இதுக்கா இவ்ளோ பில்டப்பு; கிரிஞ்சா இருக்கு! நயன்தாராவின் ஆவணப்பட விமர்சனம் இதோ

First Published | Nov 18, 2024, 1:47 PM IST

நெட்பிளிக்ஸில் நயன்தாராவின் ஆவணப்படம் வெளியாகி உள்ள நிலையில், அதைப்பார்த்த ரசிகர்கள் ட்விட்டரில் பதிவிட்டு வரும் விமர்சனங்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Nayanthara, Vignesh Shivan

நடிகை நயன்தாரா இன்று தனது 40வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவரது பிறந்தநாள் ஸ்பெஷலாக அவரின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகி இருக்கும் ஆவணப்படம் ஒன்று நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகி உள்ளது. அந்த ஆவணப்படத்தில் திரையுலகில் தான் சந்தித்த சவால்கள், காதல் தோல்வி, கல்யாணம் என அனைத்தை பற்றியும் பேசி இருக்கிறார் நயன்தாரா. இந்த ஆவணப்படத்தை இயக்குனர் கெளதம் மேனன் இயக்கி உள்ளார்.

Nayanthara Beyond The Fairy Tale

நயன்தாராவிற்கு கடந்த 2022-ம் ஆண்டு விக்னேஷ் சிவன் உடன் திருமணம் ஆனது. அப்போதே இந்த ஆவணப்படமும் எடுத்து முடிக்கப்பட்டது. இருப்பினும் தனுஷிடம் இருந்து நானும் ரெளடி தான் பட பாடல்களை ஆவணப்படத்தில் பயன்படுத்த தடையில்லா சான்று கிடைக்காததால், கடந்த 2 ஆண்டுகளாக இந்த ஆவணப்படம் ரிலீஸ் செய்யப்படாமல் இருந்தது. இந்த நிலையில், பல்வேறு தடைகளை தாண்டு இன்று நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நயன்தாராவின் ஆவணப்படம் ஸ்டிரீம் ஆகி வருகிறது. இந்த ஆவணப்படம் 1 மணிநேரம் 22 நிமிடம் ஓடக்கூடியது ஆகும். இதைப்பார்த்தவர்கள் தங்கள் விமர்சனங்களை எக்ஸ் தளத்தில் பதிவிட்ட வண்ணம் உள்ளனர். அதைபற்றி பார்க்கலாம்.

இதையும் படியுங்கள்... ஆக்‌ஷனில் நயன்தாரா – குடிசையில் இருந்துட்டு குழந்தைக்கான போராட்டம்; இதோ வந்துட்டால ராக்காயி - டீசர் அவுட்!

Latest Videos


Nayanthara Beyond The Fairy Tale Review

நயன்தாராவின் ஆவணப்படம் மிகவும் அருமையாக உள்ளது. அதில் தன் சந்தோஷத்தையும் காதலையும் நம் அனைவரிடமும் பகிர்ந்துள்ளார் நயன்தாரா. ஆனால் ஒரு ஆவணப்படமாக அதை இன்னும் மெருகேற்றி எடுத்திருக்கலாம். குறிப்பாக விவரிக்கும் காட்சிகளிலும், எடிட்டிங்கிலும் கவனம் செலுத்தி இருக்கலாம் என பதிவிட்டுள்ளார்.

நயன்தாராவின் ஆவணப்படம் முதல் பாதி நன்றாக இருந்தாலும், இரண்டாம் பாதி கிரிஞ்சான காட்சிகளுடன் உள்ளது. எமோஷனல் சீன்கள் பெரியளவில் கனெக்ட் ஆகவில்லை. இதில் எந்தவித ட்விஸ்ட்டும் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.

Nayanthara Beyond The Fairy Tale Twitter Review

நயன்தாரா ஆவணப்படம் முதல் பாதி நல்லா இருக்கு, இரண்டாம் பாதி கிரிஞ்சா இருக்கு என பதிவிட்டுள்ளார். அதேபோல் மற்றொருவர் போட்டுள்ள பதிவில், நயன்தாராவின் சினிமா கெரியர் மற்றும் அவரின் காதல் வாழ்க்கை பற்றிய ஆவணப்படமாக இது உள்ளது. நன்றாக தொடங்கினாலும் கடைசி 40 நிமிடங்கள் ஓகே ரகம் தான். நயன்தாரா உடன் பணியாற்றிய அனுபவம் பற்றி நாகார்ஜுனாவும் நெல்சனும் பேசி உள்ளது அருமையாக உள்ளது. மொத்தத்தில் இந்த ஆவணப்படம் ஓகே ரகம் தான் என குறிப்பிட்டிருக்கிறார்.

Nayanthara Beyond The Fairy Tale X Review

நயன்தாராவின் திரைப்பயணம், குடும்பம், அவர் சந்தித்த கஷ்டங்கள், அவரின் நட்சத்திர அந்தஸ்து, ரிலேஷன்ஷிப், கல்யாணம், குழந்தைகள் அடங்கிய ஆவணப்படம் இது. 37 நிமிடம் வரை சூப்பராக இருக்கிறது. எப்போ விக்னேஷ் சிவன் உள்ளே வந்தாரோ கிரிஞ்ச் ஆரம்பித்துவிட்டது. குறிப்பாக மொத்த திருமணமும் நெட்பிளிக்ஸிற்காக பிளான் பண்ணி எடுக்கப்பட்டது போல் உள்ளது. அது கல்யாணம் போல தெரியவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

முதல் பாதி சூப்பர், இரண்டாம் பாதி சுமார். ஃபேமிலி காட்சிகளும், சினிமா பயணம் பற்றியதும் பிளஸ் ஆக உள்ளது. கிரிஞ்சான காதல் காட்சிகள் மற்றும் எமோஷனே இல்லாத திருமணம் ஆகியவை மைனஸாக உள்ளது என பதிவிட்டுள்ளார்.

Nayanthara Beyond The Fairy Tale Netizens Reaction

நயன் தாராவின் ஆவணப்படம் ஆரம்பமே கிரிஞ்சா இருக்கு, கொஞ்சம் கூட ஒட்டல இதுல டப்பிங் கொடுமைகள் வேற இருப்பதாக பதிவிட்டிருக்கிறார். மற்றொருவர் போட்டுள்ள பதிவில் தன் திருமணத்தை வைத்து லாபம் பார்ப்பது வித்தியாசமான பிசினஸ் மைண்டாக உள்ளது என விமர்சித்துள்ளார்.

இதையும் படியுங்கள்... ஏன் நயன்தாராவை மட்டும் எல்லொருமே கொண்டாடுறாங்க? எப்படி ஹீரோயினுக்கான கதை ஒர்க் அவுட்டாவுது?

click me!