வெளியாகி 4 நாள் ஆச்சு; இந்த சூழலில் கத்திரி போடப்பட்ட கங்குவா - ஏன் இந்த திடீர் முடிவு?

Ansgar R |  
Published : Nov 18, 2024, 08:41 PM IST

Kanguva Trimmed : நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த நவம்பர் 14ம் தேதி வெளியான கங்குவா திரைப்படத்தில் சில காட்சிகளுக்கு கத்திரி போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

PREV
14
வெளியாகி 4 நாள் ஆச்சு; இந்த சூழலில் கத்திரி போடப்பட்ட கங்குவா - ஏன் இந்த திடீர் முடிவு?
Kanguva

இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமாக மாறியது பிரபல நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த நவம்பர் 14ஆம் தேதி வெளியான கங்குவா என்கின்ற திரைப்படம். இந்த திரைப்படம் வெளியாவதற்கு முன்பே நடிகர் சூர்யா, இயக்குனர் சிறுத்தை சிவா மற்றும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா உள்ளிட்ட பலரும் இப்படத்தின் சிறப்பு விஷயங்கள் குறித்து பல மேடைகளில் பேசி இருந்தார்கள். ஞானவேல் ராஜா இந்த திரைப்படம் உலக அளவில் கண்டிப்பாக குறைந்தது 2000 கோடி வரை வசூல் செய்யும் என்று கூறியிருந்தார். ஆனால் படம் வெளியான முதல் நாளிலேயே தொடர்ச்சியாக பல நெகட்டிவ் விமர்சனங்கள் வந்த நிலையில் மூன்று நாள் முடிவுக்கு பிறகு தான் கங்குவா திரைப்படம் 120 கோடி ரூபாயை எட்டியது குறிப்பிடத்தக்கது.

பிறப்பிலேயே கோல்டன் ஸ்பூன்! சர்ச்சையில் சிக்கி கைதான நடிகை கஸ்தூரியின் சொத்து மதிப்பு எவ்வளவு?

24
Kanguva Collection

ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில் பிரபல நடிகர் சூர்யாவின் திரை வரலாற்றிலேயே கிட்டத்தட்ட 450 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான முதல் திரைப்படம் கங்குவா என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் தொடக்கம் சற்று தொய்வை தருகிறது என்றும், இன்னும் கொஞ்சம் சிறப்பான வகையில் சிறுத்தை சிவா திரைக்கதையை அமைத்திருக்கலாம் என்றும் பல இடங்களில் தேவி ஸ்ரீ பிரசாதின் இசை காதுகளை காயப்படுத்துகிறது என்றும் விமர்சனங்கள் எழுந்து வந்தது. இருப்பினும் தனி ஒரு ஆளாக நடிகர் சூர்யா இந்த படத்தை தன் தோளில் சுமந்து சென்றிருக்கிறார் என்று அவருடைய ரசிகர்களும் பெரிய அளவில் பாராட்டி வந்தனர்.

கங்குவா திரைப்படத்திற்கு வந்த எதிர்மறையான விமர்சனங்களை எதிர்த்துப் பேசிய ஜோதிகாவும் படத்தில் குறைகள் இருப்பதை ஒப்புக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

34
Gnanavel Raja

இந்த இக்கட்டான சூழலில் கடந்த 14ஆம் தேதி வெளியான கங்குவா திரைப்படம் கிட்டத்தட்ட 4 நாட்கள் திரையரங்குகளில் ஓடி உள்ள நிலையில், சுமார் 12 நிமிட காட்சிகள் கத்தரி போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆகவே தற்போது மீண்டும் தணிக்கை செய்யப்பட்டு இரண்டு மணி நேரம் 22 நிமிடங்கள் திரைப்படம் ஓடும் வண்ணம் இப்போது மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகி இருக்கிறது. பெரும்பாலும் நிகழ்காலத்தில் வரும் சூர்யாவின் கதாபாத்திரங்கள் தான் பெரிய அளவில் கத்திரி போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இசையும் ஏற்கனவே இரண்டு புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த திடீர் முடிவு ஏன் எடுக்கப்பட்டது என்று குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

கணவரோடு திருசெந்தூர் போன ரம்யா பாண்டியன்.! எதிர்பாராமல் கிடைத்த பிரபலத்தின் வாழ்த்து!

44
Kanguva Trimmed

கங்குவா திரைப்படத்தின் மீது பெரிய அளவில் நடிகர் சூர்யா நம்பிக்கை வைத்திருந்த நிலையில் தொடர்ச்சியாக வெளியாகும் நெகட்டிவ் விமர்சனங்களாலும் பிற விஷயங்களாலும் பெரிய அளவில் கங்குவா திரைப்படம் வசூல் சாதனை புரியுமா என்பது சந்தேகத்திற்கு இடமாக மாறி இருக்கிறது. இருப்பினும் கடந்த தீபாவளி திருநாளுக்கு வெளியான நடிகர் சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படம் மூன்றாவது வாரத்தில் சிறந்த முறையில் பல இடங்களில் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடி வருவது குறிப்பிடத்தக்கது.

Read more Photos on
click me!

Recommended Stories