இந்தோனேசியாவைச் சேர்ந்த ஜோசுவா ஹுடகாலுங் என்பவர் வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த போது வானத்தில் இருந்து விழுந்த கல்லால் ஜாக்பாட் அடித்தது. இதன் மூலம் அவர் ஓவர்நைட்டில் கோடீஸ்வரரானார்.
அதிர்ஷ்டம் இருந்தால் ஒருவர் ஒரே இரவில் கோடீஸ்வரராகலாம். இந்தோனேசியாவில் வசிக்கும் ஒருவருக்கும் அப்படித்தான் நடந்தது. ஜோசுவா ஹுடகாலுங் என்ற நபர் தனது வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த போது அவருக்கு ஜாக்பாட் அடித்தது. இதன் மூலம் ஒரே இரவில் அவர் கோடீஸ்வரரானார். ஜோசுவார் ஒரு நாள் வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த போது திடீரென பலத்த சத்தம் கேட்டு அறைக்கு ஓடி வந்து பார்த்தபோது பெரிய கல் விழுந்து கிடப்பதை பார்த்தார்.
அந்தக் கல்லைப் பார்த்த ஜோஷ்வா ஆச்சரியப்பட்டார். உண்மையில், அது ஒரு சாதாரண கல் அல்ல, ஒரு விண்கல். இந்த விண்கல் தான் அவரின் வாழ்க்கையை மாற்றியது. அவர் அந்த கல்லை 1.4 மில்லியன் பவுண்டுகளுக்கு அதாவது இந்திய மதிப்பில் ரூ. 14 கோடிக்கு விற்றார்.
இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ராவின் கோலாங் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.. இவ்வளவு விலைக்கு விற்ற இந்தக் கல்லின் சிறப்பு என்னவென்று நீங்கள் நினைக்கலாம். ஜோஷ்வாவின் வீட்டில் விழுந்த விண்கல் 2.1 கிலோ எடையுள்ள பல வழிகளில் தனித்துவமான, மிகவும் அரிய கல்லாகும். இது 4.5 பில்லியன் ஆண்டுகள் பழமையானது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். விண்வெளி அடிப்படையிலான நிறுவனம் இது மிகவும் அரிதான CM1/2 கார்பனேசியஸ் காண்ட்ரைட் என்று கருதியது. 85 சதவீத விண்கற்கள் இந்த பொருளில் இருந்து தயாரிக்கப்படுகின்றன. இந்த CM1/2 ஒரு அரிய கலவையாகும்.
பூமியை 2 பகுதிகளாக பிரிக்கும் இடம் எது? இரவு, பகல் இரண்டுமே 12 மணி நேரம்!
அமெரிக்காவைச் சேர்ந்த ஜாரெட் காலின்ஸ் என்பவர் இந்த அரிய விண்கல்லை வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது. . சவப்பெட்டி தயாரிப்பாளரான ஜோசுவா பெரும் தொகைக்கு அந்த கல்லை விற்றுள்ளார்.
இந்த விண்கல் தனது வீட்டில் விழுந்த நாளில், அவர் வீட்டின் வெளியே வராண்டாவில் வேலை செய்து கொண்டிருந்ததாக ஜோசுவா ஹுடகாலுங் கூறினார். மேலும் பேசிய அவர் “ திடீரென்று ஒரு பெரிய சத்தம் வந்தது, அப்போது இந்த கல் தரையில் புதைந்து காணப்பட்டது. எனக்கு ஒரு அரிய பொக்கிஷம் கிடைத்ததை நான் மிகவும் அதிர்ஷ்டசாலியாக கருதுகிறேன்.
ஒரே நாளில் கோடீஸ்வரி.. ஆரஞ்சு ஜூஸ் வாங்க போன பெண்ணுக்கு அடித்த அதிர்ஷ்டம்!
சவப்பெட்டிகள் செய்து என்னால் அதிகம் சம்பாதிக்க முடியவில்லை. ஆனால் இப்போது யோசுவாவின் வாழ்க்கை பாதையில் திரும்பியுள்ளது. இந்தப் பணத்தில் எனது சமூகத்திற்காக தேவாலயம் கட்டப் பயன்படுத்துவேன். மேலும் ஒரு பெண் குழந்தைக்கு தந்தையாக ஆசைப்படுகிறேன்.. இந்த பணத்தில் தனது கனவுகளை நிறைவேற்றபோகிறேன்." என்று தெரிவித்தார்.
முன்னதாக சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட இதை விட பெரிய விண்கல் ஒன்று ரூ.16 கோடிக்கு விற்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.