கங்குவா கொடுத்த அடியால் உஷாரான சூர்யா; கார்த்திக் சுப்புராஜுக்கு பறந்த உத்தரவு!

First Published | Nov 19, 2024, 10:46 AM IST

கங்குவா படத்திற்கு கடுமையான எதிர்மறை விமர்சனங்கள் வருவதால் அதிரடி முடிவெடுத்துள்ள சூர்யா, கார்த்திக் சுப்புராஜுக்கு உத்தரவு ஒன்றை போட்டுள்ளாராம்.

suriya, Karthik Subburaj

நடிகர் சூர்யா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவான படம் கங்குவா. இப்படத்தை சுமார் 350 கோடி பட்ஜெட்டில் தயாரித்து இருந்தனர். சிறுத்தை சிவா இப்படத்தை இயக்கி இருந்தார். இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். கங்குவா திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த நவம்பர் 14-ந் தேதி திரைக்கு வந்தது. பான் இந்தியா படமாக ரிலீஸ் ஆன இப்படம் ரிலீஸ் ஆன முதல் நாளே சரமாரியான நெகடிவ் விமர்சனங்களை சந்தித்தது. சோசியல் மீடியா முழுக்க கங்குவா படத்தை ட்ரோல் செய்து மீம்ஸ்களும் அதிகம் பகிரப்பட்டன.

suriya

கங்குவா படம் இந்த அளவுக்கு ட்ரோல் செய்யப்பட்டதற்கு காரணம், அப்படத்தின் ரிலீசுக்கு முன் கொடுக்கப்பட்ட பில்டப் தான். படம் நெருப்பு மாதிரி இருக்கும் என சூர்யா ஒரு பக்கம் பில்டப் கொடுக்க, மறுபக்கம் படம் 2 ஆயிரம் கோடி வசூல் செய்யும் என நம்புவதாக தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பில்டப் கொடுக்க, இதுபோதாதென்று இயக்குனர் சிறுத்தை சிவா, ஹாலிவுட் படங்களோடு ஒப்பிட்டு பேசி பில்டப் கொடுத்தது தான் அப்படத்தை இந்த அளவுக்கு ட்ரோல் செய்வதற்கு முக்கிய காரணமாக அமைந்தது.

இதையும் படியுங்கள்... வெளியாகி 4 நாள் ஆச்சு; இந்த சூழலில் கத்திரி போடப்பட்ட கங்குவா - ஏன் இந்த திடீர் முடிவு?

Tap to resize

Suriya next Movie

கங்குவா திரைப்படம் பட்ஜெட்டில் பாதிகூட வசூலிப்பதே கஷ்டம் தான் என கோலிவுட் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது. தமிழ் சினிமாவில் மிகப்பெரிய தோல்விப் படமாக கங்குவா அமைய அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. கங்குவா படத்தின் ரிசல்டால் கடும் அப்செட்டில் இருக்கும் நடிகர் சூர்யா, தன்னுடைய அடுத்த பட இயக்குனரான கார்த்திக் சுப்புராஜுக்கு அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்து உள்ளதாக கூறப்படுகிறது.

Suriya 44 Movie

அது என்னவென்றால், படத்தின் ரிலீசுக்கு முன்னர் படத்தை பற்றி ஆஹா ஓஹோ என ஓவர் ஹைப் கொடுக்க வேண்டாம் என்பது தான். ஏனெனில் கங்குவா படத்திற்கு அப்படி பில்டப் கொடுத்து தான் தற்போது படாதபாடு பட்டுகொண்டிருக்கும் சூர்யா, தன்னுடைய தயாரிப்பில் உருவாகி இருக்கும் சூர்யா 44 படத்திற்கும் அதே நிலை வந்துவிடக் கூடாது என்பதை கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. சூர்யா 44 திரைப்படம் அடுத்த ஆண்டு மே மாதம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்... முடிச்சிட்டீங்க போங்க.. கங்குவா டீம் செய்த அதே தப்பு.. அதிர்ச்சியில் ‘புஷ்பா 2’ படக்குழு!

Latest Videos

click me!