MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • கிராம்புக்கு பின்னால் இவ்வளவு விஷயம் இருக்கா? வெறும் வயிற்றில் சாப்பிட்டால் '3' அற்புத நன்மைகள்!! 

கிராம்புக்கு பின்னால் இவ்வளவு விஷயம் இருக்கா? வெறும் வயிற்றில் சாப்பிட்டால் '3' அற்புத நன்மைகள்!! 

Cloves Health Benefits : காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் கிராம்புகளை மென்று சாப்பிட்டால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என இந்த பதிவில் காணலாம். 

2 Min read
Author : Kalai Selvi
Published : Nov 08 2024, 07:36 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Cloves Health Benefits In Tamil

Cloves Health Benefits In Tamil

கிராம்பு நறுமண பொருள்களில் ஒன்று. அசைவ உணவுகளில் சேர்க்கப்படும் சுவையான மசாலாவில் கிராம்பும் ஒன்று. ஆயுர்வேதத்தில் கிராம்பு பொக்கிஷமாக கருதப்படுகிறது. இதில் நிறைய மருத்துவ பண்புகள் காணப்படுகின்றன. கிராம்பில் வைட்டமின்கள், நார்ச்சத்து, புரதம், இரும்பு, கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், மாங்கனீஸ் கார்போஹைட்ரேட், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஆகியவை நிரம்பி காணப்படுகின்றன.

25
Cloves Health Benefits In Tamil

Cloves Health Benefits In Tamil

கிராம்பில் உள்ள மருத்துவ பயன்கள் கிடைக்க தினமும் கிராம்பு எடுத்து கொள்ளலாம். அதிலும் காலையில் எழுந்து வெறும் வயிற்றில் கிராம்பினை மென்று தின்றால் ஏராளமான  ஆரோக்கிய நன்மைகளை பெற முடியும். வெறும் வயிற்றில் கிராம்பினை மென்று சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என இங்கு காணலாம்.  

இதையும் படிங்க:  கிராம்பு டீயில் இத்தனை நன்மைகள் இருக்கா? தெரிஞ்சா விட மாட்டீங்க!

35
Cloves Health Benefits In Tamil

Cloves Health Benefits In Tamil

நோய் எதிர்ப்பு சக்தி:  

கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு பின்னர் நோய் எதிர்ப்பு சக்தி மீது மக்கள் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளனர்.  ஒவருக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இருந்தால் எப்பேர்ப்பட்ட தொற்றுநோயையும் தவிர்க்கலாம். தற்போது தொடர்ந்து மாறிவருகின்ற பருவங்களால் சளி, இருமல் மற்றும் காய்ச்சல் அதிகமாக பரவுகிறது. இந்த தொற்றுகளில் இருந்து விலகி இருக்க நாள்தோறும் காலையில் வெறும் வயிற்றில்  கிராம்புகளை மென்று சாப்பிடுங்கள். இதை வழக்கமாக செய்து வந்தால் உங்களுடைய நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதை உணர முடியும். 

இதையும் படிங்க:  கிராம்பு நீரால் இத்தனை பயன்களா? பல நோய்களுக்கும் தீர்வு!

45
Cloves Health Benefits In Tamil

Cloves Health Benefits In Tamil

கல்லீரல் ஆரோக்கியம்: 

கல்லீரல் உடலின் மிக முக்கியமான உள்ளுறுப்பாகும். கல்லீரல் சேதமானால் உயிருக்கே கூட உலையாகிவிடும். அப்படியான முக்கிய செயல்பாடுகளை கல்லீரல் செய்கிறது. இந்த உறுப்பை  ஆரோக்கியமாக வைத்திருக்க   கிராம்பு உதவும். இதனை சாப்பிடுவதால் கல்லீரல் செயல்பாடு நன்றாக இருக்கும். 

55
Cloves Health Benefits In Tamil

Cloves Health Benefits In Tamil

வாய் துர்நாற்றம்: 

கிராம்பு நறுமண பொருள் என்பதால் நம்முடைய வாய் சுகாதாரத்திற்கு உதவும். நமது வாய்க்கு இயற்கையான நறுமணமூட்டி போல செயல்படும். வாய் புத்துணர்ச்சியாக இருக்க உதவும். சிலருக்கு பல்வேறு காரணங்களால் வாய் துர்நாற்றம் வரும். இதனை தவிர்க்க கிராம்பு சாப்பிடலாம். இதில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் வாயில் உள்ள மோசமான நுண்ணுயிர் தாக்குதலை சமாளிக்கும். நாள்தோறும்  காலையில் கிராம்பினை  மென்று சாப்பிட்டால், வாயில் காணப்படும் கிருமிகளை ஒழிக்கலாம். புத்துணர்வாக உணர்வீர்கள். 

பல் வலி: 

பல் வலிக்கு கிராம்புகள் சிறந்த நிவாரணியாக செயல்படும். திடீரென ஏற்படும் பல்வலிக்கு மருந்து மாத்திரையை நீங்கள் விரும்பாவிட்டால், கவலையே வேண்டாம். கிராம்புகள் உங்களுக்கு கை கொடுக்கும்.  ​கிராம்பினை வலி இருக்கும் பல்லில் வைத்து அழுத்துங்கள். இதனால் பல்லில் உள்ள பாக்டீரியாவை மீது தாக்கம் ஏற்படுகிறது. இதுவே பல்வலியை குணப்படுத்த உதவுகிறது

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
ஆரோக்கிய குறிப்புகள்
வாழ்க்கை முறை

Latest Videos
Recommended Stories
Recommended image1
நாம் எத்தனை முறை காதலில் விழுகிறோம் தெரியுமா? ஆய்வு சொன்ன சுவாரஸ்ய தகவல்!
Recommended image2
இறப்புக்கு பின்னும் துரத்தும் ஆதார்... மோசடிகளில் இருந்து தப்பிக்க இது ஒன்றே தீர்வு..!
Recommended image3
உபாசனா வதந்தியால்.. மீண்டும் பேசப்படும் வாடகைத் தாய் முறை.. அப்படி என்றால் என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved