Published : Nov 19, 2024, 11:01 AM ISTUpdated : Nov 19, 2024, 11:02 AM IST
விஜய் டிவி சீரியல் நடிகை, சாய் காயத்திரி அழகு பொருட்கள் நிறுவனத்தை நடத்தி வரும் நிலையில், இவரது கை மெஷினில் சிக்கி தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
விஜய் டிவியில், ஒளிபரப்பான ஈரமான ரோஜாவே , பாண்டியன் ஸ்டார் போன்ற சீரியல்களில் நடித்து பிரபலமானவர் சாய் காயத்ரி. எந்த சீரியலாக இருந்தாலும் தன்னுடைய கதாபாத்திரம் பாசிட்டிவாக இருக்க வேண்டும் என்பதில், கண்ணும் கருத்துமாக இருக்கும் சாய் காயத்ரி, கதாபாத்திரங்களில் ஏதேனும் இயக்குனர் மாற்றம் கொண்டு வந்தால் அந்த சீரியலில் இருந்தே விலகி விடுவார். அப்படி தான் 'பாண்டியன் ஸ்டோர்' முதல் பாகத்தில் நடித்து வந்த போது அதிரடியாக சீரியலில் இருந்து விலகினார்.
25
Sai Gayatri Met Accident
இவர் விஜய் டிவியில் சுவாரஸ்யமான கதைக்களத்தில் ஒளிபரப்பாகி வரும், 'நீ நான் காதல்' சீரியலில் நடித்து வந்த நிலையில்... கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் தன்னுடைய உடல் நலனை கருத்தில் கொண்டு, இந்த தொடரில் இருந்து விலகுவதாக கூறி அதிர்ச்சி கொடுத்தார்.
தொடர்ந்து இரண்டாவது நாயகி கதாபாத்திரத்திலேயே நடித்து வரும், சாய் காயத்ரி கடந்த ஆண்டு தன்னுடைய பெற்றோர் துணையுடன், 'சாய் சீக்ரெட்ஸ்' என்கிற அழகு பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தை தொடங்கினார். இவரிடம் சுமார் 20-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வரும் நிலையில், அடிக்கடி தன்னுடைய பொருட்களை பிரபலப்படுத்தும் விதமாக, சாய் சீக்ரெட்ஸ் பொருட்கள் பற்றியும்... அதன் தனித்தன்மை குறித்தும் விளக்கும் விதத்தில் வீடியோ போடுவதை வழக்கமாக வைத்திருந்தார்.
சாய் காயத்திரி சிறிய அளவில் துவங்கிய, இவரது சாய் சீக்ரெட்ஸ் நிறுவனம், பல பொருட்களை தயாரிக்கும் அளவுக்கு தற்போது வளர்ந்துள்ளது. இவை அனைத்தும் சாய் காயத்திரியின் உழைப்பால் மட்டுமே சாத்தியம் ஆனது. தன்னை எந்த ஒரு நிலையிலும் ஒரு ஓனர் என காட்டி கொள்ளாமல், தொடர்ந்து தொழிலாளர்களுடன் சேர்ந்து பணியாற்றுவதை வழக்கமாக வைத்துள்ளார். இவர் தயாரிக்கும் பொருட்கள் மக்களாலும் அதிகம் விரும்பப்படுகிறது.
45
Sai Gayatri Admitted Hospital
சாய் சீக்ரெட்ஸ் நிறுவனத்தின் மூலம் இயற்கை முறையில் தயாரிக்கப்படும் ஹேர் ஆயில், ஃபேஸ் மாஸ்க், நலங்கு மாவு, ஹேர் பேக், சோப் உள்ளிட்ட 8 பொருட்களை இவர் தயாரித்து விற்பனை செய்து வருகிறார். இவர் அனைத்தையும் செய்வதற்காக பிரத்தேயேக மெஷின்களை வைத்துள்ள சாய் காயத்திரி தற்போது மெஷினில் கை சிக்கி பரிதாபமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இவர் மருத்துவமனையில் சிகிச்சை பெரும் புகைப்படத்தை வெளியிட அது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து அவர் போட்டுள்ள பதிவில், "நேற்று எதிர்பாராத விபத்து ஏற்பட்டது, பொருட்கள் தயாரிப்பின் போது இயந்திரத்தால் காயம் ஏற்பட்டது. இன்னும் 1 அல்லது 2 வாரங்கள் எல்லா சமூகப் பக்கங்களிலும் ஆக்டிவாக இருப்பேன் என தெரிவித்துள்ளார். ரசிகர்கள் இவர் விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.