இளைஞர்கள் மனதில் தற்கொலை எண்ணம்? மாறி வரும் பருவநிலை மாற்றம் ஒரு காரணமா? அதிர்ச்சி ரிப்போர்ட்!

By Ansgar R  |  First Published Nov 16, 2024, 7:32 PM IST

COP29 Meet : உலகில் அதிகரித்து வரும் பருவநிலை மாற்றம் குறித்து அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்ற கலந்தாய்வில் திடுக்கிடும் அறிக்கைகள் வெளியாகியுள்ளது.


உலகளாவிய காலநிலை மாற்றம் குறித்து விவாதிக்க அஜர்பைஜானில் உள்ள COP29ல் உலகத் தலைவர்கள் கூடிவரும் நிலையில், இளைஞர்களின் மன ஆரோக்கியத்தில் பருவநிலை மாற்றத்தின் தாக்கத்தை நிவர்த்தி செய்ய வேண்டிய அவசரத் தேவையை குறித்து ஒரு சமீபத்திய ஆய்வு எடுத்துரைத்துள்ளது. யுஎன்எஸ்டபிள்யூ சிட்னியில் உள்ள மனநல மருத்துவர்களால் நடத்தப்பட்ட இந்த ஆய்வு, வெப்பமான வானிலைக்கும், ஆஸ்திரேலியாவில் உள்ள இளைஞர்களிடையே தற்கொலை எண்ணங்கள் மற்றும் அது தொடர்பான நடத்தைகள் அதிகரிப்பதற்கும் இடையே உள்ள தொடர்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

இளைஞர்களின் மன ஆரோக்கியம் உலகம் முழுவதும் மோசமாகி வருகிறது, மேலும் அவர்களுடைய மன ஆரோக்கியத்தை இந்த காலநிலை மாற்றம் இன்னும் மோசமாக்குகிறது என்றும் ஆய்வுகள் கூறுகின்றது. பல இளைஞர்கள் நமது பூமியின் எதிர்காலத்தைப் பற்றி கவலைப்படும் இந்த த் சூழலில், இந்த காலநிலை மாற்றத்தின் விளைவுகள் ஏற்கனவே கவலையில் உள்ள அவர்களின் மன ஆரோக்கியத்தை பாதிக்கின்றன என்கிறது அந்த ஆய்வு.

Tap to resize

Latest Videos

undefined

400 வருசமா மழையே பெய்யாத பூமியின் வறண்ட பகுதி! தண்ணீர் ஒரு சொட்டு கூட கிடைக்காது!

நியூ சவுத் வேல்ஸில் 12-24 வயதுடைய இளைஞர்களிடையே தற்கொலை எண்ணங்கள் மற்றும் அது குறித்த அவர்களின் நடத்தைகளுக்கான அவசர சிகிச்சைப் பிரிவு வருகைகளை இந்த ஆய்வு மையமாகக் கொண்டது. 2012 மற்றும் 2019க்கு இடையில் நவம்பர் முதல் மார்ச் வரையிலான வெப்பமான மாதங்களை உள்ளடக்கிய தரவு, உயரும் வெப்பநிலைக்கும் இந்த அவசரகால வருகைகளின் அதிகரிப்புக்கும் இடையே வலுவான தொடர்பைக் காட்டியது. தினசரி சராசரி வெப்பநிலையில் ஒவ்வொரு 1 டிகிரி செல்சியஸ் உயர்வுக்கும், தற்கொலை எண்ணங்கள் மற்றும் நடத்தைகளுக்கான வருகைகளில் 1.3 சதவீதம் அதிகரிப்பு உள்ளது என்பது தான் அதிர்ச்சி அளிக்கும் தகவல்.

இதற்கு எடுத்துக்காட்டாக, சராசரியாக 21.9 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையுடன் ஒப்பிடும்போது சராசரியாக 30 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை உள்ள நாட்களில் வருகைகள் 11 சதவீதம் அதிகமாக இருந்தன. குளிர்ந்த நாட்களுடன் ஒப்பிடும்போது, ​​மிதமான வெப்பம் உள்ள நாட்களிலும், தற்கொலை எண்ணங்களின் அபாயம் அதிகரித்தது. சுவாரஸ்யமாக, வெப்ப அலைகள் (மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட தொடர்ச்சியான வெப்ப நாட்கள்) ஒரு சூடான நாளுக்கு மேல் ஆபத்தை அதிகரிக்கவில்லை என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

இது மட்டுமல்லாமல் அந்த ஆய்வின் முடிவானது ஆஸ்திரேலியாவின் அதிக வெப்பம் உள்ள பகுதிகளில் உள்ள இளைஞர்கள் மன அழுத்தத்திற்கு அதிக அளவில் ஆளாவது தெரிய வந்திருக்கிறது. இப்படி வெப்பம் அதிகம் இருக்கும் இடத்தில் இருக்கும் மக்களை அது நேரடியாக பாதிக்கவில்லை என்றாலும் அங்குள்ள இளைஞர்களின் மனதில் நெகட்டிவ் எண்ணங்களை அது பரப்புவதாக கூறப்படுகிறது. உதாரணமாக வெப்பம் அதிகமான பகுதிகளில் உள்ள இளைஞர்கள், குறிப்பாக தங்களுடைய வீட்டிற்கு குளிர்சாதன வசதியை அமைக்க முடியாத, கொஞ்சம் ஏழ்மையான பகுதியில் வசிப்பவர்கள் மத்தியில் இந்த அதிகரிக்கும் வெப்பமானது மனநல பிரச்சினைகளை பெரிய அளவில் ஏற்படுத்துகிறது. 

இந்த சூழலில் அஜர்பைஜான் நாட்டில் நடந்த இந்த சிஓபி29 கலந்தாய்வில் மாறிவரும் பருவநிலையால் இளைஞர்களின் மனது மாறுவதை தடுக்க அவர்களுக்கு சரியான கவுன்சிலிங் கொடுக்க உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா போன்ற உலகின் வெப்பமான நாடுகளை Fossil Fuelகளை சார்ந்து இருப்பதை குறைத்துக் கொள்ளுமாறும் கூறப்படுகிறது. இது தங்களுடைய சுற்றுப்புறத்தை வெப்பமாவதிலிருந்து தடுப்பது மட்டுமில்லாமல், அங்கு இருக்கும் இளைஞர்களுக்கும் மன அழுத்தத்தை அதிகரிக்காமல் இருக்கும் என்று கூறப்படுகிறது. 

மேலும் வெப்பம் அதிகமாக உள்ள நாடுகளில் இளைஞர்களுக்கு தங்களுடைய மனநலத்தை பேணி பாதுகாக்க அனைத்து விதமான பயிற்சிகளும் அளிக்கப்பட வேண்டும். மாறிவரும் கால நிலையால் அவர்களுக்கு மனரீதியாக என்னென்ன பிரச்சினைகள் ஏற்படுகிறது, அதை எவ்வாறு சமாளிக்க வேண்டும் என்று அவர்களுக்கு கற்றுத் தர வேண்டும். அது மட்டும் அல்லாமல் ஒவ்வொரு நாட்டின் அரசும் தங்களுடைய குடிமக்களின் வாழ்வின் தரத்தை அதிகரிக்க அனைத்து விதமான முன்னெடுப்புகளையும் மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக அதீத வெயில் காலங்களில் ஏழ்மையில் இருக்கும் மக்களுக்கு அவர்களுடைய வீடுகளை குளுமையாக வைத்துக் கொள்ள அரசு திட்டங்களை செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எந்த வயசுல 'சிகரெட்' பழக்கம் ஆரம்பிக்குது தெரியுமா? இதுக்கு பெற்றோரும் காரணமா? 

click me!