நான்கு வரிகளில் மஹாபாரதத்தை சொல்ல முடியுமா? சவாலை ஏற்று மெகா ஹிட் பாடலை உருவாக்கிய கண்ணதாசன்!

First Published | Nov 18, 2024, 9:50 PM IST

Kannadasan : ஒரு விடுத்த சவாலை ஏற்று நான்கு வரிகளில் மஹாபாரத கதையை ஒரு பாட்டில் வைத்துள்ளார் கவிஞர் கண்ணதாசன்.

Kannadasan

கண்ணதாசன்.. தமிழ் திரை உலகையும் இந்த கவிஞரையும் எந்த காலத்திலும் பிரிக்க முடியாது என்று கூறினால் அது மிகையல்ல. அந்த அளவிற்கு சுமார் நான்கு தலைமுறை நடிகர்களுக்கு மெகா ஹிட் பாடல்களை அள்ளிக் கொடுத்த ஒரு மிகச் சிறந்த கவிஞர் இவர். கடந்த 1949 ஆம் ஆண்டு தமிழில் வெளியான "கன்னியின் காதலி" என்கின்ற திரைப்படத்தில் சுப்பையா நாயுடுவின் இசையில் ஒலித்த ஐந்து பாடல்களுக்கு வரிகளில் எழுதியது கண்ணதாசன்தான் தான். இந்த திரைப்படத்தின் மூலம் தான் தன்னுடைய கலை உலக பயணத்தை அவர் தொடங்கினார்.

வெளியாகி 4 நாள் ஆச்சு; இந்த சூழலில் கத்திரி போடப்பட்ட கங்குவா - ஏன் இந்த திடீர் முடிவு?

Poet Kannadasan

தொடர்ச்சியாக 1949 ஆம் ஆண்டிலிருந்து 1980 களின் இறுதிவரை அவர் பல படங்களுக்கு பாடல்களை எழுதியிருக்கிறார். அண்மையில் கிடைத்த தகவலின்படி கடந்த 1982 ஆம் ஆண்டு பிரபல நடிகர் கமல்ஹாசன் நடிப்பில், இளையராஜா இசையில், பாலுமகேந்திராவின் இயக்கத்தில் வெளியான "மூன்றாம் பிறை" என்கின்ற திரைப்படத்தில் தான் தன்னுடைய இறுதி பாடல்களை கண்ணதாசன் எழுதியதாக கூறப்படுகிறது. குறிப்பாக "கண்ணே கலைமானே" என்கின்ற பாடல் தான் அவர், தன் வாழ்நாளில் எழுதிய இறுதி திரை உலக பாடல் என்றும் கூறப்படுகிறது.

Tap to resize

Lyricist Kannadasan

திரையிசை பாடல்கள் என்பதை தாண்டி புத்தகம் எழுதுவதிலும் வல்லவர் கண்ணதாசன். அது மட்டுமல்ல அவருடைய பக்தி பாடல்களுக்கு என்று ஒரு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இன்றளவும் இருந்து வருகிறது. கிராமத்து பகுதிகளில் நடைபெறும் கோவில் திருவிழாக்களில், இன்றளவும் கவிஞர் கண்ணதாசனின் பாடல்கள் இல்லாமல் அந்த திருவிழா முழுமை பெறாது என்றால் அது மிகையல்ல. இப்படிப்பட்ட சூழலில் கண்ணதாசனிடம் ஒருவர் சவாலாக ஒரு விஷயத்தை பேசி இருக்கிறார். மிக ரத்தின சுருக்கமாக உங்களால் ஒரு பாட்டுக்குள் மகாபாரத கதையை வைத்துவிட முடியுமா என்று கேட்க. ஏன் முடியாது? என்று அந்த சவாலை ஏற்றுக்கொண்டு நான்கே வரிகளில் மகாபாரத கரையை தன்னுடைய பக்தி பாடல் ஒன்றில் வைத்து அசத்தியிருக்கிறார் கண்ணதாசன்.

Krishna Songs

விஸ்வநாதன் இசையில், டி,எம் சௌந்தரராஜன் பாடிய "புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே" என்கின்ற கிருஷ்ணனை குறித்த பக்தி பாடலில் தான் இந்த மகாபாரத கதையை அவர் வைத்திருக்கிறார். இந்த பாடலுக்கு இடையில் "பாஞ்சாலி புகழ்காக்க தன் கை கொடுத்தான்.. அந்த பாரத போர் முடிக்க சங்கை எடுத்தான். பாண்டவர்க்கு உரிமை உள்ள பங்கு கொடுத்தான். நாம் படிப்பதற்கு கீதையயேனும் பாடம் கொடுத்தான்" என்று மகாபாரதக் கதையை நான்கே வரிகளில் இரத்தின சுருக்கமாக எழுதி பலரையும் அசத்தியிருந்தார் கண்ணதாசன்.

சோஷியல் மீடியாவையே கலக்கி வரும் பள்ளி மாணவி யோக ஸ்ரீ – எங்கு பார்த்தாலும் ஒலிக்கும் குரல் – குவியும் பாராட்டு!

Latest Videos

click me!