
குழந்தைகளின் ஆரம்ப வளர்ச்சி ஆண்டுகள் ரொம்பவே முக்கியமானது. ஏனெனில், இதுதான் அவர்களது ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கான அடித்தளமாகும். மேலும் பெற்றோர்கள் நல்ல வாழ்க்கை பாடங்களை கற்பிக்க இது ஒரு சிறந்த காலமாகும்.
அந்த வகையில், ஒவ்வொரு பெற்றோரும் தங்களது குழந்தைகளின் ஐந்து வயதிற்குள் அவர்களுக்கு சில நல்ல குணங்களை சொல்லிக் கொடுக்க வேண்டும். அது என்னவென்று இந்த பதிவில் பார்க்கலாம்.
ஐந்து வயதிற்குள் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டிய குணங்கள்:
பணிவு & மரியாதை
குழந்தைகளின் ஆரம்ப வளர்ச்சியிலிருந்து அவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டிய மிக முக்கியமான குணங்களில் ஒன்றுதான் பணி மற்றும் மரியாதை. பிறரிடம் அதுவும் குறிப்பாக வயது மூத்தவர்களிடம் எப்போதுமே கண்ணியமாகவும் மரியாதையாகவும் நடந்து கொள்ள வேண்டும் என்று சொல்லிக் கொடுக்க வேண்டும். இது தவிர, பணிவான வார்த்தைகள், மன்னிக்கவும், நன்றி மற்றும் தயவுசெய்து என்ற எளிய நடைமுறையின் வார்த்தைகளை குழந்தைகளுக்கு கண்டிப்பாக சொல்லிக் கொடுப்பது அவசியம்.
பகிர்ந்தல்
பகிர்தல் பற்றி கண்டிப்பாக குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். ஏனெனில் இந்த குணம் குழந்தைகளின் நட்பை வளர்க்கவும், சமூக சூழ்நிலைகளை சமாளிக்கவும் பெரிது உதவுகிறது. உதாரணமாக பொம்மைகள், ஸ்நாக்ஸ் அல்லது வேறு ஏதாவது பொருட்களை பகிர்ந்து கொள்ள அவர்களை ஊக்குவிக்க வேண்டும்.
உணர்வுகளை வெளிப்படுத்துதல்
குழந்தைகள் தங்களது உணர்வுகளை எப்படி வெளிப்படுத்த வேண்டும் என்று பெற்றோர்கள் சொல்லிக் கொடுக்க வேண்டும். அதாவது கோபப்படுதல், சலிப்பு, ஏமாற்றம் விரக்தி என்ற வார்த்தைகளை எப்படி உணர்வுகள் மூலம் வெளிப்படுத்த வேண்டும் என்று சொல்லிக் கொடுங்கள்.
சுகாதாரம்
குழந்தைகளுக்கு கல்வியுடன் தூய்மை சுகாதாரம் போன்ற சில அடிப்படை விஷயங்களையும் சொல்லிக் கொடுப்பது முக்கியம் அதாவது உணவுக்கு சாப்பிடுவதற்கு முன் மற்றும் கழிப்பறை பயன்படுத்தியதற்கு பின் கண்டிப்பாக சோப்பு போட்டு கைகளை கழுவ வேண்டும். இது தவிர, வெளியில் விளையாடி வந்த பிறகு கை கால்களை கழுவ வேண்டும். மேலும் பற்களை சரியாக துலக்க வேண்டும், தினமும் குளிக்க வேண்டும் இதுபோன்ற நல்ல விஷயங்களின் முக்கியத்துவத்தை சொல்லிக் கொடுத்து ஊக்குவிக்க வேண்டும் இது அவர்களது நல்ல ஆரோக்கியத்திற்கு உதவும்.
இதையும் படிங்க: குழந்தைங்க படிக்குறப்ப 'இப்படி' மட்டும் சொல்லாம இருங்க.. சூப்பரா படிப்பாங்க!!
அறிவுரைகளை கேட்பது
உங்கள் குழந்தைகள் நீங்கள் சொல்லும் வார்த்தைகள் மற்றும் அறிவுரைகளை கேட்க பழக்குகள். அதுபோல பெரியவர்களின் வார்த்தைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று சொல்லுங்கள். இதன் மூலம் அவர்களிடம் பொறுப்புணர்வு வளர ஆரம்பிக்கும்.
சுயமுடிவு
குழந்தைகளின் சிறு வயதில் இருந்தே அவர்களுக்கு இந்த குணங்களை ஊக்குவிப்பதன் மூலம் அவர்கள் திறனாக வளர்வதற்கு உதவியாக இருக்கும். உதாரணமாக அவர்களது ஆடைகளை தேர்ந்தெடுப்பது. இதன் மூலம் அவர்கள் சுதந்திரமான சிந்தனையில் வளர்வார்கள்.
இதையும் படிங்க: இந்த '5' உணவுகள் கொடுங்க; குழந்தைங்க தொல்லை பண்ணாம சீக்கிரமே தூங்கிருவாங்க!
நேரத்தின் முக்கியத்துவம்
சிறுவயதிலிருந்தே குழந்தைகளுக்கு நேரத்தின் முக்கியத்துவத்தை சொல்லிக் கொடுப்பது அவசியம். மேலுன் அவர்களுக்கு ஒரு அட்டவணையை போட்டு அதன்படி நேரத்தில் முக்கியத்துவத்தை சொல்லிக் கொடுங்கள் மற்றும் அதை பின்பற்றவும் ஊக்குவிக்கவும்.
ஆர்வத்தை வளர்ப்பது
குழந்தைகளின் ஆர்வத்தை அறிந்து அதில் அவர்களை ஊக்குவிப்பது ஒவ்வொரு பெற்றோரின் கடமை. உங்கள் குழந்தை ஏதாவது புதிய விஷயங்களை கற்றுக் கொள்ளவும், கேள்விகள் பல கேட்கவும் அவர்களை ஊக்குவிக்க வேண்டும் இதனால் குழந்தைகளின் படைப்பாற்றல் வளர்க்கப்படும்.