சந்திரமுகி படத்தின் அரண்மனையின் ஒரு நாள் வாடகை எவ்வளவு தெரியுமா? அதுல என்னென்ன சிறப்பு இருக்குனு பாருங்க!

First Published | Nov 19, 2024, 10:47 AM IST

Chandramukhi Movie Set in Bangalore Palace Rent Per Day : ரஜினிகாந்த் நடிப்பில் வந்த சந்திரமுகி பட ஷூட்டிங்கு எங்கு எடுத்தார்கள், அந்த அரண்மனையின் ஒருநாள் வாடகை எவ்வளவு என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்…

Chandramukhi Shooting Bangalore Palace in Karnataka

Chandramukhi Movie Set in Bangalore Palace Rent Per Day : அரண்மனை என்றாலே அதுல பேய் படங்கள் தான் எடுப்பாங்க. பாழடைஞ்ச பங்களால மோகினி பிசாசு இருக்கும் என்றெல்லாம் சொல்லுவாங்க. அரண்மனைக்கு என்று வரலாற்று புராணக் கதைகள் இருக்கும். அப்படிப்பட்ட அரண்மனையை தேடி பிடித்து அதுல படப்பிடிப்பு எடுப்பாங்க. அப்படி ஒரு அரண்மனையில் எடுக்கப்பட்ட படம் தான் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த ரஜினிகாந்தின் சந்திரமுகி.

Chandramukhi Shooting Spot, Chandramukhi Shooting Rent Per Day

இயக்குநர் பி வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த், பிரபு, ஜோதிகா, நயன்தாரா, வடிவேலு, விஜயகுமார், நாசர், மாளவிகா, கேஆர் விஜயா, வினீத் என்று ஏராளமான நட்சத்திரங்கள் நடிப்பில் 2005ல் வெளியான படம் தான் சந்திரமுகி. ஒரு உளவியல் த்ரில்லர் கதையை காமெடியோடு கொடுத்திருப்பார் இயக்குநர் வாசு. ரூ.190 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட சந்திரமுகி உலகம் முழவதும் ரூ.900 கோடி வரையில் வசூல் குவித்துள்ளது.

Tap to resize

Vadivelu, Chandramukhi Set, Chandramukhi Real Bangalore Palace

ராம்குமார் கணேசன் பிரபு தன்னுடைய சிவாஜி கணேசன்ஸ் புரோடக்‌ஷன்ஸ் நிறுவனத்தின் மூலமாக தயாரித்த இந்தப் படம் தமிழ் திரையுலகில் அதிக நாட்கள் ஓடி சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த படம் என்ற மகத்தான சாதனையை படைத்தது. அதுவும் 890 நாட்கள் ஓடி வசூல் வேட்டை நடத்தி சாதனை படைத்திருந்தது. படத்துக்கு வித்யா சாகர் இசையும் பக்காவா இருந்துச்சு. எல்லா பாடலும் ஹிட்டோ ஹிட். படத்தில் ரஜினிகாந்த் சரவணன் மற்றும் வேட்டையன் ராஜா என்ற ரோலில் நடித்திருந்தார். ஜோதிகா சந்திரமுகியாக கலக்கியிருப்பார்.

Prabhu, Chandamukhi Box Office Collection, Director P Vasu

கிட்டத்தட்ட 150 ஆண்டுகளுக்கு முன்பு வேட்டையன் மன்னன் ஆந்திராவில் உள்ள விஜயநகரத்திற்கு சென்றான். அப்போது அங்கு சந்திரமுகி என்ற நடன அழகியை பார்த்து அவள் மீது ஆசைப்பட்டடான். ஆனால், நடன அழகியோ மற்றொரு டான்ஸரான குணசேகரன் மீது காதல் கொண்டாள். இது எப்படியோ வேட்டையன் மன்னனுக்கு தெரிய குணசேகரன் தலையை வெட்டியதோடு, சந்திரமுகியை நெருப்பில் கொளுத்தினார். தன்னோட ஆசை நிறைவேறாத சந்திரமுகி ஆவியாக வந்து துர்கா உடலுக்குள் சென்றாள். அதன் பிறகு என்ன நடந்தது என்பது தான் சந்திரமுகி.  

Chandramukhi Movie Shooting, Chandramukhi Movie Set in Bangalore Palace Rent Per Day

அப்படிப்பட்ட சம்பவங்கள் நடந்த அரண்மனை எங்கு இருக்கு என்று பார்த்தால் அது கர்நாடகாவுல இருக்குனு தெரியுது. ஆனால், கர்நாடகாவுல மைசூர் பேலஸ் தான் ரொம்பவே பேமஸ். அங்கு பெங்களூரு பேலஸூம் ரொம்பவே பேமஸாம். இந்த பெங்களூரு பேலஸ் தான் சந்திரமுகி அரண்மனையாம்.

சந்திரமுகி ரூம் செட்:

இந்த பெங்களூரு பேலஸ்ல தான் பல அறைகளை வாடகைக்கு எடுத்து சந்திரமுகி ஷூட்டிங்க எடுத்துருக்காங்க. ஒருநாள் ஷூட்டிங்கிற்கு ரூ.1.5 லட்சம் வாடகையாம். இதுல பட அறைகளுக்கு செட் போட்டார்களாம். அப்படி போடப்பட்ட ஒரு செட் தான் சந்திரமுகி அறை. இந்த அரண்மனைக்கு வரும் அதிகாரிகள் ஓய்வு எடுப்பதற்கு தனியாக வீடு இருக்கிறதாம். அது படத்துல வினீத் தங்கி நடனம் சொல்லிக் கொடுக்கும் வீடு.

Rajinikanth, Bangalore Palace, Chandramukhi Movie Set

இந்த பேலஸை சுற்றி பார்க்க இந்தியர்கள் சென்றால் ரூ.225 மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் என்றால் ரூ.450 என்று நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்படுகிறதாம். நீங்களும் சென்று கூட பார்க்கலாம். இந்த பேலஸ் ஷூட்டிங்கிற்கு மட்டும் இல்ல திருமணம் செய்யவும் வாடகைக்கு விடுறாங்களாம். உங்களுக்கும் அந்த அரண்மனைக்கு செல்ல வேண்டும், அங்கு திருமணம் செய்ய வேண்டும் என்று ஆசை இருந்தால் செல்லலாம். இந்த அரண்மனை கிட்டத்தட்ட 120 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Latest Videos

click me!