ஏன் நயன்தாராவை மட்டும் எல்லோருமே கொண்டாடுறாங்க? எப்படி ஹீரோயினுக்கான கதை ஒர்க் அவுட்டாவுது?
Nayanthara Birthday Special : ஏன் நயன்தாராவை மட்டுமே எல்லோருமே கொண்டாடுறாங்க, எப்படி அவர் மட்டும் ஹீரோயினுக்கான கதையை கச்சிதமாக தேடி பிடித்து நடித்து ஹிட் கொடுக்கிறார் என்று இந்த தொகுப்பில் காணலாம்.
Nayanthara 40th Birthday, Nayanthara Birthday Special
Nayanthara Birthday Special : நயன்தாராவின் 40ஆவது பிறந்தநாளான இன்று அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். ஐயாவில் வெகுளியான கதாபாத்திரத்தில் நடித்து தான் காதலித்தவனையே கரம் பிடிக்கும் ஒரு அப்பாவி வெகுளியான ரோலில் நடித்து இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்டவர் நயன்தாரா. படத்திலுள்ள பாடல் வரிகளும் காதலிக்கும் இளம் ஜோடிகளின் மனதை புரிந்து கொள்ளும் வகையிலே இருந்தது.
Nayanthara in Tamil Cinema, Nayanthara Birthday Special
படத்தின் கதையும், நயன்தாராவின் நடிப்பும் அவரை பட்டி தொட்டியெங்கும் பிரபலமாக்கியது. ஐயா கொடுத்த அமோக வரவேற்புக்கு பிறகு ரஜினிகாந்தின் சந்திரமுகி படத்தில் நடித்தார். இந்தப் படத்தில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தார். ஒரு அறிமுக நடிகைக்கு முதல் 2 படமே சூப்பர் டூப்பர் ஹிட் கொடுக்க, கோலிவுட்டில் கொடி கட்டி பறக்க தொடங்கினார்.
Nayanthara Filmography, Nayanthara Birthday Special
ஈ, தலைமகன் ஆகிய படங்கள் எதிர்மறை விமர்சனங்களை பெற்றாலும் வல்லவன் படம் ஹிட் கொடுத்தது. யாரடி நீ மோகினி, ராஜா ராணி, தனி ஒருவன் ஆகிய படங்கள் நயன்தாராவின் மார்க்கெட்டை டாப் லெவலுக்கு உயர்த்தியது. மாயா, நானும் ரௌடி தான், இது நம்ம ஆளு, டோரா, அறம், கோலமாவு கோகிலா, ஐரா, கொலையுதிர் காலம், மூக்குத்தி அம்மன், நெற்றிக்கண் என்று ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை தேர்வு செய்து ஹிட் கொடுத்தார்.
Nayanthara Heroine Based Movies, Nayanthara Birthday Special
ஒவ்வொரு படைப்பும் தரமான படைப்புகள். அவர் கதை தேர்வுக்கு முக்கிய காரணம் அவரது கணவர் விக்னேஷ் சிவன். அவரது கதை தேர்வு தான் நயன்தாராவை இந்த அளவிற்கு கொண்டு வந்துள்ளது. ஹீரோவுக்கு நிகராக சம்பளம் வாங்குகிறார். வருடத்திற்கு 3, 4 படங்களில் நடித்து ஹிட் கொடுத்து வருகிறார். ஒவ்வொரு படத்திற்கும் ரூ.8 முதல் ரூ.12 கோடி வரையில் சம்பளம் வாங்குகிறார்.
Actress Nayanthara Upcoming Movies, Nayanthara Birthday Special
தமிழ் சினிமாவில் வேறு எந்த நடிகையும் இவ்வளவு சம்பளம் வாங்கியதாக சரித்திரமே இல்லை. கடந்த சில படங்கள் ஹிட் கொடுக்கவே இப்போது தான் த்ரிஷாவும் ரூ.12 கோடி வரையில் சம்பளம் வாங்க தொடங்கியிருக்கிறார். கீர்த்தி சுரேஷ், ராஷ்மிகா மந்தனா எல்லாம் குறைவான சம்பளம் தான் வாங்குகிறார்கள்.
