நடிகை ரம்யா பாண்டியனுக்கு நவம்பர் 9-ஆம் தேதி திருமணம் நடந்து முடிந்த நிலையில், தற்போது தன்னுடைய கணவருடன் திருசெந்தூர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை என்கிற இடத்தை பிடிக்க முடியவில்லை என்றாலும், விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி, பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடியதன் மூலம் அதிகம் பிரபலமானார். அதே போல் அடிக்கடி, விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர்.
24
Ramya Pandian Vist Thiruchendur temple
திரைப்படங்கள் பெரிதாக இவருக்கு கைகொடுக்கவில்லை என்றாலும், சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்ட்டிவாக இருந்து வந்தார். மேலும் இவரை 2 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலாவேர்ஸ் பின்தொடர்ந்து வருகின்றனர். ரம்யா பாண்டியன் லோவல் தவான் என்பவரை திருமணம் செய்து கொண்டு, தற்போது வடநாட்டு மருமகளாக மாறியுள்ள நிலையில், இவருடைய திருமணம் ரிஷிகேஷில் உள்ள கங்கை நதிக்கரையில் உள்ள கோவிலில் நடந்தாலும் சென்னையில் ரிசப்ஷன் ஏற்பாடு செய்யப்பட்டது.
அந்த வகையில், ரம்யா பாண்டியன் மற்றும் லோவல் தவான் திருமண ரிசாப்ட்டின் கடந்த 15-ஆம் தேதி சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடந்து முடிந்தது. இதில் ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்தி இருந்தனர்.
44
Ramya Pandian Meet Soori
இதை தொடர்ந்து ரம்யா பாண்டியன், தன்னுடைய கணவர் லோவல் தவானுடன்... திருசெந்தூர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. மேலும் இன்றைய தினம் நடிகர் சூரியும், திருசெந்தூர் கோவிலுக்கு சென்றுள்ள நிலையில், ரம்யா - லோவல் இருவரும் சூரியை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளனர். இதுகுறித்த புகைப்படங்களும் வெளியாகியுள்ளது.