காத்துவாங்கும் கங்குவா; அதற்குள் 600 கோடி பட்ஜெட்டில் அடுத்த வரலாற்று படத்துக்கு ரெடியாகும் சூர்யா?

First Published | Nov 19, 2024, 1:35 PM IST

சூர்யா நடித்த கங்குவா திரைப்படம் கடும் விமர்சனத்துக்குள்ளான நிலையில், தற்போது அவர் மேலும் ஒரு வரலாற்று படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Kanguva

தமிழ் திரையுலகில் 25 ஆண்டுகளுக்கு மேல் நடித்து வருபவர் சூர்யா. இவர் நடிப்பின் நாயகன் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார். 2000க்கு பின் சினிமாவில் தொடர் வெற்றிகளை குவித்து வந்த சூர்யாவுக்கு கடந்த 2013-ம் ஆண்டுக்கு பின்னர் அவர் நடித்து தியேட்டரில் ரிலீஸ் ஆன ஒரு படம் கூட வெற்றியடையவில்லை. இடையே அவர் நடிப்பில் வெளிவந்த சூரரைப் போற்று மற்றும் ஜெய் பீம் ஆகிய படங்கள் நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் ஆகி வெற்றிபெற்று ரசிகர்களுக்கு ஆறுதல் தந்தன.

Bobby Deol, Suriya

இதனால் ரசிகர்களுக்கு மிகப்பெரிய வெற்றிப்படத்தை கொடுக்க முடிவெடுத்து, கடந்த 2 ஆண்டுகளாக கடினமாக உழைத்து அவர் வெளியிட்ட படம் கங்குவா, இப்படம் கடந்த வாரம் ரிலீஸ் ஆகி கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. நடிகர் சூர்யாவின் கெரியரில் மிகப்பெரிய தோல்விப் படமாக கங்குவா இருக்கும் என்றும் கூறப்படுகிறது. கங்குவா படத்தின் தோல்விக்கு பின்னர் நடிகர் சூர்யா நடிப்பில் சூர்யா 44 திரைப்படம் உருவாகி இருக்கிறது.

இதையும் படியுங்கள்... கங்குவா கொடுத்த அடியால் உஷாரான சூர்யா; கார்த்திக் சுப்புராஜுக்கு பறந்த உத்தரவு!

Tap to resize

Suriya's Kanguva

சூர்யா 44 திரைப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி உள்ளார். இப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இப்படம் அடுத்த ஆண்டு திரைக்கு வர உள்ளது. இதையடுத்து சூர்யாவின் 45-வது படத்தை ஆர்.ஜே.பாலாஜி இயக்க உள்ளார். இப்படத்தின் ஷூட்டிங்கும் இன்னும் ஒரிரு மாதத்தில் தொடங்க உள்ளது. இப்படத்தை போல் நடிகர் சூர்யா மேலும் ஒரு பான் இந்தியா படத்தில் நடிக்க கமிட்டாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Suriya Next Movie Karna

அது கங்குவா படத்தை போல் வரலாற்று கதையம்சம் கொண்ட படமாக உருவாக உள்ளதாம். அப்படத்தின் பெயர் கர்ணா. அப்படத்தை ராகேஷ் ஓம்பிரகாஷ் இயக்க உள்ளாராம். இப்படத்தின் பட்ஜெட் மட்டும் சுமார் 600 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. இப்படத்தின் மூலம் நடிகர் சூர்யா பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளார். அவர் நடிக்கும் முதல் நேரடி இந்தி படம் இதுவாகும். கங்குவா படம் செம்ம அடி வாங்கிய நிலையில், அதே பாணியில் நடிக்க சூர்யா எடுத்துள்ள இந்த ரிஸ்க் பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

இதையும் படியுங்கள்... வெளியாகி 4 நாள் ஆச்சு; இந்த சூழலில் கத்திரி போடப்பட்ட கங்குவா - ஏன் இந்த திடீர் முடிவு?

Latest Videos

click me!