
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ச ரி க ம ப லிட்டில் சாம்பியன்ஸ் ரியாலிட்டி ஷோவின் 4ஆவது சீசனின் மெகா ஆடிஷன் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த ரியாலிட்டி ஷோவில் எப்படியாவது செலக்ட் ஆகி ஜெயிக்கணும் என்று கரூர் மாவட்டம் பால்வர்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 13 வயதான 9ஆம் வகுப்பு அரசு மேல்நிலைபள்ளி, மணவாடி மாணவி யோக ஸ்ரீயும் கலந்து கொண்டு பாடி வருகிறார்.
மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த யோகஸ்ரீயின் தந்தை மகாமுனி டைல்ஸ் ஒட்டும் வேலை செய்து வருகிறார். மொத்தம் 3 பெண்கள், ஒரு ஆண் என்று அவர்களது குடும்பத்தில் அம்முவான நாய்க் குட்டியுடன் சேர்த்து மொத்தம் 9 பேர் இருக்கிறார்கள். மூத்த மகள் தான் யோக ஸ்ரீ. இப்போது சரிகமப லிட்டில் சாம்பியன்ஸ் ரியாலிட்டி ஷோ மெகா ஆடிஷனில் முதல் பாட்டிலே நடுவர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளார்..
கடந்த 2 ஆம் தேதி பிரம்மாண்டமாக தொடங்கிய இந்த சீசனில் தமிழகத்தின் மூலை முடக்குகளிலுமிருந்து மாணவர்கள், சிறுவர்கள் என்று பலரும் கலந்து கொண்டு பாடல் பாடி அசத்தி வருகின்றனர். அதில் யோகஸ்ரீயும் ஒருவர். கரூர் மாவட்டத்திற்கே பெருமை சேர்க்கும் வகையில் பாடல் பாடி அசத்தி வருகிறார். இதற்கு முக்கிய காரணம் மணவாடி அரசு பள்ளியின் 2ஆம் வகுப்பு ஆசிரியையான மகேஸ்வரி தான். யோக ஸ்ரீயின் இனிமையான குரலை கண்டு அவரை பாடல் பாட தூண்டியிருக்கிறார்.
மேலும், சிங்கராக வர வேண்டும் என்பதற்காக பயிற்சி கொடுத்து வருகிறார். யோக ஸ்ரீயை சிங்கராக்க வேண்டும் என்பதே தனது ஆசையாக வைத்திருக்கிறார். இப்படியெல்லாம் ஒரு ஆசிரியை கிடைக்க ஒவ்வொரு மாணவரும், மாணவிகளும் கொடுத்து வைத்திருக்க வேண்டும். பள்ளியில் வகுப்பில் பாடம் எடுத்தோமா சம்பளம் வாங்கினோமா என்று இல்லாமல் மாணவியின் குரலில் உள்ள இனிமையை உணர்ந்து அவரை பாடல் பாட வைத்து இன்று இந்த மேடையில் நிற்க வைத்திருக்கிறார். அந்த ஆசிரியைக்கு எங்களது வாழ்த்துக்கள்.
ஆசிரியையின் தூண்டுதலைத் தொடர்ந்து யோக ஸ்ரீக்கு ஆதரவாக இருந்தது அவரது தந்தை மகாமுனி. அவரும் யோகஸ்ரீக்கு பாடல் பாட சொல்லிக் கொடுத்திருக்கிறார். தன் முன்னாள் பாடல் பாடவும் வைத்து அதில் ஆனந்தம் அடைந்துள்ளார். ஊரறிய பேர் எடுத்த வீர முத்து பொண்ணு என்று யோக ஸ்ரீ பாடல் பாட தொடங்கியிருக்கிறார். இப்போது இந்த ஜீ தமிழ் மேடையில் வந்து நின்று குறிஞ்சியிலேயே பூ மலர்ந்து என்ற பாடலை பாடி நடுவர்களை மெய் சிலிர்க்க வைத்துள்ளார்.
இதில் என்ன ஆச்சரியம் என்று கேட்டால் அவரது குரலுக்கு அவர் தேர்வு செய்யும் பாடல்களும் கச்சிதமாக பொருந்துகிறது. குறிஞ்சியிலேயே பூ மலர்ந்த என்ற இந்தப் பாடல் கந்தன் கருணை படத்தில் இடம் பெற்ற பாடலை பின்னணி பாடகி பிரபலமான பி சுசீலா பாடியிருப்பார். படத்தில் ஜெயலலிதா, சிவாஜி கணேசன், கேபி சுந்தராம்பாள், ஜெமினி கணேசன், சிவக்குமார் ஆகியோர் பலர் நடித்திருப்பார்கள்.
இந்த படத்தில் இடம் பெற்ற பாடலைத் தான் அவர் பாடியிருப்பார். ஒரு முறை அல்ல ஓராயிரம் முறை யோகஸ்ரீயை பாட வைத்து கேட்டுக் கொண்டே இருக்கலாம் அப்படியொரு குரல் வளம் கொண்டுள்ளார். இந்த பாட்டுக்கு பிறகு நேருக்கு நேர் படத்துல இடம் பெற்றுள்ள எங்கெங்கே என்ற பாடலை பாடியிருப்பார். கடந்த 16ஆம் தேதி நடைபெற்ற எபிசோடில் கோடி அருவி கொட்டுதே என்ற பாடல் பாடி அசத்தியிருப்பார். இப்படி அசத்தி வரும் யோகஸ்ரீ க்கு பலரும் வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்து வரும் நிலையில் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.