முகேஷ் அம்பானியும் நீதா அம்பானியும் இவரை கேட்காமல் எந்த முடிவையும் எடுக்கமாட்டாங்களாம்!

First Published | Nov 18, 2024, 1:31 PM IST

ஆடம்பர வாழ்க்கைக்குப் பெயர் பெற்ற அம்பானி குடும்பத்தில் ஒரு நபர் முக்கிய பங்கு வகிக்கிறார். அவரை கேட்காமல் முகேஷ் அம்பானியும் நீதா அம்பானியும் எந்த முடிவையும் எடுக்கமாட்டார்களாம். 

Ambani Family

இந்தியாவின் பணக்கார குடும்பங்களில் ஒன்றாக அறியப்படும் அம்பானி குடும்பம் தங்கள் ஆடம்பர வாழ்க்கை மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் ஆகிய காரணங்களால் அடிக்கடி தலைப்பு செய்திகளில் இடம்பிடித்து வருகின்றன. ஆழமான வேரூன்றிய ஆன்மீக மற்றும் மத நம்பிக்கைகளையும் அம்பானி குடும்பத்தினர் கொண்டுள்ளனர்.

அந்த வகையில் தங்கள் வீட்டில் நடக்கும் எந்த ஒரு சுபநிகழ்ச்சியையும் தொடங்குவதற்கு முன், அம்பானி குடும்பாத்தினர் தங்களுடைய நம்பிக்கைக்குரிய குடும்பப் பாதிரியார் பண்டிட் சந்திரசேகர் சர்மாவிடம் ஆலோசனை பெறுவார்கள். அவரின் ஆலோசனை பெற்ற பின்னர், எந்த ஒரு முக்கியமான நிகழ்ச்சியும் அம்பானி குடும்பத்தில் அரங்கேறுமாம். 

Ambani Family

பண்டிட் சந்திரசேகர் சர்மா அனைத்து முக்கிய அம்பானி குடும்ப நிகழ்வுகளிலும் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறார். சடங்குகள் முதல் மங்களகரமான நேரங்களில் ஆலோசனை வழங்குவது வரை முக்கியமான நிகழ்ச்சிகளில் அவர் ஆலோசனைகளை வழங்குகிறார். அவரது நிபுணத்துவம் பாரம்பரிய ஜோதிடத்திற்கு அப்பாற்பட்டது; அவர் அம்பானி குடும்பத்திற்கு ஆன்மீக வழிகாட்டுதலை வழங்குகிறார், குறிப்பாக ஐபிஎல் தொடக்க விழாக்கள், ஆண்டிலியாவில் விநாயக சதுர்த்தி கொண்டாட்டங்கள் மற்றும் குடும்ப திருமணங்கள் போன்ற பிரமாண்ட நிகழ்வுகளுக்கு அவர் முக்கிய ஆலோசனைகளை வழங்குகிறார்.

Tap to resize

Ambani Family

அம்பானி குடும்ப ஜோதிடர்

பண்டிட் சந்திரசேகர் ஷர்மாவின் சேவைகள் பாரம்பரிய ஜோதிடராக மட்டுமின்றி  அவர் "ஆன்மீக வழிகாட்டி" என்று விவரிக்கப்படுகிறார். ஜோதிட ஆலோசனைகள் முதல் வாழ்க்கை முறை பயிற்சி வரை அவர் பல யோசனைகளை வழங்குகிறார். அவரது வாடிக்கையாளர்களில் பல பாலிவுட் பிரபலங்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த உயர்மட்ட நபர்கள் உள்ளனர்.  பிரியங்கா சோப்ரா ஜோனாஸ் மற்றும் பிற பிரபலங்கள் அவரின் வாடிக்கையாளர்களாக உள்ளனர்.

அம்பானி குடும்ப பண்டிட் கட்டணம்

பண்டிட் சர்மா பரந்த அளவிலான ஆன்மீக சேவைகளை வழங்குகிறார், ஒவ்வொன்றும் சடங்கு வகையைப் பொறுத்து வெவ்வேறு விலையில் வழங்கப்படுகின்றன:

Nita Ambani

ஜாதகம் படித்தல்: ஒரு ஜாதகத்திற்கு ரூ.1,000
மங்களகரமான நேரத்தேர்வுக்கு : ரூ.1,000
கடை/தொழிற்சாலை திறப்பு விழா: ரூ. 5,000 (சடங்கு பொருட்கள் தவிர)
பூமி பூஜை: ரூ.5,000 (சடங்கு பொருட்கள் தவிர)
திருமணம்: ரூ.25,000 (சடங்கு பொருட்கள் உட்பட)
சத்யநாராயண பூஜை: ₹5,000 (சடங்கு பொருட்கள் தவிர)

மிகவும் விரிவான விழாக்களுக்கு, குறிப்பாக குறிப்பிட்ட சடங்குகள் மற்றும் பொருட்கள் தேவைப்படும், செலவுகள் கணிசமாக அதிகரிக்கின்றன:

சுதர்சன ஹோமம்: ரூ.50,000
மஹா மிருத்யுஞ்சய யாகம்: ரூ.50,000
பிரதிநிதி ஹோமம்: ரூ.50,000
வாஸ்து சாந்தி: ரூ.50,000
சண்டி ஹோமம்: ரூ.50,000
ருத்ர ஹோமம்: ரூ.50,000
ருத்ரா அபிஷேகம்: ரூ.11,000
பாக்லாமுகி ஹோமம்: ரூ.50,000

Ambani Family

இந்த சடங்குகள் மூலம், பண்டிட் சர்மா தனது வாடிக்கையாளர்களுக்கு அமைதியான, ஆரோக்கியான, செல்வ செழிப்பான வாழ்க்கையை வழங்குவதாக அவர் கூறுகிறார். பல பணக்கார குடும்பங்கள் மற்றும் உயர்மட்ட நபர்கள் அவருடைய ஆலோசனையை நம்பியிருப்பது அவருடைய நிலைப்பாட்டையும் அவருடைய ஆன்மீக நிபுணத்துவத்தில் அவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையையும் பிரதிபலிக்கிறது.

Latest Videos

click me!