Bloody Beggar
கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட், ஜெயிலர் போன்ற படங்களை இயக்கி தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் நெல்சன் திலீப்குமார். இவர் கவின் நடிப்பில் தீபாவளி பண்டிகைக்கு ரிலீஸ் ஆன ப்ளடி பெக்கர் திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானார். இப்படத்தை இயக்குனர் நெல்சனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய சிவபாலன் என்பவர் இயக்கி இருந்தார். இப்படம் சிவகார்த்திகேயனின் அமரன் படத்துக்கு போட்டியாக ரிலீஸ் ஆனது.
Bloody Beggar Movie Kavin
ப்ளடி பெக்கர் படத்தில் நடிகர் கவின் பிச்சைக்காரனாக நடித்திருந்தார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இப்படம் பாக்ஸ் ஆபிஸில் பயங்கர அடிவாங்கியது. இதற்கு காரணம் அமரன் படத்தின் அதிரிபுதிரியான வெற்றி தான். அப்படத்தை பார்க்கவே ரசிகர்கள் ஆர்வம் காட்டியதால் ப்ளடி பெக்கர் படம் வந்த வேகத்தில் தியேட்டரில் இருந்து தூக்கப்பட்டது. இருப்பினும் பாக்ஸ் ஆபிஸில் ஓரளவு தாக்குப்பிடித்த இப்படம் ரூ.10 கோடி வரை வசூலித்து இருந்தது.
இதையும் படியுங்கள்... பிளாப் ஆன ப்ளெடி பெக்கர்; முதல் படமே தோல்வியடைந்ததால் நெல்சன் எடுத்த அதிரடி முடிவு!
Bloody beggar Producer Nelson
ப்ளடி பெக்கர் திரைப்படத்தை தயாரித்த நெல்சனுக்கு அப்படத்தின் ஓடிடி மற்றும் டிஜிட்டர் உரிமைகளை நல்ல ரேட்டுக்கு விற்றதிலேயே லாபம் கிடைத்துவிட்டது. இருப்பினும் இப்படத்தை வெளியிட்ட வினியோகஸ்தர்கள் நஷ்டம் அடைந்ததை அறிந்த நெல்சன், அவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கி இருந்தார். தயாரித்த முதல் படமே நஷ்டம் அடைந்தாலும், நஷ்ட ஈடு வழங்கிய நெல்சனுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுக்களும் குவிந்து வந்தன.
Bloody Beggar Movie OTT Release
இந்த நிலையில், ப்ளடி பெக்கர் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி வெளியாகி இருக்கிறது. அதன்படி இப்படம் வருகிற நவம்பர் 29-ந் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ஸ்டிரீம் ஆகும் என கூறப்படுகிறது. தியேட்டரில் கிடைக்காத வரவேற்பு இப்படம் ஓடிடியில் ரிலீஸ் ஆன பின்னர் கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ப்ளடி பெக்கர் திரைப்படத்துடன் தீபாவளிக்கு ரிலீஸ் ஆன அமரன் படம் தியேட்டரில் வெற்றிநடை போட்டு வருவதால் அதன் ஓடிடி ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... அமரன் முதல் லக்கி பாஸ்கர் வரை; தீபாவளி ரிலீஸ் படங்களை எந்தெந்த ஓடிடி தளங்களில் பார்க்கலாம்?