காலையில வெறும் வயிற்றில் இஞ்சி டீ குடிக்கும் நபரா? அப்ப 'இத' பாருங்க!
Ginger Tea Side Effects : காலையில் வெறும் வயிற்றில் இஞ்சி டீ குடித்தால் வரும் பிரச்சினைகள் என்ன என்பதை குறித்து இங்கு பார்க்கலாம்.
பொதுவாகவே, காலையில் எழுந்தவுடன் பெரும்பாலானோர் டீ குடிப்பது வழக்கம். அத்தகைய சூழ்நிலையில், பலர் இஞ்சி டீ தான் விரும்பி குடிப்பார்கள். இஞ்சி டீ செரிமான பிரச்சனைகளைத் தூண்டும், உடலை புத்துணர்ச்சியாக வைக்கும்.
ஆனால், இஞ்சி டீ அளவுக்கு அதிகமாக குடித்தால், அதுவும் காலையில் வெறும் வயிற்றில் குடித்தால், அது உடலில் பலவிதமான பிரச்சனைகளை உண்டாக்கும் தெரியுமா? காலையில் வெறும் வயிற்றில் இஞ்சி டீ குடித்தால் எந்த மாதிரியான பிரச்சினைகள் ஏற்படும் என்பதை பற்றி இங்கு பார்க்கலாம்.
வயிற்று பிரச்சனை : தினமும் காலை அதிகமாக இஞ்சி டீ குடித்தால் வயிற்றில் வாயு, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பல பிரச்சனைகள் ஏற்படும்.
முடி உதிர்தல் : தினமும் காலையில் அளவுக்கு அதிகமாக இஞ்சி டீ குடித்தால் வந்தால் முடி உதிர்தல் ஏற்படும். ஏனெனில், இதில் ஜின்சாரால் உள்ளது. ஏனெனில், இது முடிக்கு தீங்கு விளைவிக்கும்.
தூங்குவதில் சிரமம் : தினமும் அளவுக்கு அதிகமாக இஞ்சி டீ குடித்து வந்தால் தூக்கமின்மை பிரச்சனை ஏற்படும்.
தலை சுற்றல் : தினமும் அதிகமாக இஞ்சி டீ குடித்தால் உடலில் சோர்வு ஏற்படும். இதனால் பலவீன மற்றும் தலை சுற்றலுக்கு வழிவகும்.
வயிற்று எரிச்சல் : தினமும் காலை வெறும் வயிற்றில் அளவுக்கு அதிகமாக குடித்தால் வயிற்றில் எரிச்சல் மற்றும் அமிலத்தன்மை ஏற்படுத்தும்.
இரத்த அழுத்த பிரச்சனை : இரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள் இஞ்சி டீ குடிக்க கூடாது. அதுபோல சாதாரண இரத்த அழுத்தம் உள்ளவர்களும் இஞ்சி டீ அளவாக தான் குடிக்க வேண்டும். அளவுக்கு அதிகமாக குடித்தால் இரத்த அழுத்த பிரச்சனை ஏற்படும்.