
தற்போது நாம் அனைவரும் பரபரப்பான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும். இதனால் நம் அனைவரும் பழைய விஷயங்கள் அனைத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக மறந்து வருகிறோம். அதற்கு மாறாக மோசமான வாழ்க்கை முறை, தவறான உணவு பழக்கம் மற்றும் நொறுக்கு தீனி ஆகியவற்றால் உடலை கெடுத்துக் கொண்டிருக்கிறோம்.
இது ஒரு புறம் இருக்க, நாம் குடிக்கும் தண்ணீரை கூட தவறான முறையில் குடித்தால் பிரச்சினை தான். ஆம், நாம் தவறான முறையில் தண்ணீர் குடித்தால் முழங்கால் வலி ஏற்படுவதற்கு காரணமாக இருக்கும் தெரியுமா? இது கேட்பதற்கு உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் அதுதான் உண்மை.
இதையும் படிங்க: தண்ணீர் நிறைய குடித்தால் கூட 'உடல் எடை' அதிகரிக்குமா? உண்மை என்ன?
நீங்கள் ஒரு நாளைக்கு 3 லிட்டர் தண்ணீர் குடித்தாலும், தவறான முறையில் தண்ணீர் குடித்தால் அது உங்களுக்கு ஆபத்தை தான் விளைவிக்கும். எப்படியெனில், நம்மில் பெரும்பாலானோருக்கு நின்று கொண்டே தண்ணீர் குடிப்பது வழக்கம். ஆனால் நிபுணர்களின் கூற்றுப்படி, இப்படி நின்று கொண்டு தண்ணீர் குடிப்பது முழங்கால் கால்களில் மோசமான விளைவை ஏற்படுத்துவது மட்டுமின்றி, முழங்கால் வலிக்கும் வழிவகுக்கிறது.
இதையும் படிங்க: இதய நோயாளிகள் தினமும் எத்தனை லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்? மீறினால் என்ன நடக்கும்?
நின்று கொண்டு ஏன் தண்ணீர் குடிக்க கூடாது?
நாம் சாப்பிடும் உணவு முதல் குடிக்கும் தண்ணீர் வரை என அனைத்தும் உறவுகளை வழியாக நாம் வயிற்றுக்குள் சென்று, பிறகு அது குடலை சென்றடைகின்றது. இத்தகைய சூழ்நிலையில், நின்று கொண்டு தண்ணீர் குடித்தால் அது உடலால் விரைவாக உறிஞ்சப்பட்டு மூட்டுகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும். நீண்ட நாள் இப்படி நின்று கொண்டே தண்ணீர் குடித்து வந்தால் மூட்டு வலி பிரச்சனையை ஏற்படுத்தும்.
இது தவிர, நின்று கொண்டு தண்ணீர் குடித்தால் அந்நீரானது வயிற்றில் கீழ் பகுதியை சென்றடைந்து சிறுநீரகத்தில் அழுத்தத்தை ஏற்படுத்தி சிறுநீரகம் தொடர்பான நோய்கள் வருவதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது இதனால்தான் நின்று கொண்டு தண்ணீர் குடிக்க கூடாது என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
ஒரு நாளைக்கு எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்?
உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள போதுமான அளவு தண்ணீர் குடிப்பது மிகவும் அவசியம். எனவே ஒரு நாளைக்கு சுமார் 4 முதல் 5 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். இதைவிட அதிகமாகவோ அல்லது குறைவாகவோ குடித்தால் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும். இதுபோல எப்போது தண்ணீர் குடித்தாலும் வசதியாக உட்கார்ந்தபடி தான் குடிக்க வேண்டும். அதுபோல குடிக்கும் தண்ணீரை அவசர அவசரமாக குடிக்காமல் நிதானமாக குடிக்க வேண்டும்.
மேலும் நீங்கள் உணவு சாப்பிடுவதற்கு சுமார் அரை மணி நேரத்திற்கு முன் மற்றும் உணவு சாப்பிட்டு அரை மணி நேரம் கழித்து தான் தண்ணீர் குடிக்க வேண்டும்.
தினமும் காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் சூடான நீரை குடிக்க வேண்டும். அதுபோல இரவில் தூங்கு செல்வதற்கு முன்னும் இதுபோல ஒரு கிளாஸ் சூடான நீர் குடிக்க வேண்டும். இதன் மூலம் உடல் எடையை சுலபமாக கட்டுப்படுத்தலாம் மற்றும் கெட்ட கொழுப்புகளை கரைக்க முடியும்.