அட 6 மாதத்தில் 3வது படமும் ஓகே பண்ணிட்டாரே; சுந்தர் சி இயக்கத்தில் உருவாகும் "பார்ட் 3"!

First Published | Nov 18, 2024, 5:36 PM IST

Sundar C : சுந்தர் சி இயக்கத்தில் இந்த ஆண்டு மே மாதம் வெளியான அரண்மனை படத்தின் 4ம் பாகம் பெரும் வெற்றி திரைப்படமாக மாறியது.

Sundar C

தமிழ் சினிமாவில் "முறை மாமன்" திரைப்படத்தின் மூலம் இயக்குனராக களமிறங்கியவர் தான் சுந்தர் சி. தமிழ் திரை உலகை பொறுத்தவரை கமர்சியல் திரைப்படங்களின் கிங் என்று சொல்லும் அளவிற்கு பல மெகா ஹிட் திரைப்படங்களை கொடுத்தவர் இவர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் "அருணாச்சலம்", உலக நாயகன் கமல்ஹாசனின் "அன்பே சிவம்". ஆண்டுகள் பல கடந்தும் இன்றளவும் காமெடிக்கு என்று பெரிய அளவில் பேசப்படும் "வின்னர்" என்று, இப்படி சுந்தர் சி இயக்கத்தில் வெளியான பல திரைப்படங்கள் தமிழ் திரையுலகில் ஐகானிக் திரைப்படங்களாக மாறியிருக்கிறது. இயக்குனராக மட்டுமல்லாமல் ஒரு சிறந்த நடிகராகவும் அவர் தமிழ் சினிமாவில் பயணித்து வருகிறார். இந்த சூழலில் தான் இந்த ஆண்டு தொடக்கத்தில் தன்னுடைய அரண்மனை படத்தின் நான்காம் பாகத்தை அவர் வெளியிட்டார்.

மன நெகிழ்வுடனும்.. கனத்த இதயத்துடனும்; இயக்குனர் பாலா பற்றி எமோஷ்னலாக உருகிய அருண் விஜய்!

Murai Maman

ஏற்கனவே அரண்மனை திரைப்படத்தின் மூன்று பாகங்கள் வெளியான நிலையில் இந்த 2024 ஆம் ஆண்டு தொடக்கத்தில் அந்த படத்தின் நான்காம் பாகத்தை வெளியிட்டு பெரிய அளவில் வெற்றியும் கண்டார் அவர். இந்த சூழலில் அரண்மனை 4 திரைப்படத்தை முடித்த பிறகு ஒன் டூ ஒன் மற்றும் வல்லன் ஆகிய திரைப்படங்களில் நடிராக அவர் நடித்து வரும் அதே நேரம், பிரபல நடிகை நயன்தாராவை வைத்து மூக்குத்தி அம்மன் படத்தின் இரண்டாம் பாகத்தை அவர் இயக்க ஆயத்தமானார். ஏற்கனவே இந்த திரைப்படத்தின் முதல் பாகத்தை ஆர் ஜே பாலாஜி இயக்கியிருந்தது குறிப்பிடதக்கது.

Tap to resize

Anbe Sivam

இது ஒரு புறம் இருக்க தமிழ் சினிமாவில் மாமன்னன் திரைப்படத்திற்கு பிறகு ஒரு மிகச்சிறந்த என்ட்ரி கொடுக்க காத்திருக்கும் வடிவேலுவை வைத்து "கேங்கர்ஸ்" என்கின்ற திரைப்படத்தையும் அவர் இயக்கி முடித்திருக்கிறார். இந்த இரண்டு திரைப்படங்களும் இன்னும் வெளியாகவில்லை என்றாலும் அப்படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இப்படி அரண்மனை திரைப்படத்தை முடித்த 6 மாதத்தில் இரண்டு திரைப்பட பணிகளில் இயக்குனராக பணியாற்றி வரும் சுந்தர் சி, மூன்றாவது திரைப்பட பணிகளையும் விரைவில் துவங்குகிறார்.

Kalakalapu 3

இதுகுறித்து சுந்தர் சி-யின் மனைவியும் பிரபல நடிகையுமான குஷ்பு வெளியிட்டுள்ள ஒரு பதிவில், ஏற்கனவே சுந்தர் சி இயக்கத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு உருவான "கலகலப்பு" மற்றும் 2018 ஆம் ஆண்டு வெளியான "கலகலப்பு 2" ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து கலகலப்பு படத்தின் மூன்றாம் பாகத்தை அவர் விரைவில் இயக்க உள்ளதாகவும், வழக்கம்போல விமல் மற்றும் மிர்ச்சி சிவா இந்த திரைப்படத்தில் நடிக்க உள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார் குஷ்பூ.

கங்குவாவை ஒரே வாரத்தில் வாஷ் அவுட்டாக்க நவம்பர் 22-ஆம் தேதி வெளியாகும் 6 படங்கள்!

Latest Videos

click me!