MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • தண்ணீர் நிறைய குடித்தால் கூட 'உடல் எடை' அதிகரிக்குமா? உண்மை என்ன?

தண்ணீர் நிறைய குடித்தால் கூட 'உடல் எடை' அதிகரிக்குமா? உண்மை என்ன?

Water For Weight Gain : அதிகமாக தண்ணீர் குடித்தால் உடல் எடை அதிகரிக்குமா? என்ற கேள்விக்கான பதிலை இந்த பதிவில் தெரிந்துகொள்ளுங்கள்.

2 Min read
Author : Kalai Selvi
Published : Nov 11 2024, 08:18 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Drinking Too Much Water Weight Gain In Tamil

Drinking Too Much Water Weight Gain In Tamil

ஒரு மனிதன் உயிர் வாழ்வதற்கு உணவை விட தண்ணீர் தான் மிகவும் அவசியம். உணவு இல்லாமல் உயிர் வாழ முடியும். ஆனால் தண்ணீர் இல்லாமல் வாழவே முடியாது. ஒரு மனிதனின் உடலில் 70% நீர் உள்ளது. எலும்புகள், தசைகள் என அனைத்து உறுப்பிலும் தண்ணீர் உள்ளது.

25
Drinking Too Much Water Weight Gain In Tamil

Drinking Too Much Water Weight Gain In Tamil

தண்ணீர் செரிமானத்தை பராமரிக்கவும், உடலுக்கு ஆற்றலை மற்றும் குளிர்ச்சியை வழங்குகிறது. சொல்லப்போனால் மனிதனின் ஒட்டு மொத்த உடல் ஆரோக்கியத்தையும் பேணுவதற்கு தண்ணீர் மிகவும் முக்கியமானது. தண்ணீர் தான் மனிதனின் உடலில் பல முக்கிய செயல்பாடுகளை செய்ய பெரிதும் உதவுகின்றது.

இந்நிலையில் அதிக அளவு தண்ணீர் குடித்தால் உடல் எடை கூடும் என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் பரவலாக உள்ளது. இது உண்மையா? என்று இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க:  இதய நோயாளிகள் தினமும் எத்தனை லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்? மீறினால் என்ன நடக்கும்?

35
Drinking Too Much Water Weight Gain In Tamil

Drinking Too Much Water Weight Gain In Tamil

அதிகமாக தண்ணீர் குடித்தால் உடல் எடை அதிகரிக்குமா?

பொதுவாக உடல் எடை அதிகரிப்பதற்கு கலோரிகள் அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும். இதுதவிர, கொழுப்புகள் கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் புரதங்கள் நிறைந்த உணவுகளையும் சாப்பிட வேண்டும். ஆனால் தண்ணீரில் கலோரிகள் ஏதுமில்லை. எனவே நாம் எவ்வளவு தண்ணீர் குடித்தாலும் உடல் எடை அதிகரிக்காது. சொல்லப்போனால், தண்ணீர் எடையை அதிகரிக்கச் செய்யாது. 

ஆனால், நாம் எவ்வளவு தண்ணீர் குடிக்கிறோமோ அவை உடலின் உறுப்புகளில் சேமிக்கப்பட்டு தேவைப்படும் போது மட்டும் பயன்படுத்தப்படுகிறது. இது உடலின் ஒரு இயற்கையான செயலாகும்.

45
Drinking Too Much Water Weight Gain In Tamil

Drinking Too Much Water Weight Gain In Tamil

ஒரு சிலர் நோய்வாய்ப்பட்டால் அவர்கள் 2 நாட்களுக்குள் ரொம்பவே பலவீனமடைந்து விடுவார்கள். இதை நீங்கள் கண்டிப்பாக பார்த்து இருப்பீர்கள். இதற்கு முக்கிய காரணம் அவர்களது உடலில் தண்ணீர் பற்றாக்குறை தான். மிக எளிமையான வார்த்தையில் சொன்னால் அவரது உடல் நீரிழப்புக்கு ஆளாகிவிட்டது. எனவே இப்படிப்பட்டவர்கள் போதுமான அளவு தண்ணீர் குடித்தால் இந்த பிரச்சனையை சுலபமாக தவிர்க்கலாம்.

இதையும் படிங்க:  இப்படி பால் குடித்தால் உடல் 'எடை' அதிகமாகும் தெரியுமா?

55
Drinking Too Much Water Weight Gain In Tamil

Drinking Too Much Water Weight Gain In Tamil

அதிக உப்பு சாப்பிடுவது

ஒரு சிலர் அதிக உப்பு சாப்பிடுவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். உப்பு அதிக அளவு தண்ணீரை சேமிக்கும். இதனால் கூட உடல் எடை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இந்த எடையானது தண்ணீரால் கூடியது. ஒருவேளை நீங்கள் உப்பு சாப்பிடுவதை குறைத்தால் அல்லது போதுமான அளவு தண்ணீர் குடிப்பதை நிறுத்தினால், உங்கள் இது எடை மீண்டும் வரும்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
வாழ்க்கை முறை

Latest Videos
Recommended Stories
Recommended image1
நாம் எத்தனை முறை காதலில் விழுகிறோம் தெரியுமா? ஆய்வு சொன்ன சுவாரஸ்ய தகவல்!
Recommended image2
இறப்புக்கு பின்னும் துரத்தும் ஆதார்... மோசடிகளில் இருந்து தப்பிக்க இது ஒன்றே தீர்வு..!
Recommended image3
உபாசனா வதந்தியால்.. மீண்டும் பேசப்படும் வாடகைத் தாய் முறை.. அப்படி என்றால் என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved