இதை தொடர்ந்து, ஒரே மாதிரியான கதை காலத்தில் இருந்து விலகி... தனித்துவமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்ய துவங்கினார். அந்த வகையில் இவர் நடிப்பில் உருவாகியுள்ள, குற்றம் 23, செக்கச் சிவந்த வானம், தடம், மாஃபியா, யானை, சினம், போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. தற்போது இயக்குனர் பாலா இயக்கத்தில் 'வணங்கான்' என்கிற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள இந்த படத்தில், ரோஷினி பிரகாஷ் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார்.