கங்குவாவை ஒரே வாரத்தில் வாஷ் அவுட்டாக்க நவம்பர் 22-ஆம் தேதி வெளியாகும் 6 படங்கள்!

First Published | Nov 18, 2024, 1:56 PM IST

கடந்த வியாழக்கிழமை, (நவம்பர் 14-ஆம் தேதி) வெளியான 'கங்குவா" திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து, கலவையான விமர்சனங்களை பெற்று வரும் நிலையில்...  இந்த வாரம், அதாவது நவம்பர் 22 ஆம் தேதி திரையரங்கில் ரிலீசாக உள்ள திரைப்படங்கள் பற்றிய தகவல்களை இந்த பதிவில் பார்ப்போம்.
 

ஜாலியோ ஜிம்கானா:

நடிகர் பிரபுதேவா நடிப்பில், நவம்பர் 22-ஆம் தேதி வெளியாக உள்ள திரைப்படங்களில் ஒன்று 'ஜாலியோ ஜம்கானா'. இயக்குனர் எஸ் ஜே சீனு என்பவர் இயக்கி உள்ள... இந்த திரைப்படத்தில், பிரபுதேவாவுக்கு ஜோடியாக நடிகை மடோனா செபஸ்டியன் நடித்துள்ளார். இரண்டாவது நாயகியாக யாஷிகா ஆனந்த் நடிக்க, கிங்ஸ்லி, அபிராமி, ஒய் ஜி மகேந்திரன், யோகி பாபு, உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

பிரபுதேவா இதற்கு முன்பு நடித்த கதாபாத்திரங்களில் இருந்து, மிகவும் வித்தியாசமான கதைக்களத்தில் 'ஜாலியோ ஜிம்கானா' உருவாகியுள்ளது. பிரபு தேவா கடைசியாக தளபதி விஜயுடன் சேர்ந்து, 'கோட்' படத்தில் நடித்து மிரட்டி இருந்தார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பும் கூடியுள்ளது.
 

நிறங்கள் மூன்று:

நடிகர் அதர்வா முரளி நடிப்பில், கடைசியாக 2022-ஆம் ஆண்டு 'பட்டத்து யானை' திரைப்படம் வெளியானது. இதை தொடர்ந்து சுமார் இரண்டு வருடங்களுக்கு பின்னர், இவர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'நிறங்கள் மூன்று'. திரில்லர் கதையம்சம் கொண்ட இந்த படத்தை, இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கி உள்ளார். 

மேலும் இந்த படத்தில் சரத்குமார், ரகுமான், அம்மு அபிராமி உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து, இப்படம் நவம்பர் 22 ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்திற்கு டிஜோ ஜாமி என்பவர் ஒளிப்பதிவு செய்ய, ஜாக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார். ஐயங்காரன் இன்டெர்நேஷ்னல் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.

கமல்ஹாசன் முதல் சிம்பு வரை; ரியல் லைப் மன்மதனாக வலம் வந்த நடிகர்கள்!
 

Tap to resize

பராரி:

இயக்குனர் ராஜு முருகனின், உதவியாளர் எழில் பெரியவேடி இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படத்தை, இயக்குனர் ராஜு முருகனின் எஸ்பி சினிமாஸ் நிறுவனம் வழங்கியுள்ளது. ஜெய் பீம் திரைப்படத்தை போன்று, ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வியலை கண் முன் நிறுத்தும் விதத்தில், இந்த படத்தை இயக்குனர் இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் கதாநாயகனான ஹரி ஷங்கர் தான் இந்த படத்தை தயாரித்துள்ளார். மேலும் ஹீரோயினாக சங்கீதா கல்யாண் நடித்துள்ளார். புதுமுக நடிகர்கள் கூட்டணியில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு சீன் ரோல்டன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் டீசர் மற்றும் ட்ரைலர் வெளியான போது இப்படம் மீது ரசிகர்களுக்கு ஒருவித தாக்கம் ஏற்பட்ட நிலையில், ஜெய் பீம் அளவுக்கு இப்படம் பேசப்படும் படைப்பாக இருக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

தூவல்:

புதுமுக நடிகர் - நடிகைகள் நடிப்பில், நவம்பர் 22 ஆம் தேதி வெளியாக உள்ள திரைப்படம் 'தூவல்'. இந்த படத்தை ராஜவேல் கிருஷ்ணா என்பவர் இயக்க, இதுவரை திரையில் சொல்லப்படாத கதைகளத்தில் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.  சிங்கர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில், இந்த படத்தை கமலா குமாரி தயாரித்துள்ளார்.

ராம் கோபி, இலையா, ராஜ்குமார் சிவம், ஜே எஸ் எஸ் கோகுல், சுகன்யா திவ்யா, போன்ற பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். இதுவரை சுமார் 40-க்கும் மேற்பட்ட விருதுகளை வென்று குவித்துள்ள இந்த திரைப்படம், அருவிகளில் மீன் பிடித்து வாழ்வாதாரத்தை நடத்தும் அடிப்படை மக்களின் வாழ்வியலை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. 

சுந்தரி சீரியல் முடிந்த கையோடு குட் நியூஸ் சொன்ன கேப்ரியல்லா! குவியும் வாழ்த்துக்கள்

குப்பன்:

சிறு பட்ஜெட் படங்கள் அதிகம் எடுக்கப்பட்டு வரும் நிலையில், 'குப்பன்' என்கிற திரைப்படமும் சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு, நவம்பர் 22ஆம் தேதி ரிலீசாக உள்ளது. இந்த படத்தை கதை, திரைக்கதை எழுதி, இயக்கி உள்ளார் சரண்ராஜ் . தேவ் மற்றும் அதிராம் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க , இந்த படத்தை, 'குப்பன்' பட இயக்குனர் சரண்ராஜ் மற்றும் ஆதித்யா ஆகியோர் தயாரித்துள்ளனர்.

ஜனார்த்தன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு, எஸ் ஜி இலை என்பவர் இசையமைத்துள்ளார். காதல் கதை களத்தில் காதல் -  நட்பு போன்றவற்றை பேசும் ஜனரஞ்சகமான கதைகளத்தில் இப்படம் உருவாக்கி உள்ள நிலையில், இப்படம் ரசிகர்கள் மனதை வெல்லுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

எமக்கு தொழில் ரொமான்ஸ்:

நடிகர் அசோக் செல்வன் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் 'எமக்குத் தொழில் ரொமான்ஸ்'. நவம்பர் 22-ஆம் தேதி தான் இந்த திரைப்படமும் வெளியாக உள்ளது. இந்த படத்தை இயக்குனர் பாலாஜி கேசவன் இயக்கி உள்ளார். அசோக் செல்வனுக்கு ஜோடியாக அவந்திகா மிஸ்ரா நடித்துள்ளார்.

மேலும் எம்.எஸ். பாஸ்கர், ஊர்வசி, உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். காதல் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். கடைசியாக அசோக் செல்வன் நடிப்பில் வெளியான 'ப்ளூ ஸ்டார்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

நயனிடம் 3 வினாடிக்கு 10 கோடி கேட்ட நடிகர் தனுஷின் சொத்து மதிப்பு மட்டும் இத்தனை கோடியா?
 

கங்குவா நிலைமை என்ன?

ஏற்கனவே சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா 350 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட கங்குவா திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருவதால், வசூலும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அடுத்த வாரம் 6 படங்கள் வெளியாவது கங்குவா படத்தை திரையரங்குகளில் இருந்து வாஷ் அவுட் செய்து விடுமா என்கிற அச்சம் எழுந்துள்ளது. குறிப்பாக நவம்பர் 22-ஆம் தேதி, பிரபு தேவா, அதர்வா, மற்றும் அசோக் செல்வன் போன்ற நடிகர்களின் படங்கள் திரையரங்கில் வரிசை கட்ட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Latest Videos

click me!