Published : Nov 19, 2024, 12:59 PM ISTUpdated : Nov 19, 2024, 01:06 PM IST
இயக்குனரும், நடிகருமான பாக்கியராஜ் தன்னுடைய மகள் காதலை ஜீரணிக்க முடியவில்லை என அண்மையில் கொடுத்த பேட்டி ஒன்றில் பகிர்ந்து கொண்ட தகவல் தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் 1980-களில் திரைப்பட எழுத்தாளராக, தன்னுடைய கேரியரை துவங்கி பின்னர் கேமியோ ரோல்களில் நடிக்க ஆரம்பித்து, இயக்குனர், ஹீரோ, இசையமைப்பாளர் என தன்னைத்தானே படிப்படியாக செதுக்கி கொண்டவர் பாக்யராஜ்.
தன்னுடைய முதல் படமான 'சுவரில்லா சித்திரங்கள்' திரைப்படத்தை இயக்கி, அதில் ஹீரோவாகவும் நடித்து முதல் படத்திலேயே நிலையான ஹீரோ என ரசிகர்கள் மனதில் தன்னை நிலை நிறுத்திக் கொண்ட பாக்யராஜ், இதைத்தொடர்ந்து அடுத்தடுத்து இவர் இயக்கி நடித்த படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. இவரிடம் துணை இயக்குனராக பணியாற்றிய பலர் இன்று தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக தடம் பதித்துள்ளனர். அவர்களில் முக்கியமானவர் நடிகரும் - இயக்குனருமான பார்த்திபன்.
26
Bhagyaraj movie
தன்னுடைய சொந்த வாழ்க்கையில் இரண்டு முறை காதலித்து திருமணம் செய்து கொண்ட பாக்கியராஜ், தன்னுடைய மகளின் காதலை தன்னால் ஜீரணிக்க முடியவில்லை என கூறியுள்ள தகவல் தான் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. பாக்கியராஜ் 1981 ஆம் ஆண்டு, தனக்கு ஜோடியாக நடித்த நடிகை பிரவீனாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், 2 ஆண்டுகளில் பிரவீனா மஞ்சள் காமாலை காரணமாக சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.
பிரவீனா மீது பாக்கியராஜ் வைத்திருந்த காதலை பார்த்து, அவரை காதலிக்க துவங்கினார் பூர்ணிமா ஜெயராம். பாக்கியராஜ் ஆரம்பத்தில் பூர்ணிமா காதலை ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும், பின்னர் குடும்பத்தினர் மற்றும் பூர்ணிமாவின் பிடிவாதம் காரணமாக காதலுக்கு சம்மதம் கூறினார். இவர்கள் இருவருக்கும் 1984ஆம் ஆண்டு திருமணம் நடந்து முடிந்தது. தமிழ் சினிமாவில் உள்ள நட்சத்திர ஜோடிகளுக்கு எடுத்து காட்டாக கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக, ஒற்றுமையான ஜோடியாக வலம் வரும் பூர்ணிமா மற்றும் பாக்யராஜ் ஜோடிக்கு சாந்தனு என்கிற மகனும் சரண்யா என்கிற மகளும் உள்ளனர்.
46
Saranya First Movie
சரண்யா, 'பாரிஜாதம்' என்கிற ஒரே ஒரு படத்தில் மட்டுமே ஹீரோயினாக நடித்தார். அதன் பின்னர் அவர் எதிர்பார்க்கும் படியான கதாபாத்திரம் அமையாததால், நடிப்பில் இருந்து விலகி... தன்னுடைய அப்பாவுடன் சினிமா சம்மந்தமான மற்ற பணிகளில் கவனம் செலுத்தினார். தற்போது தன்னுடைய அம்மா துவங்கிய பேஷன் டிசைனிங் நிறுவனத்தை கவனித்து வருகிறார்.
மேலும் இதுவரை தன்னுடைய கணவர் யார் என்பதை வெளிப்படுத்தாத சரண்யா, தனக்கு ஒரு ஆண் குழந்தை அண்மையில் பிறந்த தகவலை கூறி அதிர்ச்சி கொடுத்தார். எனவே சரண்யாவின் கணவர் யார்? அவர் யாரை திருமணம் செய்து கொண்டார்? அவருடைய திருமணம் ரகசியமாக நடந்ததா? பாக்யராஜ் மற்றும் - பூர்ணா தம்பதி ஏன் இதனை வெளிப்படுத்தவில்லை? என பல்வேறு கேள்விகள் சமூக வலைதளத்தில் சுற்றிக் கொண்டிருந்தது.
66
Saranya Bhagyaraj
இதற்க்கு விளக்கம் கொடுக்கும் விதமாக, பாக்கியராஜ் தற்போது பேசியுள்ளார். இவர் கூறியுள்ளதாவது.. " என் பெண்ணோட காதல என்னால ஜீரணிக்க முடியல, இந்த ஜாதி, மதம், பணம், எல்லாத்தையும் தாண்டி வேற ஒரு காரணம் இருந்தது. என் பொண்ணு தனியாக போனால். நாங்களும் கோபத்தில் அப்படியே இருந்தோம். ஆனால் அவர் கர்ப்பம் ஆகிட்டான்னு சொன்னதும், மனசு தாங்க முடியல. அப்புறம் பூர்ணிமா தான் கூட போனாங்க. பையன் பிறந்து இருக்கான்னு சொன்னவுடனே, நான் ஓடிப் போய் ஹாஸ்பிடல்ல பார்த்தேன். நான் தான் கையில முதல்ல அவனை வாங்குனேன். இப்போ அவன பாக்காம என்னால இருக்க முடியாது. அவனுக்கும் நான் இல்லாம இருக்க முடியாது. என உணர்வு பூர்வமான தகவலை பகிர்ந்துள்ளார். அதே நேரம் இவரின் கணவர் மற்றும் கர்ப்பத்தின் பின்னணியில் உள்ள ரகசியம் மட்டும் இன்னும் வெளிச்சத்திற்கு வரவில்லை.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.