதம் உருளைக்கிழங்கு சாப்பிடாம இருந்தால் ஆரோக்கியம் எப்படி இருக்கும் தெரியுமா?

35
Potato Peels Health Benefits In Tamil

இதயத்தை ஆரோக்கியமாக வைக்கும்

உருளைக்கிழங்கு தோலில் இருக்கும் நார்ச்சத்து ரத்தத்தில் இருக்கும் கொழுப்பின் அளவை குறைத்து இதய நோய் அபாயதம் ஏற்படுவதை தடுக்கும். மேலும் இதில் இருக்கும் பொட்டாசியம் இதயத்திற்கு நல்லது இதனால் மாரடைப்பு அபாயத்தை கணிசமாக குறைக்கும்.

புற்றுநோயை எதிர்த்துப் போராடும்

உருளைக்கிழங்கு தோலில் இருக்கும் பைட்டோ கெமிக்கல் சக்தி வாய்ந்த ஆன்ட்டி ஆக்ஸிடன்டாகச் செயல்படுகின்றது. மேலும் அவற்றில் குளோரோஜெனிக் அமிலங்களும் உள்ளன. இவை அனைத்தும் உடலை புற்றுநோயுலிருந்து பாதுக்காகும்.

45
Potato Peels Health Benefits In Tamil

முகம் பொலிவு பெற உதவும்

கண்களுக்கு கீழே கருவளையம் அல்லது முகத்தில் கரும்புள்ளிகள் இருந்தால் உருளைக்கிழங்கு தோலின் சாற்றை முகத்தில் தடவி வந்தால் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் மற்றும் கருவளையமம் மறைந்து, முகம் பொலிவாகும்.

ரத்த சோகைக்கு நல்லது

உருளைக்கிழங்கு தோலில் நல்ல அளவு இரும்பு சத்து உள்ளதால் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மற்றும் ரத்த சோகை ஆபத்தையும் குறைக்கும்.

இதையும் படிங்க:  வேக வைத்த உருளைக்கிழங்கை ஃப்ரிட்ஜில் வைக்கிறீர்களா? புற்றுநோய் வரலாம்.. ஜாக்கிரதை!

55
Potato Peels Health Benefits In Tamil

எலும்புகளுக்கு நல்லது

உருளைக்கிழங்கு தோலில் பொட்டாசியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், கல்சியம், தாமிரம் மற்றும் புத்தகங்கள் உள்ளன. எனவே, சமைக்கும்போது தோலுடன் சேர்த்து சமைத்து சாப்பிட்டால் எலும்புகள் உறுதியாகும்.

நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும்

உருளைக்கிழங்கு தோலில் வைட்டமின் சி நிறைந்துள்ளது மற்றும் அவற்றில் ஆன்ட்டி ஆக்ஸிடன்ட்கள் ஏராளமாக உள்ளன. இது தவிர அவற்றில் கால்சியம், வைட்டமின் பி உள்ளன. அவை அனைத்தும் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தி, தொற்று நோய்கள் ஏற்படாமல் தடுக்கிறது.

Read more Photos on
click me!

Recommended Stories