ரஜினி பிறந்தநாளன்று திருமணம்; 15 வருஷமா கீர்த்தி சுரேஷ் உருகி உருகி காதலிச்சவரின் போட்டோ லீக்கானது

First Published | Nov 19, 2024, 7:42 AM IST

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷுக்கு வருகிற டிசம்பர் மாதம் 12-ந் தேதி திருமணம் நடைபெற உள்ளதாம்.

keerthy suresh

தயாரிப்பாளர் சுரேஷ் மேனன் - நடிகை மேனகா தம்பதிக்கு மகளாக பிறந்தவர் தான் கீர்த்தி சுரேஷ். இவர் தமிழ் சினிமாவில் இது என்ன மாயம் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். இதையடுத்து தனுஷ் ஜோடியாக தொடரி, சிவகார்த்திகேயன் உடன் ரஜினிமுருகன், ரெமோ போன்ற படங்களில் நடித்து பாப்புலர் ஆனார். குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகையாக உயர்ந்த கீர்த்தி தொடர்ந்து விஜய் ஜோடியாக பைரவா, சர்க்கார் என இரண்டு படங்களில் நடித்து டாப் ஹீரோயினாக உயர்ந்தார்.

Keerthy suresh Marriage Update

இதையடுத்து மகாநடி படம் மூலம் டோலிவுட்டுக்கு சென்ற கீர்த்திக்கு, அந்த படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் கிடைத்தது. அப்படத்திற்கு முன்னர் வரை கமர்ஷியல் ரூட்டில் பயணித்து வந்த கீர்த்தி சுரேஷ், திடீரென ரூட்டை மாற்றி ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள பெண்குயின், சாணிக் காயிதம் போன்ற படங்களை தேர்வு செய்து நடித்தார். தற்போது தமிழில் இவர் நடிப்பில் ரிவால்வர் ரீட்டா என்கிற திரைப்படம் உருவாகி வருகிறது.

இதையும் படியுங்கள்... சிரஞ்சீவி வீட்டுக்கு ஆர்டர் போட்ட நடிகை கீர்த்தி சுரேஷ்; எதுக்கு தெரியுமா?

Tap to resize

Keerthy Suresh Wedding Date

இதுதவிர பேபி ஜான் என்கிற படம் மூலம் பாலிவுட்டிலும் ஹீரோயினாக அறிமுகம் ஆக இருக்கிறார் கீர்த்தி சுரேஷ். இப்படத்தில் வருண் தவானுக்கு ஜோடியாக நடித்துள்ளார் கீர்த்தி. இப்படத்தை அட்லீ தயாரித்துள்ளார். இப்படம் தமிழில் விஜய் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன தெறி படத்தின் இந்தி ரீமேக் ஆகும். இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. அதன்படி இப்படம் வருகிற டிசம்பர் மாத இறுதியில் கிறிஸ்துமஸ் விடுமுறையில் திரைக்கு வர உள்ளது.

Keerthy Suresh Love Marriage

நடிகைகள் என்றாலே அவர்களை சுற்றி கிசுகிசுக்கள் உலா வருவது வழக்கம் தான். அந்த வகையில் கீர்த்தி சுரேஷ் ஏராளமான காதல் சர்ச்சைகளில் சிக்கி இருக்கிறார். குறிப்பாக இசையமைப்பாளர் அனிருத் உடன் கீர்த்தி எடுத்துக் கொண்ட புகைப்படம் வெளியானபோது இருவரும் காதலிப்பதாக பரவலாக பேசப்பட்டது. ஆனால் இந்த சர்ச்சைகளுக்கெல்லாம் கீர்த்தி சுரேஷின் குடும்பத்தார் எண்டு கார்டு போட்டனர்.

keerthy suresh Lover Antony Thattil

இந்த நிலையில் தற்போது கீர்த்தி சுரேஷ் நிஜமாகவே திருமணம் செய்துகொள்ள இருக்கிறார். அவரின் திருமண வேலைகள் சைலண்டாக நடைபெற்று வருகின்றன. வருகின்ற டிசம்பர் 12ந் தேதி தான் கீர்த்தியின் திருமணம் நடைபெற உள்ளது. அவர் தன்னுடைய நீண்ட நாள் காதலனான ஆண்டனி தட்டில் என்பவரை தான் கரம்பிடிக்க உள்ளாராம். இருவரும் 15 ஆண்டுகளாக காதலித்து வருகிறார்களாம். இவர்களது திருமணம் கோவாவில் நடைபெற உள்ளதாம். கீர்த்தி சுரேஷின் காதலன் பிசினஸ்மேன் என்றும் கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை கீர்த்தியே வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்... தலையில் வெள்ளை ரிப்பன்... ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட் அழகில் மின்னும் கீர்த்தி சுரேஷ் போட்டோஸ்!

Latest Videos

click me!