50வது நாளில் அடுத்த வைல்டு கார்டு எண்ட்ரி; பிக் பாஸில் செம ட்விஸ்ட் வெயிட்டிங்!

First Published | Nov 19, 2024, 8:36 AM IST

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 8-வது சீசன் டல் அடிக்கும் நிலையில், அதன் 50வது நாளில் வைல்டு கார்டு எண்ட்ரியாக ஒருவர் உள்ளே செல்ல உள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

Vijay sethupathi

தமிழில் பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியின் முதல் சீசனே வேறலெவல் ஹிட் அடித்ததால், ஆண்டுதோறும் பிக்பாஸ் நிகழ்ச்சி 100 நாட்களுக்கு நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இதுவரை 7 சீசன்கள் முடிவடைந்து உள்ளது. இந்த 7 சீசனையும் உலகநாயகன் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கி இருந்தார். இந்த நிலையில் கடந்த மாதம் தொடங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8-வது சீசனை முதன்முறையாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார்.

Bigg Boss Tamil season 8 contestants

இந்த சீசன் தொடங்கும் முன் அதிக பில்டப் இருந்தாலும், நிகழ்ச்சி ஆரம்பித்த பின்னர் எந்தவித பரபரப்பும் இன்றி மந்தமாக சென்றுகொண்டிருக்கிறது. 18 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் இதுவரை ரவீந்தர், அர்னவ், தர்ஷா குப்தா, சுனிதா, ரியா ஆகிய 5 போட்டியாளர்கள் எலிமினேட் ஆகி உள்ளனர். இதுதவிர கடந்த சில வாரங்களுக்கு முன்னர் 6 போட்டியாளர்கள் வைல்டு கார்டு எண்ட்ரியாக பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றிருந்தனர்.

இதையும் படியுங்கள்... பிக் பாஸ் வரலாற்றிலேயே கம்மி சம்பளத்தோடு எலிமினேட் ஆன ரியா; அதுக்குன்னு இவ்வளவுதானா?

Tap to resize

WildCard Contestants

வைல்டு கார்டு எண்ட்ரிக்கு பின்னரும் ஆட்டம் சூடுபிடிக்கவில்லை. இதனால் கடந்த வார இறுதியில் பாய்ஸ் டீம், கேர்ள்ஸ் டீம் இரண்டையும் இடம்மாற்றிக் கொள்ள உத்தரவிட்டார் விஜய் சேதுபதி, அதுவும் செட் ஆகாததால் பிக்பாஸே நேற்றைய எபிசோடில் போட்டியாளர்களிடம் ஓப்பனாக சொல்லிவிட்டார், யாருமே இன்னும் இந்த வீட்டில் வாழ தொடங்கவில்லை என்று. இதுவரை எந்த சீசனிலும் பிக் பாஸ் இதுபோன்று ஓப்பனாக போட்டியாளர்களுக்கு ஹிண்ட் கொடுத்ததில்லை.

Arnav, Vijay Sethupathi

இப்படி உப்பு சப்பு இல்லாமல் செல்லும் பிக்பாஸ் நிகழ்ச்சியை சூடுபிடிக்க வைக்க அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளதாம் பிக் பாஸ் டீம். அதுதான் வைல்டு கார்டு எண்ட்ரி. இம்முறைய் பழைய போட்டியாளர்களை உள்ளே அனுப்பும் ஐடியாவில் உள்ளாராம் பிக் பாஸ். அந்த வகையில் இந்த சீசனில் இருந்து எலிமினேட் ஆனவர்களில் ஒருவரை மீண்டும் உள்ளே அனுப்பி ஆட்டத்தை பரபரப்பாக்கும் திட்டத்தில் இருக்கிறார்களாம். இதுவரை எலிமினேட் ஆனவர்களில் ரவீந்தர் உள்ளே செல்ல வாய்ப்பில்லை என கூறப்படுகிறது. எஞ்சியுள்ளவர்களில் அர்னவ் மற்றும் தர்ஷா குப்தா ஆகிய இருவரில் ஒருவர் தான் மீண்டும் உள்ளே செல்ல அதிக வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது. அது யார் என்பது 50வது நாளில் தெரிந்துவிடும்.

இதையும் படியுங்கள்... தனுஷை விட பணக்காரியா? நடிகை நயன்தாராவின் வியக்க வைக்கும் சொத்து மதிப்பு இதோ

Latest Videos

click me!