சூர்யாவின் இரும்புக்கை மாயாவி; லோகேஷ் எனக்கு கொடுத்த முக்கிய ரோல் - மாஸ் அப்டேட் கொடுத்த நடிகர்!

First Published | Nov 18, 2024, 11:21 PM IST

Irumbu Kai Mayavi : பிரபல நடிகர் சூர்யாவிற்காக பிரத்தியேகமாக லோகேஷ் கனகராஜ் பல ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய ஓர் Fantacy கதை தான் இரும்புக்கை மாயாவி.

Irumbu Kai Mayavi

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை, ஏழே ஆண்டுகளில் ஒரு இயக்குனர் தமிழ் சினிமாவின் மோஸ்ட் வான்டட் இயக்குனராக மாறியிருக்கிறார் என்றால் அது நிச்சயம் லோகேஷ் கனகராஜகத் தான் இருக்க முடியும். அந்த அளவிற்கு தன்னுடைய முதல் திரைப்படத்திலிருந்து முத்திரை பதித்து வரும் இயக்குனராக மாறியிருக்கிறார். கடந்த 2017 ஆம் ஆண்டு தமிழில் வெளியான "மாநகரம்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தான் தனது கலை உலக பயணத்தை தொடங்கினார். அதன் பிறகு பிரபல நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான "கைதி" என்கின்ற திரைப்படம் ஒட்டுமொத்த இந்தியாவிற்கே லோகேஷ் கனகராஜ் அடையாளம் காட்டியது.

நான்கு வரிகளில் மஹாபாரதத்தை சொல்ல முடியுமா? சவாலை ஏற்று மெகா ஹிட் பாடலை உருவாக்கிய கண்ணதாசன்!

Lokesh Kanagaraj

இன்று தமிழ் மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்ற லோகேஷ் கனகராஜின் சினிமாடிக் யுனிவர்சில் வெளியான முதல் திரைப்படம் "கைதி" என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு கடந்த 2021 ஆம் ஆண்டு தளபதி விஜயை வைத்து "மாஸ்டர்" என்ற படத்தை அவர் கொடுத்தார். இதை தொடர்ந்து அவருடைய இயக்கத்தில் வெளியான விக்ரம் மற்றும் லியோ ஆகிய இரண்டு படங்களுமே கனகராஜின் சினிமாடிக் யூனிவெர்சில் வந்தது அதிலும் குறிப்பாக லியோ படத்தில் உலகநாயகன் கமலஹாசனின் கேமியோ தமிழ் மக்கள் மத்தியில் உச்சகட்ட வரவேற்பை பெற்றது.

Tap to resize

Suriya

தற்பொழுது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக வளம் வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கூலி என்கின்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார் லோகேஷ். ஆனால் மாநகரம் திரைப்படத்தை இயக்குவதற்கு முன்னதாகவே ஒரு பேண்டஸி கதையை உருவாக்கினார். அதுதான் இரும்புக்கை மாயாவி என்ற படம். இந்த திரைப்படத்தை நடிகர் சூர்யாவை வைத்து எடுக்க வேண்டும் என்று அவர் ஆசைப்பட்ட நிலையில் கிட்டத்தட்ட 8 ஆண்டுகளுக்கு மேலாக அந்த திரைப்படம் உருவாகாமலே இருந்து வருகிறது. ஒரு கட்டத்தில் சூரியாவின் கைவிடப்பட்ட திரைப்படங்களில் ஒன்றாக அது மாறியது. இருப்பினும் நிச்சயம் அந்த திரைப்படத்தை சூரியாவை வைத்து எடுப்பேன் என்று உறுதி அளித்துள்ளார் லோகேஷ்.

RJ Balaji

இந்நிலையில் தன்னுடைய திரைப்பட பிரமோஷனல் இருந்து வரும் பிரபல நடிகர் மற்றும் இயக்குனர் ஆர்.ஜே. பாலாஜி இரும்புக்கை மாயாவி திரைப்படம் குறித்து ஒரு தகவலை வெளியிட்டு இருக்கிறார். லோகேஷ் கனகராஜ் மற்றும் ஆர்.ஜே. பாலாஜி ஆகிய இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் இரும்புக்கை மாயாவி படத்தில் தனக்கு ஒரு முக்கிய கதாபாத்திரத்தை லோகேஷ் கனகராஜ் கொடுத்திருந்ததாகவும். ஆனால் இன்னும் அதில் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன எடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை என்றும் கூறியுள்ளார். ஆகவே இரும்புக்கை மாயாவி படம் உருவாகும்போது சூர்யாவுடன் இணைந்து பாலாஜி நடிப்பது உறுதியாகியுள்ளது. இது மட்டுமல்ல சூர்யாவின் 45வது திரைப்படத்தை பாலாஜி தான் இயக்க உள்ளார்.

சோஷியல் மீடியாவையே கலக்கி வரும் பள்ளி மாணவி யோக ஸ்ரீ – எங்கு பார்த்தாலும் ஒலிக்கும் குரல் – குவியும் பாராட்டு!

Latest Videos

click me!