பிறப்பிலேயே கோல்டன் ஸ்பூன்! சர்ச்சையில் சிக்கி கைதான நடிகை கஸ்தூரியின் சொத்து மதிப்பு எவ்வளவு?

First Published | Nov 18, 2024, 8:31 PM IST

தமிழ் சினிமாவில் 90-களில் முன்னணி நடிகையாக இருந்த கஸ்தூரி, அடிக்கடி வான்டடாக சென்று சில சர்ச்சைகளில் சிக்கிக் கொள்வது வழக்கமான ஒன்றே. அந்த வகையில் தற்போது தெலுங்கு மக்கள் பற்றி பேசி அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ள கஸ்தூரியின் சொத்து மதிப்பு, குடும்ப பின்னணி, குறித்த தகவல்களை இந்த பதிவில் பார்ப்போம்.
 

Kasthuri Shankar

சென்னையை சேர்ந்த நடிகை கஸ்தூரி, எத்திராஜ் கல்லூரியில் படிக்கும்போதே 1991 ஆம் ஆண்டு, 'ஆத்தா உன் கோயிலிலே' திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தவர் இயக்குனர் கஸ்தூரிராஜா தான். இந்த படத்தில் கஸ்தூரியின் கதாபாத்திரம் நல்ல வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து, அடுத்தடுத்து ராசாத்தி வரும் நாள், கவர்மெண்ட் மாப்பிள்ளை, சின்னவர், உண்மை ஊஞ்சலாடுகிறது, செந்தமிழ் பாட்டு, அபிராமி போன்ற பல படங்களில் நடித்தார்.

Kasthuri Acting Carrier

கல்லூரி காலங்களில் மாடலிங் துறையில் கவனம் செலுத்திய கஸ்தூரி, 1992 ஆம் ஆண்டு மிஸ் சென்னை அழகி போட்டியில் கலந்து கொண்டு, வெற்றி பெற்றார். பின்னர் ஃபெமினா மிஸ் மெட்ராஸ் பியூட்டி பேஜன்ட் உள்ளிட்ட பல அழகி போட்டிகளில் கலந்துகொண்டு பட்டம் பெற்றவர். கஸ்தூரி திரைத்துறையில் சாதிக்க முழுக்க முழுக்க உறுதுணையாக இருந்தது இவரின் பெற்றோர் தான்.

கணவரோடு திருசெந்தூர் போன ரம்யா பாண்டியன்.! எதிர்பாராமல் கிடைத்த பிரபலத்தின் வாழ்த்து!
 


Kasthuri Shankar Modeling

பிராமின் குடும்பத்தை சேர்ந்த நடிகை கஸ்தூரி, பிறக்கும் போதே வசதியான குடும்பத்தில் பிறந்தவர். இவருடைய அம்மா சுமதி ஒரு வழக்கறிஞர், அப்பா ஷங்கர் என்ஜினீயர். படிப்பில் சுட்டியாக இருந்தாலும், மாடலிங் துறையில் கஸ்தூரிக்கு இந்த ஆர்வம், இவரை ஒரு நடிகையாக மாற்றியது. அம்மா ஒரு வழக்கறிஞர் என்பதால் தன்னுடைய இளம் வயதில் இருந்தே மனதில் படும் கருத்துக்களை வெளிப்படையாக இவர் பேசி விடுவார். இதனால் பல சர்ச்சைகளில் கஸ்தூரி சிக்கி உள்ளார்.

Kasthuri Shankar shocking comment on Telugu Peoples

ஆனால் இவர் தெலுங்கு பேசும் பெண்கள் பற்றி பேசிய கருத்து முந்தய பிரச்சனைகள் போல் இல்லாமல் பூதாகரமாக வெடித்துள்ளது. அதாவது கடந்த சில தினங்களுக்கு முன்பு, இவர் தெலுங்கு பேசும் பெண்கள் குறித்து ஆபாச கருத்து தெரிவித்ததாக கூறப்பட்ட நிலையில், இந்த பிரச்சனை தென்னிந்திய திரை உலகை தாண்டி, இந்திய அளவிலும் பரபரப்பை ஏற்படுத்தியது. எனவே தெலுங்கு பேசும் பெண்கள் மற்றும் தெலுங்கர்கள் குறித்தும் இவர் சர்ச்சையாக பேசியதற்கு கஸ்தூரியை கைது செய்ய வேண்டும் என கூறப்பட்டது.

சிம்பு மீதான முதல் காதல் முதல்... நடிக்க தடை போட்ட பிரபு தேவா வரை! நயன்தாரா ஆவணப்படத்தின் ஹை லைட்ஸ்!

Kasthuri Shankar Arrested

சென்னை எழும்பூர் காவல் நிலையத்தில் கஸ்தூரி மீது கொடுக்கப்பட்ட புகாரை தொடர்ந்து,  ஹைதராபாத்தில் வைத்து இவரை நவம்பர் 16ஆம் தேதி கைது செய்தனர். தயாரிப்பாளர் ஒருவருடைய வீட்டில் பதுங்கி இருந்த கஸ்தூரியை போலீசார் கைது செய்ததாக தகவல் வெளியான நிலையில், நடிகை கஸ்த்தூரி வெளியிட்ட வீடியோவில், தன்னுடைய வீட்டில் இருந்து தான் போலீசார் கைது செய்துள்ளனர். நான் யாருக்கும் பயந்து தலைமறைவாக வில்லை. தொடர்ந்து போலீசாருக்கு ஒத்துழைப்பு கொடுப்பேன் என கூறிய வீடியோ வைரலானது.

Kasthuri Shankar Family details

பிரச்சனையான சமயத்தில் கூட, செம்ம தில்லாக இந்த பிரச்னையை சமாளிக்கும் கஸ்த்தூரியின் பேச்சு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இவருடைய குடும்ப பின்னணி மற்றும் சொத்து மதிப்பு குறித்த தகவலை இந்த பதிவில் பார்ப்போம்.

48 வயதாகும் கஸ்தூரியின் கணவர் ரவிக்குமார் ஒரு மருத்துவர் ஆவார். இவருக்கு சங்கல்ப் என்கிற மகனும், சோபினி என்கிற மகளும் உள்ளனர். திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வரும் கஸ்தூரியின் கணவரும் வசதியான குடும்பத்தை சேர்ந்தவர். கஸ்தூரிக்கு சொந்தமாக சென்னையில் 2 வீடு மற்றும் ஹைதராபாத்தில் ஒரு வீடு உள்ளது. அமெரிக்காவிலும் ஒரு வீடு உள்ளதாக கூறப்படுகிறது.

மன நெகிழ்வுடனும்.. கனத்த இதயத்துடனும்; இயக்குனர் பாலா பற்றி எமோஷ்னலாக உருகிய அருண் விஜய்!

Kasthuri Shankar Net Worth

மேலும் இவர் தான் நடிக்கும் படங்களுக்கு 15 முதல் 20 லட்சம் வரை சம்பளமாக பெறுகிறார். சீரியலுக்கு ஒரு எபிசோடுக்கு 30 ஆயிரம் பெறுவதாக கூறப்படுகிறது. மேலும் இவருடைய மொத சொத்து மதிப்பு 15 முதல் 20 கோடி இருக்கலாம் என கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்து எந்த ஒரு அதிகார பூர்வ தகவலும் இல்லை.

Latest Videos

click me!