நடிச்ச எல்லா படமும் பிளாப்; ஆனாலும் இவங்களுக்கு செம டிமாண்ட்! யார் இந்த மச்சக்கார நடிகை?

First Published | Nov 19, 2024, 9:43 AM IST

நடித்த அனைத்து தமிழ் படங்களும் பிளாப் ஆனாலும், தற்போது விஜய், சூர்யா உடன் ஜோடி சேர்ந்து நடித்து வரும் பிரபல நடிகையின் குழந்தைப்பருவ புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Actress Childhood Photos

சினிமாவில் நடிகைகளுக்கு மவுசு இருப்பது சில காலமே, அதை சரியாக பயன்படுத்திக் கொள்பவர்களே முன்னணி நாயகி என்கிற அந்தஸ்தை பெருகிறார்கள். அந்த வகையில் கோலிவுட்டில் ஒரு நடிகை நடிச்ச எல்லா படமும் பிளாப் ஆனாலும், அவர் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். அதற்கு அவரின் டோலிவுட் மார்க்கெட் தான் காரணம். 

Pooja hegde Childhood photo

டோலிவுட்டில் மவுசு இருப்பதால் கோலிவுட்டிலும் டாப் ஹீரோக்களுக்கு தொடர்ந்து ஜோடியாக நடித்து வரும் அந்த மச்சக்கார நடிகையின் குழந்தைப் பருவ புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன. அந்த நடிகை வேறுயாருமில்லை; பூஜா ஹெக்டே தான். இவர் தமிழில் மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 2012-ம் ஆண்டு ரிலீஸ் ஆன முகமூடி படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். 

Tap to resize

Pooja hegde Rare Childhood photo

அப்படத்தில் நடிகர் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார் பூஜா. அவர் நடித்த முதல் படமே அட்டர் பிளாப் ஆனதால், தமிழ் சினிமாவே வேண்டாம் என முடிவெடுத்து டோலிவுட் பக்கம் ஒதுங்கினார் பூஜா. அங்கு இவர் தொட்டதெல்லாம் ஹிட்டாக மாறின. இதனால் டோலிவுட்டில் ராசியான ஹீரோயின் என பெயரெடுத்தார் பூஜா ஹெக்டே.

Pooja hegde Unseen photos

பொதுவாகமே டோலிவுட்டில் டிரெண்டிங்கில் உள்ள நாயகிகளை தமிழ் படங்களில் நடிக்க வைப்பது என்பது காலம் காலமாக தொடர்ந்து வருகிறது. அந்த வகையில் முதல் படமே பிளாப் ஆன சோகத்தில் தமிழ் சினிமாவை விட்டு விலகிச் சென்ற பூஜா ஹெக்டேவை 10 ஆண்டுகள் கழித்து மீண்டும் கோலிவுட்டுக்கு அழைத்து வந்தார் இயக்குனர் நெல்சன். 

இதையும் படியுங்கள்...  ஒரே நைட்டில் 70,000 ரூபாயை காலி பண்ணிய பூஜா ஹெக்டே - எப்படி தெரியுமா?

Pooja hegde Rare photos

அதுவும் தமிழ் திரையுலகின் டாப் ஹீரோவான விஜய்க்கு ஜோடியாக நடிக்க, இந்த பொன்னான வாய்ப்பை மிஸ் பண்ண விரும்பாத பூஜா ஹெக்டே உடனடியாக ஓகே சொல்லி விஜய்யுடன் பீஸ்ட் படத்தில் நடித்தார். என்ன தான் டோலிவுட்டில் ராசியான ஹீரோயினாக இருந்தாலும் கோலிவுட்டில் இவருக்கும் பிளாப் செண்டிமெண்ட் தொடர்ந்தது. விஜய்க்கு ஜோடியாக அவர் நடித்த பீஸ்ட் படம் படுதோல்வியை சந்தித்தது. 

Pooja hegde

இந்த தோல்விக்கு பின் 2 ஆண்டுகள் தமிழ் சினிமா பக்கமே தலைகாட்டாமல் இருந்த பூஜா ஹெக்டேவுக்கு தற்போது தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து இரண்டு ஜாக்பாட் வாய்ப்புகள் கிடைத்துள்ளது. அதில் ஒன்று சூர்யா உடன் மற்றொன்று தளபதி விஜய் உடன். அதன்படி கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து முடித்துள்ளார் நடிகை பூஜா ஹெக்டே. இப்படத்திற்கு அவர் ரூ.5 கோடி சம்பளம் வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது. 

Thalapathy 69 Heroine Pooja Hegde

இப்படம் ரிலீஸ் ஆகும் முன்னரே தளபதி விஜய்க்கு ஜோடியாக தளபதி 69 படத்தில் நடிக்கும் வாய்ப்பையும் தட்டிதூக்கி இருக்கிறார் பூஜா ஹெக்டே. இப்படத்தை எச்.வினோத் இயக்குகிறார். இப்படத்தோடு நடிகர் விஜய் சினிமாவை விட்டு விலக உள்ளார். இந்த இரண்டு படங்களை மலைபோல் நம்பி இருக்கிறார் பூஜா. இதன்மூலம் பிளாப் நாயகி என்கிற பெயர் முடிவுக்கு வரும் என்றும் காத்திருக்கிறார் பூஜா ஹெக்டே.

இதையும் படியுங்கள்... Thalapathy 69 Pooja Hegde:தளபதி 69 படத்திற்கு டபுள் மடங்கு சம்பளம் வாங்கும் பூஜா ஹெக்டே-எத்தனை கோடி தெரியுமா?

Latest Videos

click me!