சிம்பு மீதான முதல் காதல் முதல்... நடிக்க தடை போட்ட பிரபு தேவா வரை! நயன்தாரா ஆவணப்படத்தின் ஹை லைட்ஸ்!

Published : Nov 18, 2024, 05:57 PM IST

நடிகை நயன்தாராவின் டாக்குமென்டரி தற்போது netflix ott தளத்தில் வெளியாகி உள்ள நிலையில், அதில் நயன்தாரா பற்றி பேசப்பட்டுள்ள ஹை லைட்டான விஷயங்கள் என்னென்ன? என்பதை பார்ப்போம்.  

PREV
110
சிம்பு மீதான முதல் காதல் முதல்... நடிக்க தடை போட்ட பிரபு தேவா வரை! நயன்தாரா ஆவணப்படத்தின் ஹை லைட்ஸ்!

கோலிவுட் திரை உலகின் லேடி சூப்பர் ஸ்டாராக இருக்கும் நடிகை நயன்தாரா, இன்று தன்னுடைய 40-ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இந்நிலையில் இவருடைய திருமணம் மற்றும் இவர் கடந்து வந்த பாதை குறித்து, netflix ott நிறுவனம ஆவணப்படம் உருவாகியுள்ளது. இதை இயக்குனர் கெளதம் மேனன் இயக்கி உள்ள நிலையில், இந்த திரைப்படம் நயன்தாராவுக்கு திருமணம் ஆகி இரண்டு வருடங்கள் கழித்து, அவருடைய பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகியுள்ளது.
 

210

Netflixல் இந்த வீடியோ வெளியாவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பே... 'நானும் ரவுடி தான்' படத்தின் ஷூட்டிங்கில் எடுக்கப்பட்ட ஒரு வீடியோவை இந்த, ஆவணப்படத்தில் பயன்படுத்தியதாக தனுஷ் 10 கோடி கேட்பதாக அளப்பறை செய்தார் நயந்தாரா. இந்நிலையில் இந்த ஆவணப்படத்தில் ஹைலைட்டான விஷயங்கள் குறித்து பார்ப்போம்.

கங்குவாவை ஒரே வாரத்தில் வாஷ் அவுட்டாக்க நவம்பர் 22-ஆம் தேதி வெளியாகும் 6 படங்கள்!
 

310
Simbu and Nayanthara

நடிகை நயன்தாரா, இந்த ஆவண படத்தில் "தன்னுடைய சினிமா பயணம் குறித்து பேசியுள்ளார்.  அதாவது சினிமாவுக்கு வந்த புதிதில், அனைவரையும் நம்பினேன். என்னிடம் யாராவது நன்றாக பேசினால் அவர்களை கண்ணை மூடிக்கிட்டு நம்பி விடுவேன். குறிப்பாக என்னுடைய முதல் காதலில், நான் உண்மையாக இருந்தேன். நம்பிக்கை மட்டும் தான் எல்லா உறவுகளையும் உருவாக்கும். அதை மட்டுமே நான் அடுத்தவரிடம் எதிர்பார்த்தேன். அந்த நபர் உங்களை முழுமையாக காதலிக்கிறார் என்றால் நீங்கள் அவரை 100% நம்பனும். நான் அதில் 100% எப்போதும் கொடுத்துள்ளேன். என சிம்பு மீதான தன்னுடைய முதல் காதல் அனுபவம் பற்றி இந்த ஆவணப்படத்தில் பேசி உள்ளார்.
 

410

மேலும் சினிமாவில் எதிர்கொண்ட விமர்சனம் குறித்து நயன்தாரா பேசும்போது, 'கஜினி' படம் தான் எனக்கு மிகப்பெரிய வேதனையை கொடுத்தது. அந்த சமயத்தில் பலர் இவங்களை எல்லாம் எதுக்கு நடிகையா போட்டாங்க? ரொம்ப குண்டா இருக்காங்கன்னு விமர்சனம் செஞ்சாங்க. அந்த படத்தில் இயக்குனர் என்ன உடை அணிந்து நடிக்க சொன்னாரோ, அதை தான் நான் செய்தேன். அந்த சமயத்தில் இதெல்லாம் ஒரு பிரச்சினையே இல்ல... கடந்து வா அப்படின்னு சொல்ல என்கூட ஒருவர் கூட இல்லை. என நயன்தாரா எமோஷனலாக பேசி உள்ளார்.

 

மன நெகிழ்வுடனும்.. கனத்த இதயத்துடனும்; இயக்குனர் பாலா பற்றி எமோஷ்னலாக உருகிய அருண் விஜய்!
 

510
Ajith starrer Billa Movie Heroine

அஜித்தின் படத்தால் தன்னுடைய திரையுலக வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்புமுனை குறித்து இந்த ஆவணப்படத்தில் நயன்தாரா குறிப்பிட்டுள்ளார். அதாவது 'பில்லா' படத்தில் நயன் நடித்த பிகினி சீன் அதிக அளவில் பேசப்பட்டது. இந்த சீன் குறித்து பேசி உள்ள நயன், இந்த காட்சியில் நான் எதையும் நிரூபிக்கணும்னு நடிக்கல. இயக்குனர் சொன்னதை செஞ்சேன். அது எனக்கு மிகப்பெரிய அளவில் கை கொடுத்தது மாற்றம் என்பது இப்படி கூட வரும் என்பதை எனக்கு உணர்த்தியது இந்த படம் தான்.