Nayanthara Movies, Nayanthara Birthday Special
ரஜினிக்கு ஜோடியாக நடித்த நடிகைகளின் பட்டியலில் நயன் தாரா தான்நம்பர் 1 இடத்தில் இருப்பார். சந்திரமுகி, அண்ணாத்த, சிவாஜி, தர்பார், குசேலன் ஆகிய படங்களில் ரஜினியுடன் இணைந்து நடித்துள்ளார். 2024ல் இதுவரையில் நயன்தாரா நடிப்பில் ஒரு படமும் வெளியாகாத நிலையில் டிசம்பரில் டெஸ்ட் மற்றும் மன்னாங்கட்டி படம் வெளியாக இருப்பதாக சொல்லப்படுகிறது.
Nayanthara Tamil Movies, Nayanthara Birthday Special
இந்த நிலையில் தான் தற்போது செந்தில் நல்லசாமி இயக்கத்தில் உருவாகி வரும் ராக்காயி படத்தில் நடித்து வருகிறார். நயன்தாராவின் 40ஆவது பிறந்தநாளை முன்னிட்டு ராக்காயி படத்தின் டைட்டில் டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்தப் படத்தில் நயன்தாரா ஆக்ஷன் காட்சியில் நடித்து வருகிறார். இதுவரையில் இப்படியொரு கதாபாத்திரத்தில் நயன்தாரா நடித்ததே இல்லை.
Nayanthara Tamil Cinema, Nayanthara Birthday Special
அதுவும் ஆக்ஷன் காட்சி. ஒரு பச்சிளம் குழந்தைக்கு அம்மா வேறு. குடிசையில் வாழ்வதற்காகவும், தனது மகளின் எதிர்காலத்திற்காகவும் போராடும் ஒரு கதாபாத்திரம். ராக்காயி டீசரை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த நயன்தாரா நீதி மட்டுமே நினைவாக இருக்கும் நாட்டில் தன் குழந்தையே உலகம் என்று ஒரு தாய் வாழ்ந்தாள்.
Nayanthara Rakkayie Title Teaser, Nayanthara: Beyond the Fairy Tale
ஆனால், ஒரு அரக்கனால் தன் மகளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்ட போது அந்த தாய் தளருவதில்லை, ஓடுவதில்லை. மாறாக அவள் அந்த அரக்கனை எதிர்த்து போராடுகிறாள். இது அனைத்தும் இந்த ராக்காயி டீசரில் காண முடிகிறது. பின்னணி இசையுடன் கூடிய இந்த டீசரை பார்க்கும் போது பிரம்மிக்க வைப்பதோடு மெய்சிலிர்க்கவும் செய்கிறது. அதோடு ராக்காயி படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் தூண்டியுள்ளது.
Nayanthara: Beyond the Fairy Tale, Nayanthara Birthday Special, Nayanthara Rakkayie Title Teaser
இவ்வளவு பெரிய நடிகையாக இருந்தாலும் உச்சத்தில் இருந்த போதிலும் திறமையின் மூலமாக முன்னுக்கு வந்த நயன்தாராவிற்காக ரசிகர்கள் கோயில் கட்ட முடிவு செய்த போது அதெல்லாம் செய்ய கூடாது. கடவுளை மிஞ்சியது இந்த உலகத்தில் எதுவுமில்லை. தன்னை கடவுளுக்கு நிகராக ஒப்பிடக் கூடாது என்று கூறி கோயில் கட்டுவதற்கு மறுப்பு தெரிவித்திருக்கிறார். இப்படியொரு மனசு வேறு எந்த நடிகைக்கும் வராது. இன்று அவரது பிறந்தநாளை முன்னிட்டு நயன் தாராவின் ஆவணப்படமான Nayanthara: Beyond the Fairy Tale ஓடிடி தளமான நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ளது.