610
Nayanthara About Prabhu Deva

சினிமாவை விட்டு சில காலம் விலகியது குறித்து பேசி உள்ள நயன், 'நான் நடுவில் சினிமாவை விட்டு விலகுவதற்கு காரணம் நான் இல்லை. அந்த ஒரு நபர் தான்... இது என்னுடைய முடிவும் இல்லை. நான் எப்போதுமே திரையுலகை விட்டு விலக வேண்டும் என எண்ணியது கூட கிடையாது. ஆனால் அந்த நபர் ஒரே ஒரு வார்த்தையில், இனிமேல் நீ நடிக்க கூடாதுன்னு சொல்லிட்டாரு. அந்த சமயத்துல அவர் ரொம்ப பெருசா தெரிஞ்சார். லைஃப்ப புரிஞ்சிக்கிற அளவுக்கு எனக்கு பக்குவம் இல்ல. அதனால சினிமாவில் இருந்து விலகி இருந்தேன் என பேசி உள்ளார்.

கமல்ஹாசன் முதல் சிம்பு வரை; ரியல் லைப் மன்மதனாக வலம் வந்த நடிகர்கள்!
 

710
Nagarjuna about Nayanthara

நயன்தாரா பற்றி நடிகர் நாகார்ஜுனா பேசும் போது, நயன்தாராவுடன் வெளிநாட்டில் ஷூட்டிங் போய்க்கொண்டிருக்கும் போது தான்... அவருடைய காதல் வாழ்க்கையில் மிகப்பெரிய பிரச்சனை ஏற்பட்டது. ஷூட்டிங் ஸ்பாட்டில் அவருக்கு போன் வந்தாலே நாங்க பயந்து விடுவோம். காரணம் போன் வந்துச்சுன்னா அவங்க அப்படியே மாறிடுவாங்க. இதெல்லாம் பார்த்து ஒரு சமயத்தில் ஏன் இப்படி எல்லாம் மாட்டிக்கிட்டு கஷ்டப்படுறீங்கன்னு நயன்தாரா கிட்ட நானே கேட்டிருக்கேன். ஆனால் இப்போது அவர் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளார். அதை பார்க்க நிறைவாக உள்ளது என பேசியுள்ளார்.
 

810
Nayanthara Movie

மேலும் நயன்தாராவுக்கு நடிப்பில் உள்ள அர்ப்பணிப்பு குறித்து, அவர் நடித்து தெலுங்கு படமான ராமராஜ்யம் பட இயக்குனர் பேசு போது...  இந்த படத்தில் நயன்தாரா சீதா கதாபாத்திரத்தில் நடிக்க கூடாது என தமிழ் மற்றும் தெலுங்கில் மிகப்பெரிய எதிர்ப்புகள் வந்தது. அதையெல்லாம் தாண்டி தான் நயன்தாரா அந்த கதாபாத்திரத்தில் நடித்து முடித்தார். இந்த படத்தின் சூட்டிங் போன சமயத்தில், நான்வெஜ் ஹோட்டலில் அவர் தங்கி இருந்தாலும், அந்த ஹோட்டல்ல ஒரு வாய் தண்ணி கூட குடிக்காமல் விரதம் இருந்து நடித்தார். அவர் நடிப்புக்கு கொடுக்கும் அர்ப்பணிப்பு எப்போதுமே பிரமிக்க செய்யும் என தெரிவித்துள்ளார்.

என்னோட படமாக இருந்தாலும் சரி, படம் நல்லா இல்லனா ஹிட் ஆக்காதீங்க – சூர்யா ஓபன் டாக்!
 

910
Nayanthara About Pain

இதைத்தொடர்ந்து தன்னுடைய வலிகள் குறித்து பேசி உள்ள நயன்தாரா, நீங்கள் என்ன பண்றீங்கன்னு புரிஞ்சுக்கணும்னாலே நீங்க அதற்கான சூழ்நிலையில் இருந்தால் தான் அது நடக்கும். உங்களுக்கு பல விஷயங்கள் புரிய ஆரம்பிக்கும், உங்களை சுற்றி யாரெல்லாம் இருக்காங்கன்னு தெரியும். அது மாதிரி ஒரு வழி தான் என்ன முழுவதும் உடைத்தது. அப்பு யோசிச்சேன் கண்டிப்பா எனக்கு ஒரு நாள் வரும் அன்னைக்கு பிரச்சனை இல்லன்னு எல்லோருக்கும் புரியவரும் என்று நினைத்தேன். அது இப்போது இருப்பதாக உணர்கிறேன் என் பேசியுள்ளார்.
 

1010
Nayanthara Revenge

மேலும் வாழ்க்கையில தப்பு செய்யறது சகஜம் தான். அதை பற்றி கவலைப்படுவதும் தப்பில்ல. ஒரு வேலை வாழ்க்கையில இந்த காலகட்டத்துல, இந்த நபரை நாம் நம்பாமல் இருந்திருந்தால் என் வாழ்க்கையில சில வருஷங்களை இழந்திருக்க மாட்டேன். ஒன்னு வாழ்க்கை போச்சுன்னு அழணும். இல்ல எழுந்து நிற்கணும். யாரெல்லாம் உங்கள மோசமா ட்ரீட் பண்ணாங்களோ, ஒவ்வொரு நாளும் உங்களை பத்தி உங்களுக்கு செஞ்ச மோசமான விஷயத்தை எண்ணி அவங்கள வருந்தி வேதனை பட வைக்கணும் என தெரிவித்துள்ளார்.

கையில் உலக்கையுடன் நயன்தாரா; ரணகளத்துக்கு மத்தியில் வெளியான புது பட அப்டேட்!
 

Read more Photos on
click me!

Recommended Stories